என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- தற்போது ஞானத்தின் மூலமாக இதன் சிறப்புகள் ஒவ்வொன்னறாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
- அதாவது சித்தர்களின் பாடல்களை தேடிப்பிடித்து படித்து பொருள் உணர்ந்தபோது தோரணமலையின் பல சிறப்புகள் தெரியவந்தது.
தோரணமலை முருகன் கோவில் சித்தர்களோடு தொடர்புடையதாகவும், சித்தர்களின் அதிர்வலைககள் நிறைந்ததாகவும் விளங்குகிறது.
அதோடு இந்த மலை மூலிகை வனமாகவும் காட்சி அளிக்கிறது.
இந்த மலையில் சிறப்புகள் சில யுகங்கள் தெரியாமல் போயிருந்தது.
தற்போது ஞானத்தின் மூலமாக இதன் சிறப்புகள் ஒவ்வொன்னறாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதாவது சித்தர்களின் பாடல்களை தேடிப்பிடித்து படித்து பொருள் உணர்ந்தபோது தோரணமலையின் பல சிறப்புகள் தெரியவந்தது.
முருகப்பெருமானின் அருளோடு மூலிகைகள் நிறைந்தும் சுனைகள் சூழ்ந்தும் காணப்படும் இம்மலையில் எப்போதும் சித்தர்களின் அதிர்வலைகள் இருந்து கொண்டே இருப்பதால் பக்தர்கள் இங்கு வந்தால் வேண்டியவை நிறைவேறுகிறது.
இக்கோவில் தென்காசி அம்பாசமுத்திரம் சாலையில் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.
- இன்னும் சொல்லப்போனால் முருகனைவிட அதி முக்கியத்துவம் பெற்று விளங்குகிறார், இங்குள்ள விநாயகர்.
- அவருக்கு வல்லப விநாயகர் என்று பெயர். அமர்ந்த நிலையில் கிழக்கு நோக்கி இவர் அருள்பாலிக்கிறார்.
எல்லா முருகன் மலைக் கோவிலிலும் அடிவாரத்தில் விநாயகர் இருப்பார்.
அதேபோல் தோரண மலையின் அடிவாரத்திலும் விநாயகர் பெருமானுக்கு தனி சன்னதி உள்ளது.
ஆனால் மற்ற கோவில்களில் எல்லாம் பெயரளவுக்குத்தான் விநாயகர் சன்னதி இருக்கும்.
அதாவது முருகனை வழிபட செல்லும்முன் அவரது அண்ணனும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த விநாயகரை அமைத்து இருப்பார்கள்.
ஆனால் தோரணமலையை பொறுத்தவரை மலைமேல் உள்ள முருகன் சன்னதிக்கு எந்த விதத்திலும் குறையாத வகையில் விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் முருகனைவிட அதி முக்கியத்துவம் பெற்று விளங்குகிறார், இங்குள்ள விநாயகர்.
அவருக்கு வல்லப விநாயகர் என்று பெயர். அமர்ந்த நிலையில் கிழக்கு நோக்கி இவர் அருள்பாலிக்கிறார்.
அந்த காலத்தில் இங்கும் விநாயகர் சன்னதி மட்டுமே இருந்துள்ளது. அதன்பின் சன்னதி முன்பு மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.
அந்த மண்டபத்தின் முன்பு இரண்டு யானைகள் நம்மை வரவேற்பது போல் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மண்டபத்தில் முன்பு இடதுபுறம் தேங்காய் சூறை (விடலை) போடுவதற்கான தொட்டி கட்டப்பட்டு உள்ளது.
சன்னதியை சுற்றி பிரகாரம் சிறப்புற அமைக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சன்னதிக்கு தென்கிழக்கு பகுதியில் மடப்பள்ளி கட்டப்பட்டு உள்ளது.
அந்த விநாயகர் சன்னதியில்தான் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், நடராஜர் உற்சவர்கள் உள்ளனர்.
- மலையில் உச்சிப்பகுதியை அலங்கரிக்கும் பெரிய பாறை ஒரு யானை படுத்திருப்பது போல காட்சி அளிக்கும்.
