என் மலர்
சினிமா செய்திகள்

பிரதமர் மோடி திருமண வாழ்த்து: குஷியில் நடிகை ரகுல்- ஜாக்கி தம்பதி
- ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை நேற்று கரம் பிடித்தார்.
- திருமண விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ப்ரீத் சிங். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை நேற்று கரம் பிடித்தார்.
கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், " திருமண விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஜாக்கியும் ரகுலும் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் பயணத்தைத் தொடங்குகின்றனர். அவர்களின் திருமணத்தின் நல்ல சந்தர்ப்பத்தில் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்த்து கடிதத்தை கண்டு குஷியான நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும், ஜாக்கி பாக்னானியும் நன்றி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பகிர்ந்துள்ளனர்.
மேலும், இந்த கடிதத்தை தாங்கள் பிரேம் செய்து வைத்துக் கொள்வோம் என்றும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.






