என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்னை வந்தனர்.

    தி.மு.க. சார்பில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு மகளிர் மாநாட்டில் கலந்துகொள்ள சோனியா காந்தியும், பிரியங்காவும் இன்று இரவு சென்னை வருகிறார்கள். நாளை மதியம் சோனியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிய விருந்து கொடுக்கிறார். நாளை நடைபெறும் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு தொடர்பாக இரு தலைவர்களும் பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் 2 நாள் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டியை சஸ்பெண்ட் செய்வது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. தங்களது பிராந்தியத்தின் கீழ் உள்ள நாடுகளை தங்களுடன் இணைத்தது ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல் என்பதால் ரஷிய ஒலிம்பிக் சங்கம் தடைக்கு ஆளாகி இருக்கிறது.

    அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்துப் பேசினார். அமெரிக்கா இருக்கும்வரை நீங்கள் தனியாகப் போராட வேண்டிய அவசியமில்லை. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம் என அவர் கூறினார்.

    இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவதற்கான 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித்தவித்த 212 இந்தியர்களுடன் தனி விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. அவர்களை மத்திய மந்திரி ராஜிவ் சந்திரசேகர் வரவேற்றார் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நாளை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோத இருக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இதனிடையே போட்டி காரணமாக சென்னையில் நாளை (அக்டோபர் 13) மெட்ரோ ரெயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நாளை நடைபெற இருந்த ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. போராட்டத்திற்கு பதிலாக விளக்க கூட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போராட்டம் நடைபெற இருந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இரண்டு நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்துக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்களின் கைவினைப் பொருள்களை கண்டுகளித்த பிரதமர் மோடி, அங்கிருந்த டிரம்சை வாசித்து மகிழ்ந்தார். மேலும், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

    காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து கட்சி தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா, வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

    டெல்லியின் ஆனந்த்விகார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கி செல்லும் நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் பீகாரில் நேற்று இரவு தடம்புரண்டது. இதில் 5 பேர் பலியாகினர். பக்சர் மாவட்டத்தில் ரெயில் தடம்புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்துவருவதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், கதவுகளைப் பூட்டிக்கொள்ளுமாறும், ஊடுருவல் சாத்தியம் குறித்து எச்சரிக்கும்படியும் இஸ்ரேலிய முகப்புக் கட்டளை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×