என் மலர்
தோஷ பரிகாரங்கள்
நமது வாழ்வியல் சாஸ்திரத்தில் பல்லி மிக முக்கிய பங்காற்றுகிறது. பல்லி நமது உடலில் விழுந்தால் ஏற்படும் தோஷங்களுக்கு என்னென்ன பரிகாரங்கள் உள்ளன என்பன பற்றி பார்க்கலாம் வாங்க...
நமது வாழ்வியல் சாஸ்திரத்தில் பல்லி மிக முக்கிய பங்காற்றுகிறது. பல்லி விழும் பலன்கள் என்பது பண்டைய நாள்தொட்டே நடைமுறையில் உள்ளது. இதனை பஞ்சாங்கத்தில் புகுத்தி பலன்களாக தந்திருக்கிறார்கள். காக்கை நம் வீட்டின் முன் வந்து கரைந்தால் உறவினர்கள் வருவார்கள் என்பது ஐதீகம். காக்கைக்கு உணவு வைப்பது நம் முன்னோருக்கு உணவு அளிப்பதற்கு சமம், போன்ற பல சாஸ்திர விதிகள் உள்ளன.
அது போல எல்லோருடைய வீட்டிலும் இருக்ககூடிய பல்லியில் சில சாஸ்திரங்கள் உள்ளன. பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் சில செயல்கள் பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பல்லி நமது உடலில் விழுந்தால் ஏற்படும் தோஷங்களுக்கு என்னென்ன பரிகாரங்கள் உள்ளன என்பன பற்றி பார்க்கலாம் வாங்க...
உடலின் எந்த பாகத்தின் மீது பல்லி விழுந்தாலும் உடனே குளித்து விடுங்கள். குளித்த பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள் அல்லது வீட்டிலேயே விளக்கேற்றி சுவாமியை வழிபட்டு பல்லி விழுந்ததால் எந்த கெட்ட செயலும் நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள்.
இல்லையெனில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியின் சிலையை தொட்டு வணங்கினால் பல்லி விழுந்த தோஷங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கடனால் பலரும் இன்றும் அவதிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்த கடன் பிரச்சனையை தீர்க்கும் பரிகார முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன் என்பது கொடிய விஷமே தவிர வேறில்லை. இதில் எல்லோரும் அவதிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள். கடன் நிவர்த்தி பரிகார முறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பலன் பெறுங்கள்.
* புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.
* வெல்லத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.
* தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்.
* வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.
* கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கி செய்யவும்)
* தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்

கீழ்க்கண்ட பரிகாரம் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, அமைதியின்மை, வீட்டிற்குள் நுழையவே பிடிக்காத தன்மை, எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றை நீக்க கூடியது.
கீழ்க்கண்ட பரிகாரம் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, அமைதியின்மை, வீட்டிற்குள் நுழையவே பிடிக்காத தன்மை, எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றை நீக்க கூடியது. செய்து பயன் அடையுங்கள். இதை செவ்வாய், சனி தவிர்த்து மற்ற நாட்களில் செய்யலாம், குறிப்பிட்ட நேரம், திசை எதுவும் இல்லை.
(1) ஒரு வெள்ளை துணியில் கையளவு வெல்லம், கையளவு கோதுமை (மாவு அல்ல), கையளவு கல் உப்பு, 2 செம்பு நாணயங்கள் ஆகியவற்றை சேர்த்து கட்டி வீட்டில் பூஜையறை அல்லது வடகிழக்கு மூலையில் வைத்து விடவும். கட்டி தொங்க விட அவசியமில்லை. மாதம் ஒரு முறை மாற்றி விடலாம். இது குடும்ப அமைதிக்கு சிறந்த முறையாகும். குறிப்பிட்டு கணவன் மனைவி சண்டை எனில் மேற்கூறியதில் செம்பு நாணயத்திற்கு பதில் வெள்ளி நாணயம் வைத்து விடவும். பலன் மிகும்.
(2) ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் மன அமைதி குறைவு, தெளிவின்மை, எப்போதும் சிந்தனைகள், பண விவகாரங்களில் தடை போன்றவை இருந்து கொண்டே இருக்கும், அப்படிபட்டவர்கள், ஒரு ஞாயிறு அன்று இரவு படுக்கும் முன் காய்ச்சாத பசும் பால் ஒரு ஸ்டீல் அல்லது வெள்ளி கப்பில் தன் தலைக்கு அருகில் வைத்து தூங்கி விடவும். பின்பு காலையில் அதை அப்படியே கொண்டு சென்று கருவேல மரத்தின் வேருக்கு விட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விடவும். பாலை மூடாமல் கொண்டு செல்ல வேண்டும். மரம் அருகில் இல்லாதவர்கள் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில் பாலை மாற்றி கொண்டு செல்லலாம். பாட்டிலை மூடக்கூடாது. இதை வாரா வாரம் செய்து வரலாம். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய பலன் மிகும்.

