என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • பலவகையான பல்லக்குகள், கடிவாளங்கள் என பல்வேறு வகையான பொருட்களும் காட்சிகளும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் இடம்பெற்றுள்ளன.
    • துப்பாக்கி வீரர்களுடன் வில் ஏந்திய வீரர்களும் படையில் இடம்பெற்றிருந்தனர். திருப்புடைமருதூர் ஆலய ஓவியம், சிற்பங்களில் இதை உணர முடியும்.

    வெளிநாட்டுக் கப்பல்களின் வருகை, குதிரைகள் கப்பல்களின் வாயிலாக வருதல் ஆகியனவற்றை வெளிப்படுத்தல், இரண்டாவதாக பணியாளர்களுடன் உயர் அதிகாரிகள் நிற்கும் காட்சி, கொடி பிடிப்போர், பல்லக்குத் தூக்கிகள், இசைக்கருவிகளுடன் நிற்கும் இசைவாணர்கள் ஆகியோர் குறித்தும் திருப்புடைமருதூர் ஆலய ஓவியங்களில் காணலாம்.

    படைவீரர் அணிவகுத்துச் செல்லல், யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை அவற்றின் அமைப்பு, பயன்படுத்தும் போர்க்கருவிகள், சண்டையிடும் முறை ஆகியனவற்றையும் சில ஓவியங்களில் காண முடிகிறது.

    குதிரைகளோடு வரும் கப்பலின் ஓவியம், மாலுமிகளின் ஓவியம், அரேபிய வணிகர், போர்ச்சுகீசிய வீரர்கள், மன்னன் முன்பு குதிரைகளுக்குப் பயிற்சி அளித்தல், துப்பாக்கிகளுடன் அணிவகுத்துச் செல்லல், போர்ச்சுகீசியர் குழு மன்னனைச் சந்தித்தல் ஆகிய காட்சிகள், வெளிநாட்டவருடன் நாயக்க மன்னர்கள் கொண்டிருந்த தொடர்பினை வெளிப்படுத்துவதுடன் அவர்களது ஆயுதங்களையும் ஓவியங்கள் அறியச் செய்கின்றன.

    வளையல் வியாபாரி, விலை உயர்ந்த கற்கள் விற்கும் வியாபாரி, ஆடு மேய்ப்பவர், சுமை தூக்குபவர், மீன் பிடிப்பவர், மீன்பிடி வலை, பல வகையான இசைக் கருவிகள், இசைக்கருவிகளுடன் அணிவகுத்துச் செல்லும் இசைவாணர்கள், நடனமாதர், கோலாட்டம் ஆடும் பெண்கள், வீரநடனங்கள், கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நடனமாது, சிறுத்தையுடன் சண்டையிடும் வீரர்கள், வில் வீரர்கள், யானையைப் பிடித்தல், எருதுச் சண்டை, சேவல் சண்டை, ஆட்டுக்கிடாய் சண்டை, பறவை பிடிப்பவன், பாம்பாட்டி, மல்யுத்தம் புரிவோர், பலவகையான பல்லக்குகள், கடிவாளங்கள் என பல்வேறு வகையான பொருட்களும் காட்சிகளும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் இடம்பெற்றுள்ளன.

    16ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த பழங்காலத் துப்பாக்கியில் ஒருமுறை சுட்டபின் மறுமுறை சுட அதன் வெப்பம் ஆற வேண்டும். அத்துடன் வெடிமருந்தை மீண்டும் திணிக்க வேண்டும்.

    இதனால் ஒருமுறை சுட்டபின் மறுமுறை சுட கால இடைவெளி ஏற்படும். ஆனால் வில்லில் இருந்து அம்பு எய்ய இவ்வளவு கால இடைவெளி ஏற்படுவதில்லை.

    தொடர்ச்சியாக அம்பு எய்யலாம். இதனால் துப்பாக்கி வீரர்களுடன் வில் ஏந்திய வீரர்களும் படையில் இடம்பெற்றிருந்தனர். திருப்புடைமருதூர் ஆலய ஓவியம், சிற்பங்களில் இதை உணர முடியும்.

