என் மலர்

  நீங்கள் தேடியது "20 rupees"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. #RBI #20Rupees #Denomination
  மும்பை:

  பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு இழப்பு செய்யப்பட்ட பிறகு புதிய 500, 2000, 100, 50, 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில் தற்போது புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான மாதிரி ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது.

  புதிய 20 ரூபாய் நோட்டு பச்சை, மஞ்சள் நிறம் கலந்து காணப்படும். அதில் மகாத்மா காந்தி படமும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கையெழுத்தும் இடம்பெறும். நோட்டின் மறுபக்கம் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் எல்லோரா குகைக்கோவில் தோற்றம் இடம் பெறுகிறது. புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய 20 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.  #RBI #20Rupees #Denomination 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல்லோரா ஓவியம், காந்தி படத்துடன் வெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. #NewBankNote #Rs20BankNote #RBIboard

  சென்னை:

  தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ. 100, ரூ.50, ரூ.20 ஆகிய நோட்டுகளில் புதிய வண்ணத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.

  அதன்படி ரூ.100, ரூ.50 புதிய நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் வெளியிட்டுவிட்டது.

  தற்போது ரூ.20 புதிய நோட்டையும் ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. பச்சையும், மஞ்சளும் கலந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் இந்த நோட்டு உள்ளது.


  ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திசாந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. மறு பக்கம் நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் எல்லோரா குகை ஓவியம் இடம் பெற்றுள்ளது. மேலும் எல்லா ரூபாய் நோட்டுக்களும் இருப்பது போல் தமிழ் உள்பட 15 மொழிகளில் 20 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது.

  இந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்துக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. புதிய நோட்டுக்கள் வெளியிட்டாலும் பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். #NewBankNote #Rs20BankNote #RBIboard

  ×