என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது முழு உருவச்சிலை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா அவரது பிறந்தநாளான இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் திருவுருவச்சிலையை திறந்து வைத்தார். 

    உலக கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணியை வழிநடத்திய ஆல்-ரவுண்டர் தசுன் ஷனகா தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சமிகா கருணரத்னே சேர்க்கப்பட்டு உள்ளார். முதல் இரு ஆட்டங்களில் இலங்கை தோற்றுள்ள நிலையில், தசுன் ஷனகா விலகல் அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும்.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இரவில் கனமழை பெய்தது. சென்னையில் அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 5 செ.மீ மழை பதிவாகியது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேல் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தனி விமானம் மூலம் மத்திய அரசு தாய்நாட்டுக்கு அழைத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக அனைத்து விமான சேவைகளையும் அக்டோபர் 18-ம் தேதி வரை ரத்து செய்துள்ளோம் ஏர் இந்தியா என அறிவித்துள்ளது.

    செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட தூரத்தில் சிறுகோள்கள், விண்கற்கள் ஆகியவை அதிக அளவில் குவிந்து காணப்படுகின்றன. அங்கு அமைந்துள்ள சிறுகோள்களில் ஒன்றாக 'சைக்' விளங்குகிறது. முழுக்க முழுக்க இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்களாலான அந்த சிறுகோளை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டது. அதன்படி ஸ்பெக்ஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து அந்த சிறுகோளுக்கு விண்கலனை ஏவி உள்ளது.

    நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் விதமாக பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி பாடிய 'கார்போ' என்ற பாடல் ஆல்பம் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

    பிரான்ஸின் வடக்கே உள்ள அர்ராஸ் பகுதியில் லைசி கேம்பெட்டா உயர்நிலை பள்ளியில் (Lycee Gambetta High School) பணி புரிந்து வந்த டொமினிக் பெர்னார்ட் (Dominique Bernard) எனும் ஆசிரியரை மொஹமெத் எம். (Mohamed M.) எனும் 20 வயதான அப்பள்ளியின் முன்னாள் மாணவர், கத்தியால் குத்தினார்.

    காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடனும் கட்சி எம்.எல்.ஏ,க்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவருடனும் கட்சி நிலவரம், அடுத்த வருட தேர்தலை சந்திக்க அணுகும் வழிமுறைகள் மற்றும் தி.மு.க.வுடன் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு பேச்சு குறித்தும் சோனியா காந்தி சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

    இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவதற்கான ஆபரேஷன் அஜய் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. முதல்கட்டமாக 212 இந்தியர்கள் நேற்று இந்தியா திரும்பினர். இந்நிலையில், இஸ்ரேல் நாட்டிலிருந்து 235 இந்தியர்களுடன் 2வது விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. அவர்களை வெளியுறவுத்துறை அதிகாரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் வரவேற்றார்.

    சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வக்கீல்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட இருவரும் 2 ஆண்டுகள் பணியாற்றுவார்கள். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

    டெல் அவிவ் நகரில் இருந்து 235 இந்தியர்களை அழைத்துக் கொண்டு 2-வது சிறப்பு விமானம் இந்தியா புறப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என இஸ்ரேலின் அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

    ×