- இதனால் இதனை யானை மலை என்று அழைப்பார்கள்.
எழில் கொஞ்சும் இயற்கைகளை தன்னகத்தே கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் பொதிகை மலை உள்ளது.
அதற்கு வடக்கே, பொங்கி விழும் அருவிகள் ஆர்ப்பரிக்கும் குற்றாலம்.
இவை இரண்டுக்கும் நடுவே அமந்துள்ளது தான் தோரணமலை.
மலையில் உச்சிப்பகுதியை அலங்கரிக்கும் பெரிய பாறை ஒரு யானை படுத்திருப்பது போல காட்சி அளிக்கும்.
இதனால் இதனை யானை மலை என்று அழைப்பார்கள்.
யானைக்கு வாரணம் என்றும் பெயர் உண்டு. எனவே இதனை வாரணமலை என்று அழைத்தனர்.
அதுவே தோரணமலை என்று மறுவி அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த மலையில் சுனைகளும், மூலிகைகளும் தோரணங்களாக விளங்கு அழகு சேர்க்கின்றன.
அந்த வகையிலும் தோரணமலை என்ற பெயர் மிக பொருத்தமாக அமைந்துள்ளது.
- தினமும் காலையில் விநாயகருக்கும் முருகப்பெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும்.
- பகலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கார்த்திகை நட்சத்திரம் போன்ற முக்கியமான நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
தோரணமலையில் விநாயகர் சன்னதி நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். மாலையில் 5 மணி வரை திறந்திருக்கும்.
மலை மீதுள்ள சன்னதி காலை 6 மணி திறந்து மாலை 4 மணி திறந்து இருக்கும். ஆனால் தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற முக்கிய நாட்களில் இரவு நேரத்திலும் பக்தர்கள் மலை ஏறலாம்.
தினமும் காலையில் விநாயகருக்கும் முருகப்பெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும்.
பகலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கார்த்திகை நட்சத்திரம் போன்ற முக்கியமான நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
தமிழ்மாத கடைசி வெள்ளி அன்று பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
செவ்வாய், வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம் காலங்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். பவுர்ணமி அன்று காலையில் கிரிவலம் செல்கிறார்கள்.
தைப்பூசம், வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத்தன்று பக்தர்கள் அலகு குத்தியும் பால்குடம் எடுத்தும் வருகிறார்கள். அன்று முருகப்பெருமானின் திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடைபெறும்.
தென்மாவட்டங்களில் சித்திரை முதல் நாளும், ஐப்பசி முதல்நாளும் புனித நாட்களாக கொண்டாடப்படுகிறது.
அந்த காலத்தில் இந்த இரு நாட்களும் பாபநாசம், திருக்குற்றாலம் போன்ற தலங்களுக்கு பக்தர்கள் செல்வார்கள்.
தற்போது இந்த நாட்களில் தோரணமலைக்கும் திரளாக வருகிறார்கள்.
தமிழ் மாத கடைசி வெள்ளி அன்று விவசாயம் செழிக்க ஸ்ரீவர்ணகலபூஜை நடத்தப்படுகிறது.
இதற்காக மலைமீதுள்ள சுனையில் இருந்து பக்தர்கள் கலசங்களில் தண்ணீர் கொண்டு வருகிறார்கள்.
கோவிலுக்கு வடபுறம் உள்ள மேடையில் முருகன், வள்ளி, தெய்வானையை எழுந்தருளச் செய்து உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அதன்பின் விவசாயம் செழிக்க ஸ்ரீவர்ணகல பூஜை நடத்தப்படுகிறது.
திருக்கல்யாணமும் இங்குதான் நடைபெறும்.
- தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் உலக மக்கள் நோய் நொடியின்றி வாழ தமிழ் மருத்துவம் என்ற சித்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
- தமிழ் மருத்துவம் என்பது இந்த கால மருத்துவப் படிப்பை போல் கிடையாது.
கைலாய மலையில் சிவபெருமானின் திருமணம் நடைபெற்றபோது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா?
