என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    காசா மீதான தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார் என வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடனான அமெரிக்காவின் ஒற்றுமையை அதிபர் பைடன் மீண்டும் உறுதிப்படுத்துகிறார் என தெரிவித்துள்ளார்.

    "காசாவில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை; ஒரு கோதுமை தானியம் கூட இல்லை; ஒரு லிட்டர் எரிபொருள் கூட இல்லை" என ஐ.நா. நிவாரண பணி முகமையின் தலைவர் பிலிப் லசாரினி தெரிவித்துள்ளார்.

    "ஹமாஸ் அமைப்பினர் தற்போது செய்து வருவதை நிறுத்த சொல்லி உடனே தடுக்க அரபு நாடுகளால் முடியும்; ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்" என அமெரிக்க குடியரசு கட்சியை சேர்ந்த நிக்கி ஹாலே குற்றம் சாட்டினார்.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் வரும் 21-ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கனமழையால் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இருதரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் தாக்குதலில் மாயமானோர், ஹமாஸ் அமைப்பால் சிறைபிடிக்கப்பட்டோர் குடும்பத்தினரை பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

    சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானாவில் ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அப்போது பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.400 விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் என்றார்.

    இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு இடையிலான போரில் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் எந்த நிபந்தனையுமின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், காசா மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனராக கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் மனோகர் சிங் கில் (எம்.எஸ்.கில்). டெல்லியில் வசித்து வந்த இவர் முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தெற்கு டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று அவர் மரணமடைந்தார்.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகள் ஆர்வமாக உள்ளன. அந்த வகையில் சீமானின் நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மகாராஷ்டிராவில் சம்பாஜி நகரில், விரைவுச்சாலையில் ஒரு கண்டெய்னர் மீது தனியார் மினி பேருந்து மோதியதில் அதில் பயணித்த 35 பேரில் 12 பேர் உயிரிழந்தனர்; 23 பேர் காயமடைந்தனர்.

    தீவிரமடைந்து வரும் காசா மீதான இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களையும் அதனால் அங்கு வசிக்கும் அப்பாவி காசா மக்கள் படும் துன்பங்களை குறித்தும், அவர்களின் சீர்குலைந்து வரும் வாழ்வாதார பிரச்சனைகள் மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்தும் முடிவெடுக்க ஓ.ஐ.சி. கூட்டமைப்பு, தங்கள் உறுப்பினர் நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

    ×