என் மலர்
ஆன்மிகம்
- பூங்கொடி போன்ற ஆயர்குலத்தின் கொழுந்து போன்ற ஒளி விளக்கே!
- உலகங்களை அளந்த தேவர்களின் தலைவனே! உறக்கத்தை விடுத்து எழுந்தருள்வாய்!
திருப்பாவை
பாடல்:
அம்பரமே, தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே!
குலவிளக்கே!
எம் பெரு மாட்டி! யசோதாய்! அறிவுராய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
ஆடையையும், உணவையும், நீரையும் வரையறையே இல்லாது தானம் அளிக்கும் எங்கள் தலைவர் நந்தகோபரே! எழுந்தருள்வீர்! பூங்கொடி போன்ற ஆயர்குலத்தின் கொழுந்து போன்ற ஒளி விளக்கே! எங்கள் தலைவியாகிய யசோதை அம்மா! வானளாவ உயர்ந்து நின்று உலகங்களை அளந்த தேவர்களின் தலைவனே! உறக்கத்தை விடுத்து எழுந்தருள்வாய்! சிவந்த பொன்னாலான கால்களை அணிந்த பலதேவனே! நீயும் உன் தம்பியான கண்ணனும் இனியும் உறங்காது, உறக்கத்தை விடுத்து எழுந்தருள்வீர்!
திருவெம்பாவை
பாடல்:
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நம்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
பெண்களே! அந்த சிவந்த கண்களை உடைய திருமாலுக்கும், ஒவ்வொரு திசைக்கும் ஒரு முகம் வீதம் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மனுக்கும், ஏனைய தேவர் பெருமக்களுக்கும் கிடைக்காத ஒரு பேரின்பத்தை நமக்கு அள்ளிக் கொடுப்பவள், நறுமணம் மிக்க கூந்தலையுடைய நம் அன்னை உமையவள். அவள் நம்மை சீராட்டி, நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளும் வகையில் தன் சிவந்த தாமரை போன்ற திருவடிகளை நமக்குக் காட்டி, அனைவருக்கும் அரசனாக விளங்குபவனும், அடியவர்களுக்கு கிடைத்தற்கரிய அமுதத்தைப் போன்று விளங்குபவனுமாகிய நம் சிவபெருமானைப் போற்றிப் பாடி, தாமரை மலர்ந்துள்ள இந்த பொய்கையில் நீராடுவோமாக!
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்.
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-17 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை மறுநாள் விடியற்காலை 4.02 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 1.31 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சந்திர தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில்களில் பகற்பத்து உற்சவம். கரூர் ஸ்ரீ அபயபிரதான ரங்கநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமானுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்பு ளியங்குடி மூலவர் ஸ்ரீபூமிபாலகர், திருபுளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உதவி
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-பணிவு
கடகம்-அன்பு
சிம்மம்-பாசம்
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- தனம்
விருச்சிகம்-பக்தி
தனுசு- உழைப்பு
மகரம்-கடமை
கும்பம்-நட்பு
மீனம்-போட்டி
- பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் விழா நடைபெறும்.
- 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.
திருச்சி:
108 திவ்ய தேசங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடை பெறும்.
மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருநாள் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. இதை யொட்டி நம்பெருமாள் காலை 7.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்சுன மண்டபம் வந்தடைந்தார்.
மஞ்சள் நிற பட்டு (பீதாம்பரம்) அணிந்து ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, நெற்றி பூ சாற்றி, வைர அபய ஹஸ்தம், பதக்கம், அடிக்கை, ஒட்டியா ணம், கைகளில் தாயத்து சரம் , திருவடியில் தண்டை அணிந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
மதியம் 12 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

இரவு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடை கிறார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்ச வத்தின் 10-வது நாள் (9-ந்தேதி) நம்பெருமாள் நாச்சி யார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.
அன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவா சலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்த ர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 11-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 16-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திரு க்கும். 17-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு இல்லை.
சொர்க்கவாசல் திறப்பு தினமான 10-ந்தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து ஏழாம் திரு நாளான 16-ந்தேதி நம்பெரு மாள் திருக்கைத்தல சேவை யும், எட்டாம் திருநாளான 17-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சி யும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.
விழாவிற்கான ஏற்பா டுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரி யப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்மு ருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
- ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இரவு மார்கழி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு பம்பை மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, அங்காளம்மா! என்று பக்தி கோஷத்துடன அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து இரவு 12.30 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு பூக்காளால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவர் அம்மன் கோவில் மண்டபத்திற்கு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
விழாவில் செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு கார்த்திகா பிரியா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டன.
- நேர்த்தியான நிலையுடன் பொருந்தியுள்ள கதவுகளைத் திறந்து விடுவாய்.
- உமையம்மையின் நிறத்தையொத்த கருநீல மேகமே!
திருப்பாவை
பாடல்:
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்;
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா!
நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
கொடி பறக்கின்ற தோரண வாசலைக் கொண்ட ஆயர்பாடியின் தலைவனாய் விளங்குகின்ற நந்தகோபனின் அரண்மனையைக் காவல் புரிபவரே! மணிகள் பொருத்தப்பட்ட கதவைத் திறந்து எங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும். கண்ணன் ஆயர் சிறுமிகளான எங்களின் நோன்புக்கு உரிய அருளை தருவதாக வாக்களித்துள்ளான். அவனைத் துயிலெழுப்ப தூய்மையான மனதுடன் வந்துள்ளோம். உன் வாயினால் மறுத்துச் சொல்லிவிடாதே. நேர்த்தியான நிலையுடன் பொருந்தியுள்ள கதவுகளைத் திறந்து விடுவாய்.
திருவெம்பாவை
பாடல்:
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கும் முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
இந்த கடல் நீரைச் சுருக்கி வற்றச் செய்து மேலெழும்பும் உமையம்மையின் நிறத்தையொத்த கருநீல மேகமே! இறைவியின் இடையைப் போல மின்னி, அவள் கால்களில் அணிந்துள்ள சிலம்பு போன்ற இடியை இடிக்கச் செய்து, அவள் அழகிய புருவம் போன்ற வானவில்லைத் தோன்றச் செய்வாய். பார்வதியைப் பிரியாத பரமசிவன் தன் அடியார்கள் மேல் இன்னருளைப் பொழிவதைப் போல நீயும் மழையைப் பொழிவாயாக.
- சகல விஷ்ணு ஆலயங்களில் பகற்பத்து உற்சவம் ஆரம்பம்.
- முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-16 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை மறுநாள் விடியற்காலை 4.48 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: பூராடம் நள்ளிரவு 1.36 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொணட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் திருமொழித் திருநாள் தொடக்கம். சாக்கிய நாயனார் குருபூஜை. சகல விஷ்ணு ஆலயங்களில் பகற்பத்து உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான குமுத வல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-விவேகம்
மிதுனம்-அன்பு
கடகம்-பெருமை
சிம்மம்-அன்பு
கன்னி-உற்சாகம்
துலாம்- பக்தி
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-ஆதரவு
கும்பம்-பயணம்
மீனம்-லாபம்
- விழாவில் முதல் நாள் மாலை சுவாமி வீதி உலா, வெள்ளை சாத்துப்படி நடைபெறும்.
- ஈசான மூலையில் சுவாமி அம்பாளை நிற்க வைத்து வெள்ளை துணியை மேலே சாத்தி தீபாராதனை காட்டப்படும்.
ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவில் முதல் நாள் மாலை சுவாமி வீதி உலா, வெள்ளை சாத்துப்படி நடைபெறும்.
ஈசான மூலையில் சுவாமி அம்பாளை நிற்க வைத்து வெள்ளை துணியை மேலே சாத்தி தீபாராதனை காட்டப்படும்.
மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சூரிய உதயத்திற்கு முன்பு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
அன்று மாலை சிறப்பு நடன தரிசனம் முடிந்து நடராஜர் அம்பாள் ஊடல் நிகழ்ச்சி நடைபெறும்.
பெருமாள், நடராஜரின் ருத்ரதாண்டவத்தை சமாதானப்படுத்துவது ஐதீகம்.
பெருமாள், நடராஜர் இருக்கிற இடத்திற்கு எழுந்தருளி சென்று மரியாதை மற்றும் தீபாராதனை நடைபெறும்.
அப்போது ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் வஸ்திரங்கள் சாத்தப்பட்டு தீபாராதனை நடத்தப்படுவது சிறப்பு ஆகும்.
மாலையில் தயிர் பாலாடை உற்சவம் நடைபெறும். நடராஜர் முன்பு தயிர் சாதம் படையலிட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
3 நாட்கள் இந்த உற்சவம் நடைபெறும்.
இந்த விழாவில் புதுவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
- ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது.
- சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது.
ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது.
சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது.
இந்த மரம் எந்த வித இடையூறும் இல்லாமல் மேலோங்கி வளர்ந்து செல்லும் வகையில் இடவசதி செய்யப்பட்டுள்ளது.
வன்னி இலைகள் விநாய கருக்கும், முருகனுக்கும், சிவபூஜைக்கும், சனீஸ்வரருக்கும் உகந்த பச்சிலைகள் ஆகும்.
வன்னி மருத்துவ பயன்மிக்க ஒரு சிறந்த மூலிகையும் ஆகும்.
பொதுவாக சிவன் கோவில்களில் வில்வமரம் இருப்பதைத்தான் பார்க்க முடியும்.
இங்கு வன்னிமரம் தலவிருட்சமாக இருந்து வருகிறது.
வன்னி மரத்தை வணங்குவதன் மூலம் தீவினைகள் அகலும். நினைத்தாலும், கைகூப்பி தொழுதாலும், வலம் வந்தாலும் நம் பாவங்கள் விலகும் என விநாயகர் புராணம் சொல்கிறது.
வன்னி மரத்தின் அடியில் ஒரு முனிவர் தவம் இருந்து வந்தார் என்றும், அந்த மரத்தில் முனீஸ்வரர் குடி கொண்டுள்ளார் எனவும் பெரியவர்கள் கூறுகின்றனர்.
