என் மலர்
நீங்கள் தேடியது "ஜாக்கி"
நாயகன் யுவன் கிருஷ்ணா ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு கிடா சண்டை மீது அதிக ஈடுபாடு. மற்றொரு நாயகனான ரிதன் கிருஷ்ணா, ஆண்டு தோறும் கிடா சண்டையில் வெற்றி பெற்று வருகிறார்.
இந்நிலையில், யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிரிஷ்ணாவின் கிடாயை ஒரு முறை வீழ்த்தி விட, அதன் மூலம் இருவருக்கும் இடையே பகை உண்டாகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வெட்டு குத்து, அடிதடி நடந்துக் கொண்டிருக்கிறது.
கிடா போட்டி நடுவரான மதுசூதனராவ், இருவரையும் களத்தில் இறங்கி கிடாவுடன் மோதி பகையை முடித்துக் கொள்ள அறிவுறுத்துகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் இருவரது கிடாக்களும் போட்டிக்கு தயாராகின்றன.
இறுதியில் கிடா போட்டியில் வெற்றி பெற்றது யார்? இருவரின் பகை முடிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒருபக்கம் அடிதடி, மறுபக்கம் காதல் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ரிதன் கிருஷ்ணா. மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
கிடா சண்டையை மையமாகக் கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரகபல். காட்சிகளை உணர்வு பூர்வமாகவும் விறுவிறுப்போடும் நகர்த்தி இருக்கிறார். கிடா சண்டைக்கான வரலாறுகளை ஆராய்ந்து, படத்தை உருவாக்கி இருப்பது சிறப்பு.
இசை
போட்டிக்கு பின்னணியில் ஒலிக்கும் சக்தி பாலாஜி இசை அதிரடி காட்டுகிறது.
ஒளிப்பதிவு
கிடா மோதல் காட்சிகளை நேரில் பார்ப்பது போல் பளிச்சென என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.
ரேட்டிங்- 3/5
- கெடா சண்டையை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
- படத்திற்கு, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார்.
'மட்டி' பட இயக்குநர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம்தான் 'ஜாக்கி'. மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
பிரகபல்லின் முதல் படமான 'மட்டி' திரைப்படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் கதை நாயகர்களாக நடிக்க, அம்மு அபிராமி கதா நாயகியாக நடித்துள்ளார்.
பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன்படி படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 4வது பாடலான 'தென்னாட்டு சிரிக்கி' தற்போது வெளியாகி உள்ளது.
- மட்டி படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணாவும், ரிதன் கிருஷ்ணாஸ்சும் இந்த படத்திலும் நடிக்கின்றனர்.
- பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்குகிறது.
மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான Mud ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக மட்டி என்ற திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்தவர் இயக்குனர் டாக்டர் பிரகபல்.
இவர் அடுத்ததாக, அதைவிட சுவாரஸ்யமான ஒரு கதையாக கிடா சண்டை பந்தையத்தை படமாக உருவாக்கவுள்ளார்.
இந்த படத்தில், மட்டி படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணாவும், ரிதன் கிருஷ்ணாஸ்சும் இந்த படத்திலும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மது சூதன் ராவ் நடித்துள்ளார். மற்றும் சில தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் உதயகுமார், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்குகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை நேற்று கரம் பிடித்தார்.
- திருமண விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ப்ரீத் சிங். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை நேற்று கரம் பிடித்தார்.
கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், " திருமண விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஜாக்கியும் ரகுலும் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் பயணத்தைத் தொடங்குகின்றனர். அவர்களின் திருமணத்தின் நல்ல சந்தர்ப்பத்தில் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்த்து கடிதத்தை கண்டு குஷியான நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும், ஜாக்கி பாக்னானியும் நன்றி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பகிர்ந்துள்ளனர்.
மேலும், இந்த கடிதத்தை தாங்கள் பிரேம் செய்து வைத்துக் கொள்வோம் என்றும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.






