search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "16 candidates"

    புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள வி.ஹெச்.பி. முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா, பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் போட்டியிடவுள்ள 16 தொகுதிகளை இன்று அறிவித்தார். #LSpolls #PravinTogadia #HinduSthanNirmanDal
    லக்னோ:

    வி.ஹெச்.பி. முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் பிரவீன் தொகாடியா. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீரவேண்டும் என பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தவர்.

    இதற்கிடையே, பிரவீன் தொகாடியா புதிய அரசியல் கட்சியை டெல்லியில் கடந்த மாதம் தொடங்கினார். தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தொகாடியா இந்துஸ்தான் நிர்மாண் தளம் என்ற புதிய அரசியல் கட்சியை அறிவித்தார்.
     
    இந்நிலையில், புதிய அரசியல் கட்சி தொடங்கிய பிரவீன் தொகாடியா, பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் போட்டியிடவுள்ள 16 தொகுதிகளை இன்று அறிவித்தார். 

    இதுதொடர்பாக பிரவீன் தொகாடியா கூறுகையில், சாண்டவ்லி, அலிகார், கைரானா, பெரோசாபாத், பெரெய்லி, லக்மிபூர் கெரி, உன்னாவ், ஜான்சி, ஹமீர்பூர், பிரதாப்கர், பஸ்தி, லால்கஞ்ச், ஜான்பூர், படோனி மற்றும் சாலம்பூர் உள்ளிட்ட 16 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். மேலும், குஜராத் மாநிலத்தின் 9 தொகுதிகளிலும், ஒடிஷா மாநிலத்தின் 5 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம் என தெரிவித்துள்ளார். #LSpolls #PravinTogadia #HinduSthanNirmanDal
    மத்திய பிரதேசத்தில் தற்போதைய எம்எல்ஏக்கள் மற்றும் புதுமுகங்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. #MadhyaPradeshElections #Congress #CongressCandidatesList
    இந்தூர்:

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரஸ் தீவிர களப்பணியாற்றி வருகிறது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் நேற்று முன்தினம் 155 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.

    இந்நிலையில் 16 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளவர்கள் மற்றும் புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். 



    ஷியோபூர் மாவட்டம் விஜய்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ராம் நிவாஸ் ராவத் மீண்டும் போட்டியிடுகிறார். இதுதவிர மகேந்திர சிங் யாதவ், கோபால் சிங் சவுகான், விக்ரம் சிங் நதிராஜா மற்றும் பிரிஜேந்திர சிங் யாதவ் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சிவபுரி தொகுதியில் குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மாநில மந்திரி யசோத்ராஜா சிந்தியாவை எதிர்த்து புதுமுக வேட்பாளரான சித்தார்த் லடா (36)  நிறுத்தப்பட்டுள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியில் இதுவரை 171 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மத்தியப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. #MadhyaPradeshElections #Congress #CongressCandidatesList
    ×