அப்போது உலகை சமன் செய்ய தென்திசைநோக்கி சிவபெருமானால் அனுப்பப்பட்டவர்தான் குறுமுனி.
கும்பமுனி, அகத்தீசர் என்று அழைக்கப்படும் அகத்தியர் ஆவார்.
இவர் வட திசையில் இருந்து தென்திசை வந்து அமர்ந்தபோது ஆதி மொழி என்னும் மூல முதல் மொழியாம் தமிழ் மொழியை உபதேசித்தவர் தட்சிணாமூர்த்தி என்ற சிவபெருமானே ஆவார்.
பின் பொதிகை மலையில் அகத்தியர் ஞான நிலையில் இருந்தபோது தமிழ் கடவுளாகிய குமரக்கடவுள் எனும் முருகப்பெருமானிடமும் தமிழை கற்று பிரணவத்தின் பொருள் அறிந்து அகத்தியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலை இயன்றினார்.
பின் அதனை பின்பற்றிதான் தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கண நூல் தந்தார்.
தற்போது அகத்தியம் கண்ணில் படாமல் போனாலும் அவரது சீடர் தொல்காப்பியரின் படைப்பே தமிழ் இலக்கணத்துக்கு இன்றும் பாடமாக விளங்குகிறது.
தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் உலக மக்கள் நோய் நொடியின்றி வாழ தமிழ் மருத்துவம் என்ற சித்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
தமிழ் மருத்துவம் என்பது இந்த கால மருத்துவப் படிப்பை போல் கிடையாது.
இந்த மண் முதல் விண் வரை உலக இயகத்தின் அனைத்து தத்துவங்கயையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான் ஒருவர் முழு சித்த மருத்துவ பண்டிதன் ஆக முடியும்.
இதற்காக அகத்தியர் ஒரு லட்சத்துக்கும் மேலான கிரகந்தங்களை வகுத்து தந்துள்ளார்.
அவர், தான் ஆய்ந்து அறிந்த மருத்துவ குறிப்புகளையும் மூலிகை குறிப்புகளையும் பாசான குறிப்புகளையும் கொண்டு "அகத்திய வைத்திய சேகரம்" என்ற நூலை நமக்குத் தந்து அருளியுள்ளார்.
- அக்காலக் கட்டங்களில் அதாவது ஆதியில் மலையும் மலைசார்ந்த இடங்களும்தான் பாட சாலைகளின் அமைவிடமாக விளங்கின.
- அந்த வகையில் உலகிலேயே முதல் மருத்துவ பாடசாலை தொடங்கப்பட்ட இடமே தோரணமலை என்று தோரணகிரியாகும்.
நாம் பாடம் படிக்க பள்ளிகளையும், கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் நாடுவது இன்றைய காலமுறையாக உள்ளது.
இதற்கு முந்தைய காலத்தில் திண்ணையிலும் மர நிழல்களிலும் மண்ணிலும் அமர்ந்து பாடம் கற்றார்கள்.
அதற்கும் முற்பட்ட காலங்களில் குருகுலம்தான் பள்ளிக்கூடங்களாகவும் கல்விச்சாலைகளாகவும் திகழ்ந்தன.
அக்காலக் கட்டங்களில் அதாவது ஆதியில் மலையும் மலைசார்ந்த இடங்களும்தான் பாட சாலைகளின் அமைவிடமாக விளங்கின.
அந்த வகையில் உலகிலேயே முதல் மருத்துவ பாடசாலை தொடங்கப்பட்ட இடமே தோரணமலை என்று தோரணகிரியாகும்.
இதைக் கேள்விப்படும்போதே நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகேதான் இந்த தோரணமலை என்ற தோரணகிரி உள்ளது.
இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக்கோவிலில் முருகப் பெருமான் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.
இறையருளும் மூலிகை வாசமும் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலக் கட்டத்தில் பல பட்டங்கள் வழங்கும் மருத்துவ பாடசாலையாகவும் ஆராய்ச்சி மையமாகவும் விளங்கியது என்கிறார் சித்தர்கள் மற்றும் சித்தமருத்துவ ஆராய்ச்சியாளர் எஸ்.கே.டி.பி.காமராஜ் அவர்கள்.
- ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.
- குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
1. ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.
2. குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
3. பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, இடுப்புவலி குணமாகும்.
4. பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை தீரும்.
5. தீராத தலைவலி, இடுப்புவலி நீங்கி நலம் உண்டாகும்.
6. உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய் சரியாகும்.
7. வீண் பழி, அவமரியாதை அகன்று புகழ் உண்டாகும்.
8. வாக்கு பலிதமும், ராசியோகமும் உண்டாகும்.
9. எந்த பிரச்சனையானாலும் சரியான முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும்.
- அர்ச்சனை செய்தபின் மூலமந்திரமாக “ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!” என்று 108 முறை கூறி வழிபட வேண்டும்.
- நிவேதனமாக மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவற்றை படைக்க வேண்டும்.
அகத்தியரிடம் பேரன்பு கொண்ட சீடரான தேரைய சித்தரை வணங்க அகப் புறத்தூய்மையுடன் அழகிய சிறு பலகையை செம்மண்ணினால் மெழுகிக் கோலமிட்டு மஞ்சள் குங்குமம் இடவேண்டும்.
அவ்வாசனத்தின் மேல் தேரையரின் படம் வைத்து வெள்ளை அல்லது ரோஜா வண்ண வஸ்திரம் அணிவித்து அல்லது படைத்து அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை நான்கு அல்லது ஐந்து முக தீபமேற்றி வழிபட வேண்டும்.
முதலில் தியான செய்யுளை கூறி மூலிகை இலைகளினால் அர்ச்சனை செய்து பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூற வேண்டும்.
1. குரு மெச்சிய சீடரே போற்றி!
2. தேரையை அகற்றிய தேரையரே போற்றி!
3. சிவனை பூசிப்பவரே போற்றி!
4. சங்கடங்களை போக்குபவரே போற்றி!
5. சஞ்சலங்களை தீர்ப்பவரே போற்றி!
6. சாந்த சொரூபரே போற்றி!
7. நோய்தீர்க்கும் மருந்தே போற்றி!
8. ஞானம் அளிக்கும் ஞானியே போற்றி!
9. சித்த சுத்தியுடையவரே போற்றி!
10. சகல பாபங்களையும் போக்குபவரே போற்றி!
11. குறிப்பறிந்து செய்யும் குணசீலரே போற்றி!
12. வெள்ளை வஸ்திரம் தரிப்பவரே போற்றி!
13. துக்கத்தை போக்குபவரே போற்றி!
14. கண் ஒளி தந்த கருணையே போற்றி!
15. குறை தீர்க்கும் நிறையே போற்றி!
16. பாண்டியன் கூன் நிமிர்த்திய தேரையரே போற்றி! போற்றி!
அர்ச்சனை செய்தபின் மூலமந்திரமாக "ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!" என்று 108 முறை கூறி வழிபட வேண்டும்.
நிவேதனமாக மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவற்றை படைக்க வேண்டும்.
இவரை பூசிக்க ஞாயிற்றுக் கிழமை சிறந்தது.
- மலை அடிவாரத்தில் விநாயகர் சன்னதிக்குப் பின்புறம் ஒரு பாறையில் பாலமுருகன் சன்னதி உள்ளது.
- அந்த முருகன் சுதையாக வடிவமைக்கப்பட்டு அழகிய வண்ணத்தில் காட்சி தருகிறார்.
தோரணமலையின் உச்சியில் முருகனுக்கும், அடிவாரத்தில் விநாயகருக்கும் பிரதான சன்னதிகள் உள்ளன.
மலை உச்சியில் கிழக்கு திசையில் பத்திரகாளி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.
பத்திரகாளிஅம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அந்த சன்னதியை சுற்றி வந்து வழிபட வசதி உள்ளது.
தோரணமலையை வெகு தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த சன்னதிதான் நம் கண்ணுக்குத் தெரியும்.
