என் மலர்tooltip icon

    வழிபாடு

    Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 மார்ச் 2026: பிரதோஷம்
    X

    Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 மார்ச் 2026: பிரதோஷம்

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
    • திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு பங்குனி-2 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி காலை 8.56 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : அவிட்டம் மறுநாள் விடியற்காலை 5.55 மணி வரை பிறகு சதயம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று பிரதோஷம், சுபமுகூர்த்த தினம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை

    இன்று பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் மாலையில் ஸ்ரீஅம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி. திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. நத்தம் வரகுண வல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பக வல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் அபிஷேகம். தேவகோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஜெயம்

    ரிஷபம்-பாராட்டு

    மிதுனம்-கடமை

    கடகம்-நிம்மதி

    சிம்மம்-அன்பு

    கன்னி-பாசம்

    துலாம்- ஆதாயம்

    விருச்சிகம்-காரிய சித்தி

    தனுசு- பெருமை

    மகரம்-செலவு

    கும்பம்-பரிசு

    மீனம்-களிப்பு

    Next Story
    ×