என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் (12506) 3 பெட்டிகள் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே இரவு சுமார் 9.35 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானார்கள்.

    "இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும். பகையை கைவிட்டு பொதுமக்களை காக்கவும், தற்போதைய சூழ்நிலை மேலும் மோசமடையாமல் கண்காணிக்கவும் இரு தரப்பையும் கேட்டு கொள்கிறோம்" என இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது.

    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். சபாநாயகர் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை நோக்கிச் சென்று கோஷமிட்டனர். அவைக்காவலர்களை அழைத்த சபாநாயகர், அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றும்படி உத்தரவிட்டதை அடுத்து, அ.தி.மு.க. உறுப்பினர்களை அவைக்காவலர்கள் கூண்டோடு வெளியேற்றினர்.

    இஸ்ரேல் ஹமாஸ் போரில், ஹமாஸ் பயங்கரவாதிகளின் முக்கிய மையமாக விளங்கும் அல் ஃபர்கான் (Al-Furqan) பகுதியில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இதில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூளையாக செயல்படும் மொஹம்மத் டெய்ஃப் எனும் பயங்கரவாதியின் தந்தையின் இல்லம் முற்றிலும் சேதமடைந்தது

    தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட்டார். அப்போது அவர் பேசுகையில், தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்படும். வேளாண் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்றார்.

    இந்தியாவில் பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் உள்ளது. 2022-ம் ஆண்டு ஆய்வில் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோயின் அறிகுறிகளை தொடக்க காலத்திலேயே கண்டறியும்போது, வெற்றிகரமான சிகிச்சை மற்றும் நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கிறது என்று ரேடியேஷன் ஆர்காலஜி துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பி.ராஜேஷ் கூறினார்.

    திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விவசாயிகள், தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக, மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்துவருகிறது. இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வரும் 16ம் தேதி கும்பகோணத்தில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்துள்ளார்.

    மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்தது. இந்நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா உள்பட 6 மாநிலங்களில் செயல்பட்டு வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஹமாஸ்- இஸ்ரேல் போரில் இதுவரை 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. 3400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 4 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

    ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியுள்ளது. அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் இஸ்ரேல் வந்தடைந்துள்ளது.

    ×