என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளபாதிப்பு"

    • வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் உணவு குடிநீர் மருந்து கிடைக்காமல் அவதி.
    • ஹெலிகாப்டர் டிரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்தபலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியது.

    விஜயவாடா நகரப் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் உணவு குடிநீர் மருந்து கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஹெலிகாப்டர் டிரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து தண்ணீர் வடியத் தொடங்கி உள்ளது.

    இதனால் நிவாரண முகாம்களில் இருந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். வீடுகளுக்கு திரும்பிய மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்து இருப்பதைக் கண்டு கண்ணீர் வடித்தனர்.

    வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த கார் ஆட்டோ லாரி உள்ளிட்டவை 4 நாட்களாக தண்ணீரில் மூழ்கியதால் சேதம் அடைந்து உள்ளது.

    மேலும் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டு இருந்த பைக்குகள் மழை வெள்ளத்தில் அடித்துச் சென்று ஆங்காங்கே குவியல் குவியலாக காணப்படுகிறது.

    வீடு முழுவதும் சேறு படிந்து உள்ளதால் வீட்டை சுத்தம் செய்ய தண்ணீர் இல்லாமல் வீட்டிற்கு வெளியே குழந்தைகள் முதியவர்களுடன் காத்துக் கொண்டு உள்ளனர்.

    வீடுகளை சுத்தம் செய்வதற்காக விஜயவாடாவிற்கு 100 தீயணைப்பு வாகனங்களும் மற்ற மாவட்டங்களில் இருந்து நகராட்சி, மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 400 பேரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளில் உள்ள சேற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மழை வெள்ளம் வடிந்த பகுதிகளில் சகதியில் பாதிப்பு குறைந்த நிலையில் மனித உடல்கள் கிடந்தன. அவற்றை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் ஆங்காங்கே ஆடு மாடுகள் செத்துக்கிடக்கின்றன. இதனால் விஜயவாடா நகரப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    கடந்த 4 நாட்களாக மனித உடல்கள் தண்ணீரில் இருந்ததால் அழுகி அடையாளம் காண முடியாமல் சிதைந்து கிடப்பதாக தெரிவித்தனர். இதனால் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


    மழை வெள்ளம் குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    மழை வெள்ளத்தால் சுமார் 7 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைசி நபர் வரை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்குவதே எனது அரசின் லட்சியம். வெள்ள நிவாரணம் வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி.

    ஆந்திரா மழை வெள்ளத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளதால் மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். முதல் தவணை வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கடன்களை வங்கி அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயவாடா நகரப் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
    • வெள்ளம் பாதித்த பகுதிகளை படகு மற்றும் JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

    ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியது.

    விஜயவாடா நகரப் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் உணவு குடிநீர் மருந்து கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஹெலிகாப்டர் டிரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து தற்போது தண்ணீர் வடியத் தொடங்கி உள்ளது. இதனால் நிவாரண முகாம்களில் இருந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

    விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை படகு மற்றும் JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், விஜயவாடா மதுரா நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். அப்போது ரயில் தண்டவாளத்தின் அருகே உள்ள பாலத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆந்திரா மழை வெள்ளத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளதால் மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். முதல் தவணை வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். 

    ×