வன்னி மரத்தை வாரம்தோறும் சுற்றி வந்தால் பிரச்சி னைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.
எல்லா பிணிகளையும் போக் கவல்ல மூலிகையாக திகழும் வன்னியை வணங்கி வந்தால் வாழ்க்கையில் எல்லா துயரங்களும் விலகி நன்மை கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
- பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது.
- சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள்.
கிருத்திகை நட்சத்திரமும் ஞாயிற்றுக்கிழமையும் இணைந்த நாளில் அக்னியை நினைத்து தவமிருந்தால் குண்டலினி சக்தி ஏறும்.
இது புலிப்பாணி, அகத்தியர் சொன்ன நல்லநாள். மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை.
பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது.
சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள்.
தெய்வயானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும், வேல் ஞான சக்தியாகவும், மயில் ஆணவம் என்றும், சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.
முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது.
ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.
அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடிக்கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.
- கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.
- இவருடைய வாகனமாகிய மயில் வடக்கு நோக்கி இருக்கிறது.
கோவிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கித்தான் இருக்கிறது.
இது எப்போதும் அடைத்துக் கிடக்கும். எனவே தெற்கு கோபுர வாசல் வழியாகத்தான்கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
உள்ளே நுழைந்ததும் விநாயகர் சந்நிதி உள்ளது.
தெற்கு வளாகத்தில் விசாலாட்சி விஸ்வநாதர் இருக்கிறார்கள். இவர்களை பாலசித்தரை ஐக்கியப்படுத்திய கோலத்தில் காணலாம்.
கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.
இவருடைய வாகனமாகிய மயில் வடக்கு நோக்கி இருக்கிறது.
இங்கு உற்சவ மூர்த்திகள் மூன்று உண்டு. வெளியே தென் பக்கத்தில் ஒரு மடம் இருக்கிறது.
அதில் பால சித்தர் சிலையை காணலாம்.
இங்கு பிரம்மமோற்சவக் காலம் பங்குனி மாதம். தைப்பூசப் பெருவிழாவும் உண்டு.
பிரம்மோற்சவம் 5ஆம் நாளும் தைப்பூசத்திலும் முருகன், பெரிய தங்க மயில் வாகனத்தில் வீதி வலம் வருவார்.
இவை இரண்டும் பக்தர்களுக்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
- மயிலம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக பலமடங்கு அதிகரித்து விட்டது.
- அதற்கு காரணம் மயிலம் தலத்துக்கு சென்று வந்தால் உடனே திருமணம் கைகூடும், மற்றும் எடுத்தக்காரியம் உடனே வெற்றி பெறும் என்ற நம்பிக்கைதான்.
மயிலம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக பலமடங்கு அதிகரித்து விட்டது.
அதற்கு காரணம் மயிலம் தலத்துக்கு சென்று வந்தால் உடனே திருமணம் கைகூடும், மற்றும் எடுத்தக்காரியம் உடனே வெற்றி பெறும் என்ற நம்பிக்கைதான்.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் திண்டிவனத்தை கடந்ததும் மயிலம் ஊரை அடையலாம்.
மயிலம் மெயின் பஜாரில் இருந்து பார்த்தாலே மயிலம் மலை முருகன் கோவில் தெரியும்.
திண்டிவனம் நெடுஞ்சாலையில் இருந்து திருப்பாதிரிபுலியூர் செல்லும் வழியில் சென்றால் மிக எளிதாக மயிலம் தலத்துக்கு செல்ல முடியும்.
மயிலம் அடிவாரத்தில் இருந்து குன்று நோக்கி வரும் சாலையில் வந்தால் கோவிலின் தெற்கு வாசல் வந்து சேருவோம்.
- அப்படி சென்றவர்கள், ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அந்த பல்லக்கை இறக்கி வைத்தனர்.
- அவ்வாறு இறக்கி வைக்கப்பட்ட இடமே சமயபுரமாகும்.
ஆதியில் சமயபுரத்தாள், ஸ்ரீரங்கத்தில் இருந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.
விஜயநகரப் பேரரசின் வலிமை குன்றியபோது பகைவரின் அத்துமீறிய தாக்குதலால் அம்பாளை இடமாற்றம் செய்ய நினைத்துள்ளனர் அன்றிருந்த அன்பர்கள்.
அதற்காக தேவியின் சிலையை பல்லக்கில் ஏற்றி மாற்று இடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.
அப்படி சென்றவர்கள், ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அந்த பல்லக்கை இறக்கி வைத்தனர்.
அவ்வாறு இறக்கி வைக்கப்பட்ட இடமே சமயபுரமாகும்.
ஸ்ரீபாதம் தாங்கிகள் மீண்டும் பல்லக்கை அங்கிருந்து தூக்க முற்பட்டபோது அம்பாளின் திருமேனியை அசைக்கக்கூட இயலாமல் போனதாம்.
அதனால் அம்பாளை வணங்கி அங்கேயே குடியமர்த்தியதாகச் சொல்கின்றனர்.