குடும்பத்தில் அமைதி நிலவவும், சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்கை வாழவும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் உதிக்கவும் மிக சிறப்பான பரிகாரம் ஒன்று உள்ளது.
வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்
உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன் - தம்பி பிரச்சனை, அக்கா தங்கை பிரச்சனை, சொத்து பிரச்சனை, பண பிரச்சனை இவை அனைத்தையும் தீர்த்து வைக்க முடியும்.
ஆனால் எப்போதுமே வீட்டில் பிரச்சனை வந்துக்கொண்டே இருந்தால் என்ன செய்வது? மன நிம்மதி இருக்காது. உடல் ஆரோக்கியம் சீர்கெடும், எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது. இப்படியான நிலையில், குடும்பத்தில் அமைதி நிலவவும், சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்கை வாழவும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் உதிக்கவும் மிக சிறப்பான வழிமுறை ஒன்று உள்ளது.
தினமும் மாலை நேரத்தில் வேப்பிலை மீது இரண்டு அகல் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்தது. அதாவது, நம் வீட்டு வாசலில் சதுர வடிவில் மஞ்சளால் கோலமிட்டு... அதன் மீது வேப்பிலையை பரப்பி, அதன் மீது 2 அகல் விளக்குகளில் மஞ்சள் திரியிட்டு விளக்கேற்றி வந்தால், திருஷ்டி படாது. எதிரிகள் நம்மை விட்டு விலகுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு குறிப்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக உள்ளதா இல்லையா என்று பலருக்கும் உறுதியாகத் தெரியாது. பலவிதமான அறிகுறிகள் அடிப்படையில் இதை உணர்ந்துகொள்ள முடியும்.
நம்முடைய புராணங்கள் அடிப்படையில் நவிரங்களுள் முதன்மையானது, அரசன் போன்றது சூரியன். இது பூமிக்கு, பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒளி, வெப்பம், ஆற்றலைத் தருகிறது. அன்றாட நடவடிக்கைகளுக்கு சூரியன் தேவை.
பெரும்பாலும் ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக உள்ளதா இல்லையா என்று பலருக்கும் உறுதியாகத் தெரியாது. பலவிதமான அறிகுறிகள் அடிப்படையில் இதை உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக தொடர்ந்து பலகீனமாக உள்ளவர்கள், சோம்பலாக உள்ளவர்கள், உடல் நலம் சரியாக இல்லாமல் இருப்பவர்கள், எலும்பு - மூட்டு பிரச்னை உள்ளவர்கள், கை - கால்கள் உணர்வின்மை பிரச்னை ஏற்படுபவர்கள், பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள், இதய நோயாளிகள், சுய மரியாதை இன்றி மோசமாக வாழ்பவர்களுக்கு சூரியன் நீசமாக, பலம் இழந்து இருப்பதாக கருதலாம்.
சூரியன் நீசமாக இருந்தால் தந்தையுடன் உறவு நிலை மோசமாக இருக்கும். தந்தைக்கு பிரச்னையை ஏற்படுத்துவார்கள். மனநல பிரச்னையால் அவதியுறுவார்கள். மகிழ்ச்சி இன்றி இருப்பார்கள். உடல் ரீதியாவும் மன ரீதியாகவும் பிரச்னைகளை சந்திப்பார்கள். அதிகம் கோபம், ஆக்ரோஷம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்கள் தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சூரியனை சாந்தப்படுத்தலாம். சூரிய தோஷம் நீங்க ராமரை வழிபடலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும் பலனைத் தரும்.
சூரியனை வழிபட பீஜ மந்திரம்:
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ||
இதை 40 நாட்களுக்குள் 7000ம் தடவை சொல்லி வந்தால் நற்பலன்கள் கிடைக்கும். அதிக பலன்கள் கிடைக்க 40 நாட்களுக்குள் 28 ஆயிரம் முறை சொல்ல வேண்டும்.

திருச்செந்தூர் திருத்தலத்தைச் சுற்றிலும் 24 தீர்த்தங்கள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அவற்றையும், அதன் சிறப்பு களையும் பற்றி இங்கே பார்க்கலாம்.
முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் இரண்டாவது திருத்தலமாக திகழ்வது, திருச்செந்தூர். இங்கு ஆலயத்தின் முன்பாக இருக்கும் கடலும், முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் நாழிக்கிணறு தீர்த்தமும் முக்கியமான தீர்த்தங்களாக இருக்கின்றன.
இவை தவிர திருச்செந்தூர் திருத்தலத்தைச் சுற்றிலும் 24 தீர்த்தங்கள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அவற்றையும், அதன் சிறப்பு களையும் பற்றி இங்கே பார்க்கலாம்.
முகாரம்ப தீர்த்தம்:- இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள், கந்தக் கடவுளின் கருணையைப் பெறுவர்.
