என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

சிறுவர்கள் பங்கேற்கும் குத்தியோட்டம்
- விழா தொடங்கிய 3ம் நாள் குத்தியோட்டத்தில் பங்கேற்கும் சிறுவர்கள் கோவிலுக்கு வருவார்கள்.
- அவர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்குவதோடு கோவிலிலேயே தங்கவும் செய்வார்கள்.
ஆற்றுகால் பகவதி கோவிலில் நடைபெறும் பொங்காலை விழாவின் முக்கிய நிகழ்வுகளில் சிறுவர்கள் பங்கேற்கும் குத்தியோட்டம் நிகழ்ச்சியும் ஒன்றாகும்.
இதில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கலந்து கொள்வார்கள்.
விழா தொடங்கிய 3ம் நாள் குத்தியோட்டத்தில் பங்கேற்கும் சிறுவர்கள் கோவிலுக்கு வருவார்கள்.
அவர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்குவதோடு கோவிலிலேயே தங்கவும் செய்வார்கள்.
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து கோவிலில் உள்ள குளத்தில் புனித நீராடி, கோவிலில் 1008 நமஸ்கார பிரார்த்தனை செய்வார்கள். 3ம் திருவிழா முதல் 9ம் திருவிழா வரை வழிபாடுகளில் பங்கேற்பார்கள்.
9ம் திருவிழாவன்று மாலை குத்தியோட்ட சிறுவர்கள் புத்தாடை, ஆபரணங்கள் அணிந்து தேவி சன்னிதானத்தில் கூடுவார்கள்.
அப்போது இச்சிறுவர்களின் விலா பகுதியில் உலோக கம்பியால் லேசாக குத்திகொள்கிறார்கள்.
பின்னர் தேவி வீதி உலா செல்லும் போது குத்தியோட்ட சிறுவர்களும், அவரது படை வீரர்கள் போல அணிவகுத்து செல்வார்கள்.
தேவி கோவிலுக்கு திரும்பியதும், இவர்களின் குத்தியோட்ட விரதம் நிறைவு பெறும்.
அப்போது சிறுவர்களின் விலாவில் குத்தப்பட்ட உலோக கம்பியும் அகற்றப்படும்.
இந்த சடங்கில் பங்கேற்பதன் மூலம் சிறுவர்கள் நோய் நொடி இன்றி, சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
இதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் குத்தியோட்ட நிகழ்வில் பங்கேற்கும் சிறுவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டி வருகிறது.