    • இப்படங்களை கண்ணால் பார்ப்பதன் வாயிலாகவே திருப்புடைமருதூர் ஓவியங்களின் சிறப்பை புரிந்து கொள்ள முடியும்.
    • இந்த ஓவியங்கள் வாயிலாக அவை வரையப்பட்ட காலத்தைய சமுதாயத்தை அறிந்து கொள்ளலாம்.

    திருப்புடைமருதூர் கோவிலில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களையும் செதுக்கப்பட்டுள்ள மரச்சிற்பங்களையும் பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தினர் தொழில்நுட்ப நேர்த்தியுடன் 1980 மற்றும், 1985 ல் புகைப்படங்களாக எடுத்துள்ளனர்.

    பின் 2008ல் டிஜிட்டல் புகைப்பட கருவியின் துணையுடன் புகைப் படங்கள் எடுத்துள்ளனர். இவ்வாறு இவர்கள் எடுத்துள்ள வண்ணப் புகைப்படங்களின் எண்ணிக்கை 2200 ஆகும்.

    இப்படங்களை கண்ணால் பார்ப்பதன் வாயிலாகவே திருப்புடைமருதூர் ஓவியங்களின் சிறப்பை புரிந்து கொள்ள முடியும்.

    இந்த ஓவியங்கள் வாயிலாக அவை வரையப்பட்ட காலத்தைய சமுதாயத்தை அறிந்து கொள்ளலாம்.

    கலை வரலாற்றில் ஓவியர்கள் சிற்பிகள் ஆகியோர் தம் காலப் பண்பாட்டையே தம் படைப்புகளில் பதிவு செய்துள்ளனர்.

    புராணம், சமயம் தொடர்பான படைப்புகளும் இப்போக்கிற்கு விதிவிலக்கல்ல.

    இதே வழிமுறையில்தான் திருப்புடைமருதூர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அந்த ஓவியர்கள் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பு அவற்றில் இடம்பெற்றுள்ளன.

    திருஞானசம்பந்தர் பல்லக்கில் வரும் காட்சியில் இடம்பெறும் பல்லக்கு, ஓவியர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பல்லக்கின் அமைப்பைக் கொண்டுள்ளது.

    அவரை வரவேற்கும் அரசு அதிகாரிகள் நாயக்கர்கால அதிகாரிகளைப் போன்று ஆடை உடுத்தியுள்ளார்கள்.

    • பிற்காலத்தில் மருத மர வனமாக இருந்த இப்பகுதியை பாண்டிய மன்னன் ஒருவன் ஆட்சி செய்கிறான்.
    • அந்த மன்னன் ஒரு நாள் வேட்டையாட திருப்புடைமருதூர் மருத மர காட்டிற்குள் வந்த போது மான் ஒன்றை கண்டு துரத்துகிறான்.

    பிற்காலத்தில் மருத மர வனமாக இருந்த இப்பகுதியை பாண்டிய மன்னன் ஒருவன் ஆட்சி செய்கிறான்.

    அந்த மன்னன் ஒரு நாள் வேட்டையாட திருப்புடைமருதூர் மருத மர காட்டிற்குள் வந்த போது மான் ஒன்றை கண்டு துரத்துகிறான்.

    அந்த மானின் மீது அவன் அம்பை எய்ய, அந்த மானோ ஒரு மருத மர பொந்திற்குள் சென்று மறைகிறது.

    மறைந்த அந்த இடத்தை தோண்டுமாறு மன்னன் வீரர்களிடம் ஆணையிட, அவர்களும் அந்த இடத்தை தோண்டுகிறார்கள்.

    அப்போது அந்த இடத்தில் இருந்து ஒரு சிவலிங்கம் வெளிப்படுகிறது.

    அதனை பார்த்து அதிசயித்த மன்னனுக்கு, இந்த லிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து கோவில் கட்டுவாயாக என வானில் இருந்து அசரீரி குரல் கேட்கிறது.

    அதன்படி மன்னனும் திருப்புடைமருதூரில் திருக்கோவில் கட்டி அந்த இடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான் என்பது வரலாறு.

    இன்றைக்கும் தலபுராண வரலாற்றில் சொல்லப்பட்ட பிரம்ம தண்டத்தை முதலாம் கிழக்குச் சுற்றில் பரிவார தேவதை சன்னதியான சூரியன் சன்னதியில் கண்டு தரிசித்து மகிழலாம்.