மலைமீதுள்ள முருகன் கோவில்களில் எல்லாம் முருகனின் பாதம் அமையபெற்று இருக்கும்.
அதேபோல் இங்கும் மலையின் மேல் பாறையில் பாதச் சுவடுகள் செதுக்கப்பட்டு உள்ளன.
முருகன் ஒரு பாதத்தை நேராக பதித்தபோலவும், இன்னொரு காலின் முட்டை பதித்திருப்பது போலவும், வேல் ஊன்றிய குழியும் அங்கே காணப்படுகிறது.
இதனை சுற்றி சன்னதி அமைக்கும் மேற்கொள்ளப்பட்டு ஏதோ காரணத்தால் பணி நிறைவுபெறாமல் நின்றுபோனது.
மலை அடிவாரத்தில் விநாயகர் சன்னதிக்குப் பின்புறம் ஒரு பாறையில் பாலமுருகன் சன்னதி உள்ளது.
அந்த முருகன் சுதையாக வடிவமைக்கப்பட்டு அழகிய வண்ணத்தில் காட்சி தருகிறார்.
அந்த சன்னதிக்கு செல்ல படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதைப்பார்க்கும்போது இதுவும் ஒரு தனி முருகன் மலையோ என்று எண்ணத்தோன்றும்.
மலை ஏற முடியாதவர்கள் இந்த முருகனை வணங்கிவிட்டு வருகிறார்கள்.
விநாயகர் சன்னதிக்கு வடபுறம் இரண்டு சுனைகள் உள்ளன.
அந்த இரண்டு சுனைக்கு அருகேயும் சப்த கன்னியர்கள் சிலை உள்ளது.
இதில் வடபுறம் உள்ள சப்த கன்னியருக்கு தனி சன்னதியும் பிரகாரமும் அமைக்கப்பட்டு உள்ளது.
விநாயகர் சன்னதிக்கு கிழக்கே ஈசான மூலையில் நவக்கிரக சன்னதி உள்ளது.
இங்கும் பக்தர்கள் சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதுதவிர கோவிலின் வடபுறம் சிவன், கிருஷ்ணர், லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் சுதை வடிவில் அருள்பாலிக்கிறார்கள்.
இந்த சிலைகள் கண்ணுக்கு அழகாக வண்ணத்தில் அமைந்துள்ளன.
மலைப்பாதையில் ஓரிடத்தில் சிறிய ஊற்று வடிவில் சுனை ஒன்று ஒன்று இருகிறது.
அந்த இடத்தில் சிறிய சிவலிங்கம் இருக்கிறது.
அதேபோல் மலை ஏறும் பக்தர்கள் களைப்படையாமல் இருக்க வழியில் ஓரிடத்தில் வழிபடுவதற்கு பீடம் அமைத்துள்ளார்கள்.
- தோரண மலைக்கு வடக்கே ஜம்பு நதி உற்பத்தியாகிறது. தென்புறம் ராமநதி உற்பத்தியாகிறது.
- இந்த இரண்டு நதிக்கு இடையே இந்த புண்ணித்தலம் அமைந்துள்ளது.
தோரண மலைக்கு வடக்கே ஜம்பு நதி உற்பத்தியாகிறது. தென்புறம் ராமநதி உற்பத்தியாகிறது.
இந்த இரண்டு நதிக்கு இடையே இந்த புண்ணித்தலம் அமைந்துள்ளது.
இந்த இருநதிகளும் தோரணமலை முருகனுக்கு மாலையாக வந்து கொண்டிருக்கிறது.
மேலும் இந்த நதிகளுக்கு இடையே தோரண மலை மட்டுமின்றி கடையத்திற்கு மேற்கே நித்யகல்யாணி அம்மன், பத்திரகாளி அம்மன், தலைமலை அய்யன், சூட்சமுடையான் போன்ற கோவில்களும் உள்ளன.
ஆனால் இந்த பகுதியில் மக்கள் வாழும் குடியிருப்புகள் அதிகம் கிடையாது.
- கைலாய மலையில் சிவபெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது.