தெய்வானை தீர்த்தம்:- உணவு, உடை, இருப்பிடம், செல்வ வளம் பெருக நினைப்பவர்கள், இந்த தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
வள்ளி தீர்த்தம்:- இந்த தீர்த்தத்தில் நீராடினால், பிரணவ வடிவமாய் பிரகாசிக்கும் முருகனின் திருவடியை தியானிக்கும் ஞானம் வந்து சேரும்.
லட்சுமி தீர்த்தம்:- நிதிகளை தன்னுடன் வைத் திருக்கும் குபேரனால் அடையமுடியாத செல்வங் களைக்கூட, இந்த தீர்த்தத்தில் நீராடினால் பெறலாம்.
சித்தர் தீர்த்தம்:- பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு தடையாக இருக்கும் உலக மாயைகளை அகற்றி, முக்தியை வழங்கும்.
அஷ்டதிக்கு பாலகர் தீர்த்தம்:- கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களின் நீராடு வதன் மூலம் கிடைக்கும் பலன்களை அடையலாம்.
காயத்ரி தீர்த்தம்:- 100 யாகங்களை செய்தவர்கள் அடைகின்ற பலனைப் பெற்றுத் தரும்.
சாவித்ரி தீர்த்தம்:- பிரம்மன் உள்ளிட்ட தேவர் களால் காண்பதற்கு அரிய பராசக்தியின் திருவடிகளை பூஜித்த பலன் கிடைக்கும்.
சரஸ்வதி தீர்த்தம்:- வேதங்களையும், ஆகமங் களையும், சாஸ்திரங்களையும் கற்றறிந்த ஞானத்தை வழங்கும்.
ஐராவத தீர்த்தம்:- சந்திர பதாகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் வந்து சேரும்.
வயிரவ தீர்த்தம்:- பாவங்களைப் போக்கும் புண்ணிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.
துர்க்கை தீர்த்தம்:- சகல துன்பங்களும் நீங்கி நன்மை பெருகும்.
ஞான தீர்த்தம்:- இறைவனை நினைத்து வழி படுபவர்களுக்கும், அவனை நினைப்பவர்களுக்கும் நன்மையை வழங்கும்.
சத்திய தீர்த்தம்:- களவு, மது, குரு நிந்தை, அகங்காரம், காமம், பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றில் இருந்து விடுவித்து, நல்வழியில் நிற்க உதவி புரியும்.
தரும தீர்த்தம்:- தேவாமிர்தம் என்னும் தேவதீர்த்தத்தை அடைவீர்கள்.
முனிவர் தீர்த்தம்:- வாழ்வில் சுபீட்சத்தை வழங்கும் இறைவனின் அருளைப் பெறுவீர்கள்.
தேவர் தீர்த்தம்:- ஆறு விதமான தீய குணங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.
பாவநாச தீர்த்தம்:- சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியங்களையும் அளிக்க வல்லது.
கந்தபுஷ்கரணி தீர்த்தம்:- சிவபெருமானின் திருவடியைக் கண்ட பலன் கிடைக்கும்.
கங்கா தீர்த்தம்:- பிறவிப் பெருங்கடலை கடக்கும் வழியை ஏற்படுத்தும்.
சேது தீர்த்தம்:- சகல பாதகத்தில் இருந்தும் விலக்கி, நன்மையை வழங்கும்.
கந்தமாதன தீர்த்தம்:- பாவங்களைப் போக்கி பரிசுத்தமான வாழ்வைத் தரும்.
மாதுரு தீர்த்தம்:- அன்னையின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
தென்புலத்தார் தீர்த்தம்:- இந்த தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.

அரசமரம் ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிப்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதிலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அரச மரத்தை சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
அரசமரத்தை திங்கள்கிழமையன்று இன்று வலம்வந்தால் வீட்டில் மங்கலக்காரியங்கள் எந்த தடையும் இல்லாமல் நடக்கும். செவ்வாய்கிழமையில் வளம் வருவது செவ்வாய் தோஷங்களை நீக்கும். புதன்கிழமையில் வலம்வந்தால் வியாபாரம் பன்மடங்கு பெருகும்.
கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமையில் வளம் வர வேண்டும். சகல சௌபாக்கியங்களும் தடையின்றி தொடர்ந்து கிடைக்க வெள்ளிக்கிழமை வலம்வர வேண்டும். எல்லா கஷ்டங்களையும் விலக்கி மகாலட்சுமியின் அருளை சனிக்கிழமை வலம்வருவது பெற்றுத்தரும்.
தீராமல் இருக்கும் எல்லா நோயையும் ஞாயிற்று கிழமை வலம் வருதல் போக்கும். சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கள்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வலம் வருதல் நலம்.
மூலதோ பிரம்மரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபினே
அக்ரத: சிவ ரூபாய
விருக்ஷ ராஜயதே நம
இந்த ஸ்லோகத்தை 108 முறை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வர வேண்டும். கூடவே உங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ பூஜை சார்ந்த பொருட்களோ மரத்தின் முன்னே சமர்ப்பிக்க வேண்டும்.
