மறைமலைநகரில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் 4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து இன்று 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றுள்ளனர். ஆய்வு கூட்டத்தில் 28 துறைகளை சார்ந்த மாவட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.