- அப்போது அங்கு தேவர்கள் பலரும் கூடியதால் அந்த இடம் தாழ்ந்து தெற்கு உயர்ந்துவிடுகிறது.
தோரணமலைக்கு அகத்தியர் ஏன் வந்தார்?
எப்படி இதன் சிறப்பை அறிந்தார்? என்பதை புராண வரலாறு மூலம் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
கைலாய மலையில் சிவபெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது.
அப்போது அங்கு தேவர்கள் பலரும் கூடியதால் அந்த இடம் தாழ்ந்து தெற்கு உயர்ந்துவிடுகிறது.
இதனை சரி செய்ய சிவபெருமான் அகத்தியர் என்னும் குருமுனியை தென் திசை நோக்கி அனுப்புகிறார்.
அவர் பொதிகை மலை வந்ததும் நிலம் சரியானது.
இங்கேதான் முருகனிடம் இருந்து அகத்தியர் தமிழ் கற்றதாகவும் அதன்பின் தமிழுக்கு இலக்கணம் படைத்ததாவும் கூறப்படுகிறது.
அகத்தியர் தென்பொதிகைக்கு இந்த திருக்குற்றாலம் மற்றும் தோரணமலை வழியாத்தான் வந்திருக்க முடியும்.
அப்படி வரும்போது தோரணமலையின் மூலிகை காட்டையும், சுனைகள் நிறைந்து இருப்பதையும் கண்டு வியந்திருக்க வேண்டும்.
மேலும் பல இடங்களில் பாதுகாப்பாக தங்குவதற்கு பாறை குகைகள் இருப்பதையும் அறிந்தார்.
தமிழுக்கு இலக்கணம் வகுத்தபின்னர், இந்த தோரணமலை பகுதியை தேர்வு செய்து சித்தர்களுக்கு தமிழ், சித்தவைத்தியம் உள்பட பல்வேறு நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கும் பாடசாலையை அமைத்துள்ளார்.
- பொதுவாக பெரும்பாலான கோவில்கள் கிழக்கு நோக்கியே இருக்கும்.
- அந்த வகையில் இந்த குகை சன்னதியும் கிழக்கு நோக்கிதான் அமைந்துள்ளது.
தோரணமலை முருகன் சன்னதி மனித கட்டுமானத்தில் உருவானது அல்ல.
இயற்கையாக அமைந்த குகைகளே மூலஸ்தானம்.
பெரும் பாறையின் இடையே அமைந்த இந்த குகை போகப்போக சுருங்கிக்கொண்டே செல்கிறது. அதன் முடிவு பற்றி யாரும் அறியார்.
பொதுவாக பெரும்பாலான கோவில்கள் கிழக்கு நோக்கியே இருக்கும்.
அந்த வகையில் இந்த குகை சன்னதியும் கிழக்கு நோக்கிதான் அமைந்துள்ளது.
அந்த சன்னதியில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
காலையில் இந்த முருகனை சூரியன் தன் ஒளிக் கதிர் என்னும் கரங்களால் தொட்டு வழிபடுகிறார்.
கோவில் பாதுகாப்புக்காக குகை சன்னதியின் முகப்பு பகுதியில் செங்கல்கற்களால் சுவர் அமைத்து கதவு போடப்பட்டு உள்ளது.
ஆரம்பத்தில் முருகனை வழிபட செல்லும் பக்தர்களின் வசதிக்காக அந்த சன்னதியின் முன்பு சிமெண்டினால் தளம் அமைத்து உயர்த்தப்பட்டிருந்தது.
அதன்பின் சன்னதி முன்பு சிறிய அளவிலான மண்டபம் கட்டுப்பட்டது.
அந்த மண்டபத்தில் முருகனுக்கு நேர் எதிரே மயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இக்கிறது.
அந்த மண்டபத்தில் நின்று பக்தர்கள் வழிபடலாம்.
அந்த மண்டபத்தில் பக்தர்கள் நேர்த்திகடனாக வழங்கி மணிகள் பல தொங்கவிடப்பட்டு உள்ளன.






