என் மலர்

  நீங்கள் தேடியது "கேலக்ஸி எம்40"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில் 40,315 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
  • ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.


  பெரம்பலூர்:

  தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் நடந்தது.

  முகாம்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 14,356 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 25,959 பேருக்கும் என மொத்தம் 40,315 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.  சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டீசரை சாம்சங் தனது அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசானில் வெளியிட்டுள்ளது.

  இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா உள்ளிட்டவை புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன.   சாம்சங் எம் சீரிசில் நான்காவது மாடலாக கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

  இத்துடன் புதிய கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் சாம்சங் தனது வலைதளம் மற்றும் அமேசானில் வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.  ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் சார்ந்த ஒன் யு.ஐ. வழங்கப்படலாம்.

  இதுவரை சாம்சங் வெளியிட்ட எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் வழங்கப்பட்ட நிலையில், இவற்றுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கும் பணிகளை சாம்சங் துவங்கி இருக்கிறது.   முதற்கட்டமாக கேலக்ஸி எம்30 மாடலுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற இரு ஸ்மார்ட்போன்களுக்கு விரைவில் இந்த அப்டேட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  முந்தயை கேலக்ஸி எம் மாடல்களில் எக்சைனோஸ் பிராசஸர்கள் வழங்கப்பட்ட நிலையில், ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் வெளியாக இருக்கும் முதல் கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எம்40 இருக்கும். இத்துடன் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED ஸ்கிரீன், 128 ஜி.பி. மெமரி மற்றும் வைபை 802.11ac. கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.  சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 போன்ற ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இவற்றை தொடர்ந்து சாம்சங் மற்றொரு புதிய கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  கேலக்ஸி எம்40 என்ற பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வழக்கமாக சாம்சங் ஸ்மார்ட்போன்களில் எக்சைனோஸ் பிராசஸர் வழங்கப்படும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் அறிமுகமாகும் என தெரிகிறது.  இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா, 128 ஜி.பி. மெமரி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் இல் சாம்சங் அறிமுகம் செய்த ஃபிளாக்‌ஷிப் அம்சங்கள் புதிய கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என தெரிகிறது.

  அந்த வகையில் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் ஹோல்-இன்-டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  இந்தியாவில் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ.25,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனம் புதிதாக இரண்டு கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. #Samsung  சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ60 மற்றும் கேலக்ஸி ஏ40எஸ் என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சீனா மற்றும் ஹாங்காங்கில் அறிமுகம் செய்துள்ளது.

  இதில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. புகைப்படம் எடுக்க 32 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

  செல்ஃபி எடுக்க 16 எம்.பி. கேமரா, கிரேடியன்ட் பேக், பின்புறம் கைரேகை சென்சார், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.  சாம்சங் கேலக்ஸி ஏ60 சிறப்பம்சங்கள்:

  - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
  - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
  - அட்ரினோ 612 GPU
  - 6 ஜி.பி. ரேம்
  - 128 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
  - ஹைப்ரிட் டூயல் சிம்
  - 32 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
  - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
  - 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
  - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  - கைரேகை சென்சார்
  - யு.எஸ்.பி. டைப்-சி, டால்பி அட்மோஸ்
  - டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
  - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - ஃபாஸ்ட் சார்ஜிங்

  கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது கேமரா, 5 எம்.பி. 123° அல்ட்ரா வைடு லென்ஸ், பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.  சாம்சங் கேலக்ஸி ஏ40எஸ் சிறப்பம்சங்கள்:

  - 6.4 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
  - ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
  - மாலி-G71 GPU
  - 6 ஜி.பி. ரேம்
  - 64 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
  - டூயல் சிம்
  - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
  - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
  - 5 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா
  - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  - கைரேகை சென்சார்
  - டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத்
  - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - ஃபாஸ்ட் சார்ஜிங்

  சாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,685) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.15,510) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தம்போ நிறுவனம் இந்தியாவில் டி.ஏ.-40 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #smartphone  தம்போ நிறுவனம் தனது புது ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 

  இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட தம்போ டி.ஏ. 40 ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே, குவாட்-கோர் சிப்செட், 1 ஜி.பி.ரேம், 5 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

  பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் தம்போ டி.ஏ. 40 ஸ்மார்ட்போனில் 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.  தம்போ டி.ஏ. 40 சிறப்பம்சங்கள்:

  - 5.45 இன்ச் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே
  - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
  - 1 ஜி.பி. ரேம்
  - 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - டூயல் சிம் வசதி
  - ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ கோ எடிஷன்)
  - 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
  - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
  - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
  - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  தம்போ டி.ஏ. 40 ஸ்மார்ட்போன் புளு மற்றும் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #smartphone
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

  ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், எல்ஜி தொடர்ந்து வித்தியாசமான முடிவுகளின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் எல்ஜியின் வி40 ஸ்மார்ட்போனில் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இது ஆன்ட்ராய்டு போலீஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் எல்ஜி வி40 ஸ்மார்ட்போனில் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவதை விட இருமடங்கு அதிகம் என்ற வகையில் எல்ஜி தனது ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்களையும், முன்புறம் இரண்டு கேமராக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஹூவாய் P20 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க டூயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. எல்ஜி வி40 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் டூயல் முன்பக்க கேமரா கொண்டு ஃபேஸ் அன்லாக், 3D ஃபேஸ் மேப்பிங் சிறப்பானதாக இருக்கும்.


  கோப்பு படம்

  பின்புறம் மூன்று கேமராக்களில் ஒரு வழக்கமான லென்ஸ், வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் மூன்றாவது கேமரா கொண்டு போர்டிரெயிட், ட்ரூ மோனோக்ரோம் அல்லது லாஸ்லெஸ் சூம் படங்களை எடுக்க முடியும். இந்த அம்சம் சற்றே வித்தியாசமானதாக தெரிந்தாலும், இவை எவ்வாறு இயங்கும் என்பதும், எவ்வாறு பொருத்தப்படும் என்பதும் ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.

  எல்ஜி வி40 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்ற வகையில், வழக்கமான வி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குவாட்-DAC செட்டப், பல்வேறு உயர் ரக ஆடியோ ஃபார்மேட்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படும். சமீப காலங்களில் எல்ஜி-யின் ஜி சீரிஸ் மற்றும் வி சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் அம்சங்கள் மிகவும் நுனுக்கமாக மாற்றப்பட்டு இருக்கிறது.
  ×