    இத்தரிசனக் காட்சி வேறு எந்த தலங்களிலும் பார்க்க முடியாத ஒன்றாகும்.

    • முற்காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, மற்றும் அனைத்து தேவர்களும் சிவபெருமானை வழிபட சிறந்த இடம் ஒன்றை தேடினார்கள்.
    • அவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கம் காலப் போக்கில் மண் மூடி மறைந்து விடுகிறது.

    முற்காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, மற்றும் அனைத்து தேவர்களும் சிவபெருமானை வழிபட சிறந்த இடம் ஒன்றை தேடினார்கள்.

    அப்போது வானில் இருந்து ஒரு குரல், பிரம்மன் கையில் உள்ள தண்டத்தை கங்கை நதியில் விடுங்கள், அந்த தண்டம் எங்கு சென்று நிற்கிறதோ அதுவே சிறந்த இடம் என அசரீரியாக ஒலித்தது.

    அதன்படி பிரம்மன் தன் கையில் இருந்த தண்டத்தை கங்கையில் விட, அது அப்படியே மிதந்து கடலில் சென்று, தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தை அடைந்து அங்கிருந்து ஆற்றின் வழியே எதிர்த்து மேற்கு திசை நோக்கி சென்று திருப்புடைமருதூரில் நிலைபெற்றது.

    அந்த இடத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், சரசுவதி, மகாலட்சுமி மற்றும் தேவாதி தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த பிரம்ம தண்டத்தையும், சிவலிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்து வணங்கி சிவபெருமானின் அருளை பெற்று தேவலோகம் திரும்பினார்கள்.

    அவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கம் காலப் போக்கில் மண் மூடி மறைந்து விடுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது ஒரு சிவாலயமாயினும் ராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்கள் இங்குள்ளன.
    • கோவில் கதவில் தசரதரால் சிரவணன் கொல்லப்பட்ட சம்பவம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

    "காணி நிலம் வேண்டும் பராசக்தி" என்று மகாகவி பாரதி எந்த சக்தியிடம் வேண்டினாரோ, அந்த தியான நித்யகல்யாணி திருநெல்வேலி மாவட்டம் இந்தக் கடையம் வில்வவனநாதர் கோவிலில் அருள்பாலிக்கிறாள்.

    இது ஒரு சிவாலயமாயினும் ராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்கள் இங்குள்ளன.

    கோவில் கதவில் தசரதரால் சிரவணன் கொல்லப்பட்ட சம்பவம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

    பிரம்மனுக்கு சிவன் கொடுத்த வில்வபழத்தை மூன்றாக உடைத்த பிரம்மா ஒன்றைக் கைலாய மலையிலும், இன்னொன்றை மேருமலையிலும், மற்றொன்றை துவாத சாந்தவனத்திலும் நட்டார்.

    அந்த துவாத சாந்தவனப் பகுதியில்தான் வில்வவனநாதர் கோவில் உள்ளது.

    தற்போது கோவிலுக்குள் உள்ள வில்வமரத்தில் எப்போதாவது தான் காய்காய்க்கும். இதை உடைத்தால் உள்ளே சிவலிங்க பாணம் இருக்கும்.

    இத்தலத்து அம்மன் நித்யகல்யாணி என்பதால் எந்நாளும் எந்நேரமும் வரமருளுபவள்.

    வில்வவனநாதரையும் நித்யகல்யாணியையும் காணப்பெற்றோர் பெரும்பேறுபெற்றவர்களே!

    திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ. அல்லது தென்காசியில் இருந்து 20 கிமீ. தொலைவில் கடையம் உள்ளது.

    • தாமிரபரணி ஆறு இவ்விடத்தில் சமநிலை அடைவதால் உச்சிகால பூஜையில் தாமிரபரணியில் உள்ள மீன்களுக்கு நைவேத்திய உணவுகள் படைக்கப்படுகின்றன.
    • நவ கைலாயங்களில் முதல் தலமான இந்த பாபநாசம் சூரியனுக்குரியது.