108 முறை பிரகார வலம் முடிந்ததும் அந்த பொருட்களை தானம் அளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த வழிபாடு அமாசோமவார விரதம் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் நீங்கள் செய்யும் அன்னதானம் பலமடங்கு புண்ணியங்களை கொண்டு சேர்க்கும்.
துணிகளை தானமாக கொடுக்கலாம். இந்த ஆடிஅமாவாசையை மறந்துவிடாமல் உங்கள் அருகில் உள்ள அரசமரத்தை வலம்வந்து எல்லா நன்மையையும் பெறுங்கள்.

மகிழ்ச்சியான மண வாழ்விற்கு சவால் விடும் பல்வேறு தோஷங்களில் சர்ப்ப தோஷமும் ஒன்றாகும். ஒருவருடைய ஜாதகத்தில் 1,2,7,8-ம் இடங்களில் ராகு,கேதுக்கள் நின்றால் அது சர்ப்ப தோஷமாகும்.
மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் பல்வேறு விதமான சங்கடங்களுக்கு ஜாதகரீதியான தோஷம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மகிழ்ச்சியான மண வாழ்விற்கு சவால் விடும் பல்வேறு தோஷங்களில் சர்ப்ப தோஷமும் ஒன்றாகும்.
ஒருவருடைய ஜாதகத்தில் 1,2,7,8-ம் இடங்களில் ராகு,கேதுக்கள் நின்றால் அது சர்ப்ப தோஷமாகும். லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும், அதற்கு ஏழாமிடத்தில் ராகு, கேது இருந்தாலும், இரண்டாம் இடத்தில் ராகு, கேது இருந்தாலும், எட்டாம் இடத்தில் ராகு,கேது இருந்தாலும் சர்ப்ப தோஷம் என்று சொல்வார்கள்.
லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதற்கு 7ம் இடத்தில் ராகு அல்லது கேது கண்டிப்பாக இருப்பார்கள். காரணம் ராகு கேது என்பவர்கள் 180 டிகிரி கோணத்தில் நிரந்தரமாகச் சுற்றி வருபவர்கள். எனவே ராகு இருக்கும் இடத்திற்கு ஏழாம் இடத்தில் கேது இருப்பதும், கேது இருக்கும் இடத்திற்கு 7ம் வீட்டில் ராகு இருப்பதும் இயல்பான ஒன்றாகும்.
இவ்வகை அமைப்பைப் பெற்றவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். ஒரு விஷயத்தை இப்படிச் செய்தால் நன்றாக இருக்குமா அல்லது வேறுமாதிரியாகச் செய்ய வேண்டுமா என்று சதா குழம்பிக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு முடிவையும் உடனுக்குடன் எடுத்துவிட மாட்டார்கள். தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அதேபோல இவர்களால் எந்த ஒரு விஷயத்திலும் தனித்துச் செயல்பட இயலாது. கொடிபோல படர்ந்து செயல்படக்கூடியவர்கள். சரியான ஊன்றுகோல் போன்று துணை கிடைத்து விட்டால் அவர்களைக் கொண்டு வாழ்க்கையில் சிறப்பான ஏற்றத்தினைக் காண்பார்கள்.
லக்னம் எனும் ஒன்றாம் இடத்தின் மூலம் ஜாதகனின் உயிர், தேகம், குணம் உருவம், நிறம், விதி ஆகியவற்றை அறிய முடியும். லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகரின் முகம், தலை பெரியதாக இருக்கும். இந்த நபர்கள் மிகவும் தைரியசாலிகளாகவும், எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெற கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி
லவுகீகத்தில் உள்ள அனைத்து இன்பங்களையும் முழுமையாக ரசித்து வாழ வேண்டும் என நினைப்பவர்கள்.சுயநலம், சுதந்திர சிந்தனையும் செயல்பாடும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் முன்னிலையில் இருக்க விரும்புவார்கள். சிற்றின்ப வேட்கை அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறரின் கஷ்டம், வேதனையை கண்டு கொள்ளாதவர்களாக இருப்பார். தனது காரியம் நிறைவேறுவதிலேயே குறியாக இருப்பர். பிரமாண்ட எண்ணங்கள் மிகுதியாக இருக்கும். குறுக்கு வழியை கையாண்டு எதையும் அடைய வேண்டும் என்ற வெறி இருக்கும். எதையும் கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர்.
இவர்களிடம் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை அவ்வளவாக எதிர்பார்க்க முடியாது. சற்று சோம்பேறித்தனமும் அதிகம் இருக்கும். லக்னத்தில் ராகு இருந்தால் உடல், மனம் இரண்டையும் பாதிப்பார். நல்ல குணங்களை தள்ளிப்போகச் செய்வார்.
இரண்டாமிடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம். சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பேசியாராலும் ஜெயிக்க முடியாது. காரமான, சூடான சுவையான, அசைவ உணவுகளை ருசித்து உண்பார்கள். திரித்து பேசும் குணம் உண்டு. பொய் சத்தியம் செய்பவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றத் தெரியாதவர்கள்.
பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு மிகுதியாக இருக்கும். தன வரவு மிகுதியாக இருந்தாலும் தங்காத நிலை உண்டு. குடும்ப உறுப்பினர்களை உதாசீனம் செய்வார்கள். குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் தனித்து வாழ விரும்புவார்கள். யார் என்ன சொன்னாலும் உள் வாங்க மாட்டார்கள். தான் சொல்வதை பிறர் கேட்க வேண்டும் என்று விரும்புவார்கள். குடும்ப விஷயத்தை பிறரிடம் கூறி பிரச்சினையை வளர்ப்பவர்கள்.
தன் பேச்சினால் பிறரை வதைப்பார்கள். நியாயத்திற்கு புறம்பாக பொருள் ஈட்டுவார்கள்.
பொருளாதார வசதியை அதிகரிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
அடுத்தவர் மீது குற்றம் காணும் மனப்பான்மை மிகுதியாக இருக்கும்.
குள்ளமான தோற்றம் உண்டு. லக்னம் எனும் ஒன்றாம் இடத்தில் கேது இருந்தால் ஜாதகர் அனுபவ அறிவு மிகுந்தவர்கள். பொருளாதாரத்தில் மந்த நிலை மிகுதியானதாக இருக்கும். பிறர் பிரச்சினையை தன் தோளில் சுமப்பவர்கள். மற்றவர்களை எண்ணி கவலை அடையக்கூடியவர்கள். கவுரவம், கவுரவம் என அலைந்து தனக்கு வேண்டியது என்னவென்றே தெரியாமல் போராடிக் கொண்டு இருப்பார்கள். இவர்களை மதிக்க வேண்டியவர்கள் உதாசீனப்படுத்துவார்கள். அந்தஸ்தான பெயரெடுக்க கடுமையாக உழைக்க வைக்கும்.
அனைத்து திறமை இருந்தும் முன்னேற முடியாத நிலை இருக்கும் அல்லது திறமையை வெளிக்காட்டிக் கொள்ள முடியாது.
இரண்டில் ராகு உள்ளவர்கள் பேசியே பிரச்சினையை அதிகரிப்பார்கள். ஆனால் இரண்டில் கேது இருப்பவர்கள் பேசாமலே மவுனமாக சாதிப்பார்கள். உறவிற்காக சுதந்திரத்தை பறி கொடுப்பார்கள். சிறந்த நேர்மைவாதியாக சூழ்நிலை கைதியாக இருப்பார்கள். குடும்பத்தை கட்டுக் கோப்பாக கொண்டு செல்ல கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்படும். வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்வார்கள். குடும்ப பிரச்சினைக்கு பஞ்சாயத்து வைப்பவர்கள் அல்லது நீதிமன்றம் செல்பவர்களாக இருப்பர்.
ஏழாமிடம் என்பது களத்திரம், நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், சம்பந்திகள் பற்றிக் கூறுமிடம். ராகு தான் நின்ற பாவக பலனை பிரமாண்டப் படுத்தும் குணம் கொண்டவர் என்பதால் அதீத இல்லற இன்பத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட துணையை நாடலாம். அல்லது இயல்பாகவே ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். சிலருக்கு காதல் கலப்பு திருமணம் நடக்கும். வேற்று மத நண்பர்கள் அதிகம் உண்டு. தொழில் கூட்டாளிகள் வஞ்சிப்பார்கள். பணிபுரியும் இடத்தில் உடன் வேலை பார்ப்பவர்களால் மன உளைச்சல் உண்டு. சம்பந்திகளால் அவமானம் உண்டு.
ஏழாமிடத்தில் கேது இருந்தால் வெகு சிலருக்கு கால தாமத திருமணம் நடக்கும். வெகு சிலருக்கு இல்லற இன்ப நாட்டம் குறைவுபடும். வாழ்க்கைத் துணையை புரிந்து கொள்ள மாட்டார்கள். பாலின வியாதி ஏற் படலாம். வாழ்க்கைத் துணைக்கு கடன் உருவாகலாம். குறைவான நண்பர்கள் உண்டு.
முறையாக எது செய்ய நினைத்தாலும் தாமத மாகும். நண்பர்கள், தொழில் கூட்டாளி கள், வாடிக்கையாளர்களால் வம்பு வழக்கு உண்டு. பணிபுரியும் இடத்தில் வம்பு, வழக்கு வரும். சில தம்பதிகள் சட்ட உதவியுடன் பிரி கிறார்கள்.
எட்டாமிடம் என்பது ஆயுள் ஸ்தானம். பெண்ணிற்கு மாங்கல்ய ஸ்தானம் . திடீர் அதிர்ஷ்டம் வரும். உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள்.
