என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கார் யூனிஸ்"

    • உஸ்மான் தாரிக்கை பற்றி நாம் பேசி வருகிறோம்.
    • ஆனால், அவர் பந்து வீச வரும்போது இஷான் கிஷன் ஏற்கனவே டேமேஜ் செய்துவிட்டார்.

    டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டி விறுவிறுப்பாகவும், யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 61 ரன்கள் வித்தியாசத்தில் தொல்வியை சந்தித்தது. இது ஒரு சைடாக முடிந்த போட்டி என்று கூட கூறலாம்.

    கொழும்பு மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருந்தது. இருந்தபோதிலும், இந்திய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு 175 ரன்கள் குவித்துவிட்டது.

    இந்த நிலையில், முதல் இன்னிங்சிலேயே பாகிஸ்தான் தோல்வியடைந்து விட்டது என்று அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வக்கார் யூனிஸ் கூறியதாவது:-

    பாகிஸ்தான் முதல் இன்னிங்சிலேயே தோல்வியடைந்து விட்டது. இந்தியா 175 ரன்களை சேர்த்ததும், பாகிஸ்தானிடம் இருந்து போட்டி நழுவி சென்றுவிட்டது. பந்து நன்றாக சுழன்று கொண்டிருக்கும்போது, சூர்யகுமார் யாதவ் தன்னுடைய பந்துவீச்சு மூலம் புத்திசாலித்தனமாக செயல்பட்டார்.

    பாகிஸ்தானின் பேட்டிங் சிறப்பானதாக இல்லை என்று ஏற்கனவே நமக்குத் தெரியும். எனினும், இந்தியா 175-க்குப் பதிலாக 140 அல்லது 150 ரன்கள் எடுத்திருந்தால், விசயம் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.

    இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து நன்றாக டர்ன் செய்தது போன்று, பாகிஸ்தான பந்து வீச்சாளரக்ள் செய்யவில்லை. இந்தியா அதிகமான ரன்களை சேர்த்துவிட்டது.

    சூர்யகுமார் யாதவ் முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யாவிடம் கொடுத்தார். அடுத்த ஓவரை பும்ராவிடம் கொடுத்தார். அவர் ஸ்விங், சீமிங் மற்றும் ஸ்டம்பிற்கு நேராக பந்து வீசுதல் போன்றவற்றால் அமர்க்களப்படுத்தினார். இது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமானதாகிவிட்டது.

    உஸ்மான் தாரிக் சிறப்பாக பந்து வீசி ஒரு விக்கெட் வீழ்த்தி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஒரு வாரமாக அவரைப் பற்றி நாம் பேசி வருகிறோம். ஆனால், அவரை மிகவும் பின்புதான் கொண்டு வந்தனர். அவர் பந்து வீச வரும்போது இஷான் கிஷன் ஏற்கனவே டேமேஜ் செய்துவிட்டார்.

    இவ்வாறு வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

    • அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஹசரங்கா 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸின் உலக சாதனையை ஹசரங்கா சமன் செய்துள்ளார்.

    ஹசரங்கா முந்தைய இரு ஆட்டங்களில் முறையே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 6 விக்கெட்டும், ஓமனுக்கு எதிராக 5 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார்.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் 5 விக்கெட் வீழ்த்திய 2-வது பவுலர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஏற்கனவே பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் 1990-ல் தொடர்ந்து 3 முறை 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    அவருடன் அந்த அரிய சாதனை பட்டியலில் 25 வயதான லெக்ஸ்பின்னர் ஹசரங்கா இப்போது இணைந்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஷகீன் அப்ரிடியின் பந்து வீச்சில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானார்கள்
    • இப்போது இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள் என்று வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்தார்.

    மும்பை:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.

    6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரர் ஷகீன்ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டது. வலது கால் முட்டி தசை நாரில் காயமடைந்த அவர் ஆசிய கோப்பை போட்டி தொடங்குவதற்குள் குணம் அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் குணமடையாததால் போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதற்கிடையே ஷகீன்ஷா அப்ரிடி விலகல், இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்குத்தான் பெரும் நிம்மதியாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.

    கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஷகீன்ஷா அப்ரிடி பந்து வீச்சில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள் என்று வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்தார்.

    இந்த நிலையில், வக்கார் யூனிஸ் கருத்துக்கு இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக இர்பான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும் போது, ஆசிய கோப்பை போட்டித்தொடரில் இந்திய அணியில் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் இல்லாதது மற்ற அணிகளுக்கு நிம்மதியை தரும் என்று கூறியுள்ளார்.

    மேலும் இர்பான் பதான் கூறும்போது, ஆசிய கோப்பை போட்டி மிகவும் முக்கியமானது. ஆனால் நான் 20 ஓவர் உலக கோப்பையை எதிர்நோக்கும் போது, விராட் கோலி ஆசிய கோப்பையில் சிறந்த பார்முக்கு திரும்ப வேண்டும்.

    ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் கோலி சிறப்பாக விளையாடுபவர். எனவே இந்திய அணிக்கு சிறந்த பார்மில் உள்ள விராட்கோலி தேவை. இது அவருக்கும், இந்திய அணிக்கும் முக்கியமானது, என்றார்.

    ×