    இந்திரனின் பாவத்தை நீக்கியருள் புரிந்ததால் இவ்வாலய சிவன் பாபநாசநாதர் என்றும் அம்பாள் உலகம்மை,விமலை என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர்.

    தாமிரபரணி ஆறு இவ்விடத்தில் சமநிலை அடைவதால் உச்சிகால பூஜையில் தாமிரபரணியில் உள்ள மீன்களுக்கு நைவேத்திய உணவுகள் படைக்கப்படுகின்றன.

    நவ கைலாயங்களில் முதல் தலமான இந்த பாபநாசம் சூரியனுக்குரியது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த காசிக்கு நிகரான பஞ்ச குரோச ஸ்தலங்களை வழிபட்டு ஈசனருள் பெற்றிடுவோம்.

    • காயம்பட்ட சுயம்பு மூர்த்தியென்பதால் அவரின் காயம் ஆற்றிடும் பொருட்டு சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது.
    • ருத்ராட்ச மேனியுடை கோமதி அம்பாள் வேண்டும் வரங்களை வாரி வழங்குகிறாள்.

    தாமிரபரணியாற்றங்கரையில் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே அமைந்துள்ள சிவாலயம் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்.

    இவ்வாலயத்தின் புராண பெயர் புடார்க்கினியீஸ்வரர்.

    காயம்பட்ட சுயம்பு மூர்த்தியென்பதால் அவரின் காயம் ஆற்றிடும் பொருட்டு சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது.

    ருத்ராட்ச மேனியுடை கோமதி அம்பாள் வேண்டும் வரங்களை வாரி வழங்குகிறாள்.

    "நாறும் பூவின் நடுவில் நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ" எனக்கேட்ட கருவூர் சித்தரின் வாக்கினைச் சாய்ந்து கேட்டதால் சுயம்புலிங்கமான நாறும்பூநாதர் சற்றே சாய்ந்தே காணப்படுகிறார்.

    தேடிவரும் பக்தர்களின் வேண்டுதல்களைச் செவி சாய்த்தருள்கிறார்.

    • இயந்திர வடிவில் நவக்கிரகங்கள், நாயுடன் கருவூராரும் காணப்படுவது மேலும் சிறப்பு.
    • அக்னி பகவான் வழிபட்ட ஈசனென்பதால் அக்னீஸ்வரர், வன்னியப்பர், வன்னீஸ்வரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.

    இத்திருக்கோவிலின் சுவாமி சன்னதி முன்பாக உள்ள தூணில் கர்ப்பமான நிலையில் ஒரு அம்பிகை அருள்பாலித்து வருகிறாள்.

    சுகப்பிரசவம் ஏற்படவும் விரைவில் திருமணம் நடைபெறவும், கால சர்ப்ப தோஷம், ராகு கேது தோஷம் போன்றவை நீங்கிடவும் இந்த அம்மன் அருள்புரிகிறாள்.

    இயந்திர வடிவில் நவக்கிரகங்கள், நாயுடன் கருவூராரும் காணப்படுவது மேலும் சிறப்பு.

    அக்னி பகவான் வழிபட்ட ஈசனென்பதால் அக்னீஸ்வரர், வன்னியப்பர், வன்னீஸ்வரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.

    பாபநாசத்திலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது இவ்வாலயம்.

    • கடனையாறு என்றழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இவ்வூரின் பெயர் கடம்பவனமாகும்.
    • மேலும் சிவசைலத்தில் அமைந்துள்ள சிவபெருமான் பூமிக்கு மேலே ஒருபாகமும், பூமிக்குக் கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    அம்பாசமுத்திரத்தில் இருந்து 15-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆழ்வார்குறிச்சியின் மேற்கே 6 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் அருள்புரிகிறார்.

    கடனையாறு என்றழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இவ்வூரின் பெயர் கடம்பவனமாகும்.

    எழுந்து நிற்கும் நிலையிலுள்ள நந்திகேசுவரரும், பரமகல்யாணி அம்மன் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி அமைந்திருப்பதும், நல்லருள் பாலிக்கும் நாயகனை நாம் நான்கு திசைகளில் இருந்தும் தரிசிக்கக்கூடியதும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு.