அந்த அதிர்ஷ்டம் இவர்களை விட இவர்களைச் சார்ந்தவர்களுக்கே பயன்படும். சிலருக்கு விபத்து ஏற்படலாம் அல்லது பொருள் திருடு போகலாம். நன்மையும், தீமையையும் எப்படி வரும், யார் மூலம் வரும் என்று நிதானிக்க முடியாது. சிலருக்கு தேவையில்லாத வதந்திகளால் அவமானம் ஏற்படும். இவ்விடத்தில் உள்ள ராகு, கேதுவினால் ஜாதகருக்கு அசுபங்கள் அதிகரிக்கும். சுபங்கள் குறைவுபடும்.
மேலே கூறிய அனைத்தும் ராகு, கேதுக்கள் நின்றபாவக ரீதியான பொதுவான பலன்கள். ராகு,கேதுக்கள் இருட்டான நிழல் கிரகங்கள் என்பதால் எந்த இடத்தில் அமர்வதும் நல்ல நிலை அல்ல. தான் நின்ற வீட்டு ஆதிபத்திய ரீதியாக ஜாதகரை பிரகாசிக்க இயலாமல் செய்வார்கள். இருட்டு படர்ந்த பாவக காரக ரீதியான பலன்கள் என்பதால் போதிய திறமை இருந்தும் வெளியே தெரியாது அல்லது உங்களுடைய திறமைகள் வெளிபடுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். உதாரணமாக ஜனன ஜாதகத்தில் ஏழில் ராகு நின்றால் திருமணத்தை தடை செய்யமாட்டார்.
திருமண வாழ்வில் பிரச்சினையை தருவார் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை தருவார் என்று பொருள். ஒரு செயலை நடத்தித் தராமல் தடை பிரச்சினையை தருபவர் கேது அந்த வகையில் தான் நின்ற பாவக பலனை அனுபவிக்க தடையை தருபவர் கேது. அதனால் ராகு,கேது இரண்டுமே பிரச்சினை தான். மேலும் தான் நின்ற பாவக ஆதிபத்திய ரீதியாக உயிர் அல்லது பொருள் காரகத்துவம் என ஏதாவது ஒன்றை மட்டுமே பாதிக்கும். எந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறதோ அந்த பாவகம் காரகம் தொடர்பான ஏதாவது ஒரு பாதிப்பு இருக்கும். தனித்த ராகு,கேது ஏற்படுத்தும் பாதிப்பு குறைவாக இருக்கும்.
ஆனால் இவர்களுடன் சேர்ந்த கிரகத்தால் ஏற்படும் பாதிப்பு மிகைப்படுத்தலாக ஜாதகரின் வாழ்க்கையை அசைக்கும்.
திருமணம் தொடர்பான 1,2,7,8 பாவகங்களில் நிற்கும் ராகு,கேதுக்கள் சர்ப்ப தோஷத்தால் திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சி னைகளை உருவாக்கும்.
இதனால் சர்ப்ப தோஷத்திற்கு சர்ப தோஷத்தையே நாம் சேர்க்கும் போது சில தோஷங்கள் நிவர்த்தியாகிறது. அதனால் தான், தோஷத்திற்கு தோஷம் சேர்க்கும் போது சில பாதிப்புகள் விலகும் என்று சொல்கிறோம். சுருக்கமாக,
1. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் களத்திர காரக கிரகமான செவ்வாய்க்கும் ஆணின் ஜாதகத்தில் களத்திர காரக கிரகமான சுக்ரனுக்கும் சர்ப்ப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் மட்டுமே திருமணத்தடை இருக்கும்.
திருமணத்திற்கு பின்பும் மண வாழ்வில் சங்கடங்கள் இருக்கும்.
2. சுய சாரம் அல்லது சாரப் பரிவர்த்தனை பெற்ற ராகு,கேதுக்களுக்கு திருமணத் தடையை ஏற்படுத்தும் வலிமை உண்டு.
3. 8-ம் இடத்தில் ராகு,கேதுக்கள் நின்று தசை நடத்தினால் உரிய வழிபாட்டிற்கு பிறகு திருமணம் நடத்தலாம். கோடான கோடி தம்பதிகள் 7, 8-ல் சர்ப்ப கிரகங்கள் நின்று மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
4. ஜனன கால ஜாதக ரீதியாக தசா புக்தி சாதகமாக இருந்தால் திருமணம் தொடர்பான பாவகங்களில் பிரச்சினை இருந்தாலும், அசுப கிரகங்கள் நின்றாலும் திருமணம் நடக்கும். திருமண வாழ்க்கை பாதிக்காது.
சுய ஜாதகத்தில் பெண்ணிற்கு செவ்வாயும், ஆணிற்கு சுக்ரனும் நல்ல நிலையில் இருந்தால் தசா புக்தி சாதகமாக இல்லாத நிலையிலும் ஜாதகத்தில் கடுமையான தோஷம் இருந்தாலும் திருமண வாழ்க்கை பாதிக்காது. உரிய வயதில் திருமணம் நடக்கும்.
