என் மலர்
நீங்கள் தேடியது "வங்கிகள் குறைந்தபட்ச தொகை அபராதம்"
- மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார்.
- வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கான (SMS) கட்டணமாக மட்டும் ரூ.3,387.77 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 11 பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத கணக்குகளிலிருந்து அபராதமாக மொத்தம் ரூ.8,092 கோடி வசூலித்துள்ளன.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2022-23 நிதியாண்டில் ரூ.2,407 கோடி, 2023-24 நிதியாண்டில்: ரூ.2,909 கோடி, 2024-25 நிதியாண்டில்: ரூ.2,775 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கான (SMS) கட்டணமாக மட்டும் ரூ.3,387.77 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
2017-18-ம் ஆண்டில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ.4988 கோடியை வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளன. 30.8 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதித்துறை இணை மந்திரி பிரதாப்சுக்லா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2017-18 நிதியாண்டில் ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ.4988 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது.
ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக ரூ.2434 கோடி அபராதமாக வசூலித்து உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக எச்.டி.எப்.சி. (ரூ.590கோடி), ஆக்சிஸ் வங்கி (ரூ.530 கோடி), ஐ.சி.ஐ.சி.ஐ. (ரூ317 கோடி), பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ.211 கோடி) ஆகியவை உள்ளன.
கடந்த ஜனவரியில் இருந்து 7 மாதத்தில் ஸ்டேட் வங்கி ரூ.1700 கோடி அபராதமாக வசூலித்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Banks