    மேலும் சிவசைலத்தில் அமைந்துள்ள சிவபெருமான் பூமிக்கு மேலே ஒருபாகமும், பூமிக்குக் கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    • தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை மானுடர்களும் பயன்பெற எண்ணி அம்பெய்தி உடைத்தார் ஈசன்.
    • அவ்வமுதம் பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரையில் பரவி ஐந்துதலங்களை உண்டாக்கியதால் “பஞ்ச குரோச ஸ்தலங்கள்” எனப்படுகின்றன.

    ஏழ்மையானோர் காசிக்கு சென்றுவர வசதி இல்லை என்பதற்காகவே உருவானவை பஞ்ச குரோச தலங்கள் எனப்படுகின்றன.

    குரோச என்பதற்குக் காசிக்கு நிகரான என்று பொருள்.

    தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை மானுடர்களும் பயன்பெற எண்ணி அம்பெய்தி உடைத்தார் ஈசன்.

    அவ்வமுதம் பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரையில் பரவி ஐந்துதலங்களை உண்டாக்கியதால் "பஞ்ச குரோச ஸ்தலங்கள்" எனப்படுகின்றன.

    ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும்.

    திருநெல்வேலியில் 25கி.மீ தொலைவிலேயே காசிக்கு நிகரான இந்தப் பஞ்சகுரோச ஸ்தலங்களும் அமைந்துள்ளன.

    • இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிர்ப்பதை உணர முடியும்.
    • மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து விடுகிறது.

    பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும்.

    தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன.

    இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அரூப நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிர்ப்பதை உணர முடியும்.

    மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து விடுகிறது.

    எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும்.

    இத்தகைய சிறப்புடைய இந்த புண்ணியமலை உச்சியில் முக்கியமான வசதிகள் இல்லாதது மிகப்பெரும் மனக்குறைவாக உள்ளது.

    முருகப்பக்தர்கள் நினைத்தால் மூன்று மாதத்தில் அந்தத்திருப்பணிகளை செய்து முடித்து விடமுடியும்.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோரணமலையில் இந்தத்திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பமும் நிச்சயம் வாழையடி வாழையாக தழைக்கும்.

    • தோரணமலை உச்சியில் முருகப்பெருமான் குகையில் கொலுவீற்றிருக்கிறார்.
    • அடிவாரத்தில் இருந்து முருகன் சன்னதிக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மலை ஏற வேண்டியதிருக்கும்.

    தோரணமலை உச்சியில் முருகப்பெருமான் குகையில் கொலுவீற்றிருக்கிறார்.

    அடிவாரத்தில் இருந்து முருகன் சன்னதிக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மலை ஏற வேண்டியதிருக்கும்.

    அந்த காலத்தில் மலை ஏற படிக்கட்டுகள் கிடையாது.

    செங்குத்தான் பாறையில் ஏற இரண்டு இடங்களில் மட்டும் லேசாக படிக்கட்டுகள் செதுக்கு பிடிக்க கைப்படி வைத்து இருப்பார்கள். மற்றபடி படிக்கட்டுகள் ஏதும் கிடையாது.

    பக்தர்கள் கல்லிலும், புதரிலும் மிதித்தும் தாண்டியும்தான் மலை ஏறுவார்கள்.

    நாளடைவில் பக்தர்களின் பாதங்கள் மூலம் உருவான பாதை நடக்க ஓரளவு எளிதாக இருந்தது.

    அதன்பின் அருளாளர்கள் பலர் படிக்கட்டுகள் அமைத்து கொடுத்தனர்.

    அந்தப்படிகள் பல சிறியதாவும் செங்குத்தாகவும் இருந்தன. இதனால் வயதானவர்களால் எளிதாக ஏற முடியாது.

    தற்போது எல்லோரும் எளிதாக ஏறும் வண்ணம் உயரம் குறைந்த அளவில் அதேநேரம் அகலமாகவும் படிக்கக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பக்தர்கள் இளைபாற மலைப்பாதையில் 5 இடங்களில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அந்த மண்டபங்களில் முருகன் சிலையோடு சித்தர்கள் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளன.

    ×