அதனால் எந்த தோஷமாக இருந்தாலும் சீர் தூக்கி பார்க்காமல் ராகு,கேது திருமணத் தடை என்று பொதுவான காரணத்தைக் கூறி திருமணத் தடையை ஏற்படுத்தக் கூடாது. வெகு சிலருக்கு ஏற்படும் பிரச்சினையை பிரமாண்டப்படுத்திமனிதர்கள் தங்களுக்கு தாங்களே திருமணத் தடையை ஏற்படுத்திக் கொண்டு ராகு,கேதுக்கள் மீது பழி சுமத்த லாமா? எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் அனுசரித்து வாழப்பழகும் போது பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
மேலே கூறிய விதிகளின் படி உண்மையில் பாதிப்பு இருந்தால் தொடர்ந்து 108 நாள் நாகாபரணம் தரித்த ஈஸ்வரனை வில்வ மாலை அணிவித்து வழிபட்டால் ராகு,கேதுவினால் ஏற்படும் தடைகள் அகலும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி ஈர உடைகளோடு வந்து மாரியம்மன் கோவில் முன்பு வணங்கி குழந்தை வரம் கேட்பது இன்றும் நடைமுறையில் உள்ளது.
நோய்களை தீர்க்கும் தீர்த்தம்
நத்தம் மாரியம்மன் கோவில், வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டியல் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் போக்கி வருகிறது. அத்துடன் ‘அம்மை’ தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தை அளித்தால் 3 நாளில் குணமாகும். இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாகவும் மாரியம்மன் கோவில் அபிஷேக மூலிகை தீர்த்தம் விளங்குகிறது.
கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன்
நத்தம் மாரியம்மன் நித்தம் அருள்பாலிக்கும் முத்திரை பதிக்கும் தெய்வமாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி ஈர உடைகளோடு வந்து மாரியம்மன் கோவில் முன்பு வணங்கி குழந்தை வரம் கேட்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு குழந்தை வரம் பெற்ற தம்பதிகள் கரும்பு தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைத்து மாரியம்மன் கோவிலை சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். அதன்படி இந்த மாசி பெருந்திருவிழாவில் தம்பதிகள் பலர் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
வேப்பமர கட்டைகள் காணிக்கை
நத்தம் மாரியம்மனின் அருள் ஆற்றல் எண்ணிலடங்காதவை. பக்தர்களுக்கு தாயாக இருந்து அரவணைக்கும் அவள் கருணைக்கு எல்லையே இல்லை. மாரியம்மா என்று மனம் உருகி வேண்டுவோருக்கு அவள் அருள் கரத்தை நீட்ட தவறுவதில்லை. வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள், நோய் நொடிகள் நீங்க பெற்றவர்கள் தங்களது நேர்த்திக்கடனை பல்வேறு வகைகளில் நிறைவேற்றி வருகிறார்கள். அதன்படி ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறி யதற்காக பூக்குழி அமையும் தளத்தில் வேப்பமர கட்டைகளை காணிக்கையாக செலுத்தினர். இதுபோல பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
உலகில் கோடான கோடி நபர்கள் வாழ்கிறார்கள். பல கோடி நபர்களுக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷ பாதிப்பு உள்ளது. இதில் பலர் சர்ப்பத்தை(பாம்பு) நேரில் கூட பார்த்து இருக்க மாட்டார்கள். பின் எவ்வாறு சர்ப்ப தோஷம் ஏற்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். இவைகள் கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது, நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, திருடுவது, கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுவது, தவறான வைத்தியம் செய்வது, பொய்யான வதந்தியை பரப்புவது, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது, கோவில் சொத்தை அபகரிப்பது பசுக்களை, விலங்குகளை வதைப்பது இயற்கையை மாசுபடுத்துவது நோயை பரப்புவது, வீண் வதந்தியை கிளப்புவது போன்ற காரணங்களால் தான் சர்ப்ப, கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
ராகு மற்றும் கேது என்பது முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.
இதை அறிவியல் ரீதியாக கூறினால் மனிதர்களின் மரபணுவில் உள்ள 46 குரோமோசோம்கள் ராகு- கேதுக்களின் கலவைகளாகும். குரோமோசோம்கள் என்பவை ஒருவரின் உயரம், தோல், முடி, கண்விழி ஆகியவற்றின் நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரை வியாதி போன்ற அனைத்து குணங்களும் பதிவாகி இருக்கும். 23 குரோமோசோம்கள் தந்தை வழியை குறிப்பவை (ராகு) மற்றும் 23 குரோமோசோம்கள் தாய் வழியை குறிப்பவை (கேது). முன்னோர்கள் செய்த பாவங்களை ராகு-கேதுக்கள் என்ற பாம்புகளின் பிடியில் சிக்கி 33 ஆண்டுகள் அனுபவித்து பல அனுபவங்கள் பெற்று தோஷ நிவர்த்தி பெறுவதாகும்.

