என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சென்னை ஷெனாய் நகரில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், பாராட்டுகளைப் போலவே விமர்சனங்களையும் நான் விரும்புகிறேன். விமர்சனங்களில் தனிப்பட்ட நலனைவிட பொது நலன்தான் அதிகம் இருக்கும். எனவே அதை விரும்புகிறேன். தி.மு.க.வை கற்பனையில் கூட யாராலும் அழிக்கமுடியாது என்றார்.

    மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்கலன் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. ராக்கெட்டில் இருந்து மாதிரி விண்கலம் திட்டமிட்டப்படி பிரிந்தது. மாதிரி விண்கலத்தின் பாராசூட் விரிந்த நிலையில் தரையிறங்கியது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், மாதிரி விண்கலத்தின் சோதனை ஓட்டம் அனைத்து நிலைகளிலும் வெற்றிகரமாக நடந்தது என தெரிவித்தார்.

    மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் கலன் சோதனை ஓட்டம் என்ஜின் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. திட்டமிட்டபடி என்ஜின் செயல்படாததால் ராக்கெட்டை ஏவ முடியவில்லை. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு செய்வோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.

    அனுமதியின்றி அண்ணாமலை வீட்டருகே பா.ஜனதா கொடிக்கம்பம் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர். ஆகவே அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

    7-ந்தேதி தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர் ஹமாஸ் பயங்கரவாதிகள். தற்போது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரண்டு அமெரிக்க பிணைக்கைதிகளை விடுவித்துள்ளனர்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    ஆன்மிகப் பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் நேற்று மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது. அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    இஸ்ரேலில், ஹமாஸ் பயங்கரவாதிகளை கண்டு அஞ்சாமல், அவர்களை சாதுரியமாக கையாண்டு தப்பித்த 65 வயதான ரேச்சல் எட்ரியை பைடன் மிகவும் மகிழ்ச்சியுடன் கட்டியணைத்து அவரது அறிவு கூர்மையை பாராட்டினார்.

    கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி கே. நடராஜன், கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை விரைந்து நடத்தி 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு தள்ளுபடியாகியுள்ளது. மருத்துவ காரணங்களை ஏற்க முடியாது என நீதிபதி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

    "பாலஸ்தீன ஐ.ஜே (Palestinian Islamic Jihad) அமைப்பினர் ராக்கெட் ஏவி நடத்திய தாக்குதல் இது. அவர்கள் எங்கள் நாட்டினை குறி வைத்தனர்; ஆனால் எங்கள் குழந்தைகளை கொல்ல நினைத்தவர்கள் தங்கள் நாட்டு குழந்தைகளை கொன்று விட்டனர்" என பாலஸ்தீன மருத்துவமனை தாக்குதல் குறித்து இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்தார்.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கு செலுத்தப்பட வேண்டிய மின் கட்டணம் 1 யூனிட்டுக்கு 8 ரூபாயில் இருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறையும். இதனால் மாநிலம் முழுவதும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    ×