என் மலர்tooltip icon

    நவராத்திரி ஸ்பெஷல்

    நவராத்திரியில் விரதம் இருந்து தேவியின் ஆசிகளை பெற கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்...
    X

    நவராத்திரியில் விரதம் இருந்து தேவியின் ஆசிகளை பெற கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்...

    • நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • நவராத்திரியை பெண்கள் முழு பயபக்தியுடன் வழிபடுகின்றனர்.

    இந்து மதத்தில் பற்பல பண்டிகைகள் இருந்தாலும் பெண்களுக்குத் தனி கவுரவம் அளித்துப் பெண்களைப் போற்றும் பண்டிகைகளில் தலையாயது நவராத்திரி. மற்ற பல பண்டிகைகள் ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள்.

    நவராத்திரி விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.



    இத்தகைய சிறப்பு வாய்ப்பு நவராத்திரியை பெண்கள் முழு பயபக்தியுடன் வழிபடுகின்றனர். இதற்காக பலர் நவராத்திரி முழுவதும் விரதம் கடைப்பிடிக்கின்றனர். அவ்வாறு விரதத்தை கடைப்பிடிக்கும் போது சில விதிகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விதிகளை முறையாக பின்பற்றினால் தேவியின் ஆசிகளை பெறலாம். நவராத்திரி விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து பார்ப்போம்...

    * விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். பகலில் தூங்குவது விரதம் இருப்பவரின் ஆன்மிக செயல்திறனை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், பகல் நேர தூக்கம் சோம்பலை அதிகரிக்கும்.

    * விரதத்தின் போது முடி மற்றும் நகங்களை ஒரு போதும் வெட்டக்கூடாது. இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் ஆண்கள் சேவிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    * விரதத்தின் போது டீ அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் குளிர்பானங்கள் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.

    * விரதத்தின் போது பூண்டு மற்றும் வெங்காயம் கொண்ட உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். விரதம் இல்லாவிட்டாலும், நவராத்திரியின் போது இறைச்சி அல்லது மீன் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

    * விரதத்தின் போது வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

    Next Story
    ×