என் மலர்
நீங்கள் தேடியது "கொம்புசீவி"
- அவரது நடிப்பில் வெளியான படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
- பிளாக் காபியில் நெய் கலந்து சாப்பிடும் யுக்தி, அவர் மூலமாகவே ‘டிரெண்ட்' ஆகி போயிருக்கிறது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சரத்குமார், 71 வயதிலும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார். '3 பி.எச்.கே.', 'டியூட்', 'கொம்புசீவி' என வரிசையாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
நடிப்பு தாண்டி கட்டுடலுக்கும் சொந்தக்காரரான சரத்குமார், உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கங்களை (டயட்) கடைபிடித்து உடலை பேணிக்காத்து வருகிறார். பிளாக் காபியில் நெய் கலந்து சாப்பிடும் யுக்தி, அவர் மூலமாகவே 'டிரெண்ட்' ஆகி போயிருக்கிறது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமாரிடம் '71 வயதிலும் இப்படி உடற்கட்டுடன் இருக்க என்ன காரணம்?' என கேட்கப்பட்டது. அதற்கு, "71 வயதில் நான் இப்படி இருக்கிறேன் என்றால் நான் புகைப்பிடிப்பதில்லை, குடிப்பழக்கமும் கிடையாது. என்னிடம் நல்ல பழக்க வழக்கங்களே உள்ளன. அதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்" என சரத்குமார் கூறியுள்ளார்.
மதுரை அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் சரத்குமார் ஊரில் நல்லது கெட்டது விஷயங்களில் கலந்து கொண்டு பெரிய மனிதராக வாழ்ந்து வருகிறார். அதே ஊரில் தாய் தந்தையை இழந்த சிறுவன் சண்முக பாண்டியன், சரத்குமாரை ஒரு சிறிய சண்டையில் காப்பாற்றுகிறார். அதிலிருந்து சரத்குமார் உடனே பயணிக்கிறார் சண்முக பாண்டியன்.
இருவரும் ஊரில் கஞ்சா கடத்தி விற்று சம்பாதித்து வருகிறார்கள். போலீஸ்காரர்களின் சூழ்ச்சியால் சண்முக பாண்டியன் கஞ்சாவுடன் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறார். இதனால் கோபமடையும் சரத்குமார் போலீஸ் நிலையத்தை எரித்து சண்முக பாண்டியனே வெளியில் கொண்டு வந்து விடுகிறார்.
இறுதியில் போலீஸ் இவர்களை பிடித்தார்களா? சரத்குமார், சண்முக பாண்டியன் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் கெத்தான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சரத்குமார். ஊருக்காக போராடுவது, சண்முக பாண்டியன் மீது பாசம், அவருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி மற்றும் வெகுளித்தனமான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன், காதல், ஆக்ஷன், நடனம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தரணிகா போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
இயக்கம்
வைகை அணை கட்டும் போது பல கிராமங்கள் செழிப்பானாலும், சில கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பொன்ராம். ஆனால், வைகை அணை பற்றி அதிகம் பேசாமல், கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்தும் வைத்து எடுத்து இயக்கி இருக்கிறார்.
விவசாயம் பற்றி சில வசனங்கள் மூலம் மேலோட்டமாக சொல்லி இருக்கிறார். முதல் பாதி திரைக்கதை சுமாராகவும், இரண்டாம் பாதி திரைக்கதை விறுவிறுப்பாகவும் நகர்த்தி இருக்கிறார். காமெடி காட்சிகள் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை.
இசை
யுவன் சங்கர் ராஜா இசையில் 2 பாடல்கள் மட்டுமே ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறார்.
ஔிப்பதிவு
பால சப்பிரமணியம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் சிறப்பு.
ரேட்டிங்- 2/5
- இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குநர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது. இருப்பினும் இப்படம் வெளியாவது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், 'கொம்புசீவி' படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அருண் விஜயின் 'ரெட்ட தல' படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமைமிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'.
இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
தொடர்ந்து, 'கொம்புசீவி' படத்தின் முதல் சிங்கிளான 'உன்ன நான் பாத்த' பாடல் இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில், "கொம்புசீவி" படத்தின் முதல் பாடலான "உன்ன நான் பாத்த" பாடல் வெளியாகியுள்ளது.