நல்ல மனம் கொண்டவர்கள் பாதிக்கப்பபட்டு அவர்கள் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் சாபமாக களமிறங்கும்.
தோஷம் தீரும் காலம்:- தோஷம் வேறு சாபம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தோஷத்திற்கு பரிகாரம் செய்தால் தீர்வு உண்டு. சாபத்திற்கு தீர்வு காண்பது கடினம்.
சாபத்தின் தன்மையே வேறு. ஒருவர் பாவ காரியத்தை செய்யும் போது பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களை வேதனையுடனோ கண்ணீருடனோ சபிப்பது தான் சாபம். சாபத்தை போக்கிக்கொள்வது அத்தனை சுலபமல்ல. காரணம் பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மட்டுமே பாவம் செய்தவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
பாதிப்பிற்கு ஏற்ப சாபம் ஒரு கட்டத்தில் வேலை செய்யும். தவறு செய்தவர், தான் செய்த தவறுக்கு வருந்தி, திருந்தி, மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால் சாபத்தின் கடுமை ஓரளவு நீங்க வாய்ப்புண்டு. இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பாதிப்பை செய்தவரும் பாதிக்கப்பட்டவரும் இன்னார் தான் என்று தெரிந்து அவர்கள் மறுபடியும் சந்திக்கும் போது மட்டுமே இது சாத்தியப்படும். சாப நிவர்த்திக்கு வழி உண்டு. ஆனால், ஜென்ம ஜென்மமாக சில சாபங்கள் தொடர்ந்து வரும். அதற்கு எங்கே போய் யாரிடம் மன்னிப்பு கேட்பது?
என்ன வாசகர்களே காஞ்சனா படம் பார்த்தது போல் இருக்கிறதா? பெண் சாபத்தை மட்டும் பிரதானமாக ஜோதிட உலகம் விமர்சிக்கிறதே? ஆண் சாபத்தை ஏன் கண்டு கொள்வது இல்லை என கேட்பதும் புரிகிறது. பெண்கள் மன வலிமை இல்லாதவர்கள். சிறிய தோல்வியை கூட தாங்கும் சக்தி அற்றவர்கள். அவர்களின் ஆயுதமே கண்ணீரும் சாபமும் தான்.
பெண்கள் கண்ணீர் விட்டாலே ஸ்திரீ சாபம் ஒட்டிக் கொள்ளும். ஆண்கள் மனம், உடல் வலிமை பெற்றவர்கள். எளிதில் தவறை, துரோகத்தை மறந்து மன்னித்து விடும் மனப்பக்குவம் உள்ளவர்கள். கடுமையான பாதிப்பு இருந்தால் ஆண் சாபமும் பாதிப்பை தரும். பெண்களால் ஆண்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் நிச்சயமாக ஆண் சாபமும் தண்டனையை பெற்றுத்தரும். நல்ல மனம் கொண்டவர்கள் பாதிக்கப்பபட்டு அவர்கள் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் சாபமாக களமிறங்கும்.

பழனி பகுதியை ஆண்ட மன்னர்கள் முருகப்பெருமானுக்காக இடைவிடாது பூஜைகள் பல செய்தும், நிலங்களை தானமாகவும் வழங்கினர். இதனை கல்வெட்டுகள் விளக்குகின்றன.
முருக பக்தர்கள் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களில் வேண்டுதலோடு காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னரும் முருகனை வழிபட்டு உண்டியலில் பக்தியோடும், மகிழ்ச்சியோடும் காணிக்கைகளை செலுத்துகின்றனர். இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. காணிக்கைகளை அளிப்பதால் செல்வம் பெருகும், சேவல், புறா போன்ற பறவைகளை காணிக்கையாக செலுத்துவதால் நோய்கள், பில்லி, சூனியம், தரித்திரம் உள்ளிட்ட தீய வினைகள் நீங்கி ஆயுள் பெருகும்.
விவசாயிகள் தங்கள் உழவு செழிக்க வேண்டும் என்பதற்காக பசு, எருது போன்றவற்றையும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். இதனால் வேளாண்மை செழிப்பதோடு, குடும்ப கஷ்டங்கள் விலகி தொழிலில் உற்பத்தி பெருகும். அதேபோல் முருகன் கோவிலில் அன்னதானம் என்பது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்னதானம் செய்வதால் ஆயுள் பெருகும், குடும்பத்தில் முருகப்பெருமானே ஆண் குழந்தையாக பிறப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பழனி பகுதியை ஆண்ட மன்னர்கள் முருகப்பெருமானுக்காக இடைவிடாது பூஜைகள் பல செய்தும், நிலங்களை தானமாகவும் வழங்கினர். இதனை கல்வெட்டுகள் விளக்குகின்றன. நிலங்களை காணிக்கையாக தானம் செய்வதால் தலைமுறைகள் சிறக்கும்.
ஜே.பி.சரவணன், தலைவர் பழனி நகர அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு.