என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 5% உயர்ந்துள்ளது.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத குழுவினர் இடையே தொடர்ந்து நடந்து வரும் சண்டையை முன்னிட்டு, இஸ்ரேல் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் வரவுள்ள நாட்களில் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது.

    நடிகர் நாசரின் தந்தை காலமானார். செங்கல்பட்டு தட்டான்மலை தெருவைச் சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா (95) உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நாசரின் தந்தை மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். 

    இந்தியர்களை குறித்தும், இந்துக்களை குறித்தும் தகாத கருத்துக்களை பதிவிட்டதாக குற்றம் சாட்டி ஜைனப் மீது நடவடிக்கை எடுக்க கோரி புது டெல்லியை சேர்ந்த வினீத் ஜிண்டால் (Vineet Jindal) எனும் வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார்.

    முன்னாள் ஹார்வர்டு மாணவர்களாக இருந்து தற்போது அமெரிக்க அரசியலில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பலர், மாணவர்கள் அமைப்பின் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள பிரதிநிதிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புதுவையில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திர பிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இவரிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, கலைப்பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தன. இந்நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், இந்த அட்டூழியம் ஒருபோதும் நடந்திருக்காது என்று முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    மேட்டூர் அணையின் நீர் இருப்பு 8 டி.எம்.சி.யாக குறைந்துள்ளதால் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது சுமார் 110 நாட்களுக்கு முன்னதாகவே அணையில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்படுகிறது.

    காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் போரில் உள்ளது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனம் வழியாக எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரோல் போரை தொடங்காத போதிலும், இஸ்ரேல் போரை முடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    நாங்கள் போரில் இருக்கிறோம். அதனால், பேச்சுவார்த்தைக்கோ அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கோ உரிய தருணம் இது இல்லை. நாங்கள் இன்னும் எங்களுடைய எல்லை பகுதியை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னட் போர் முனையில் வீரர்களுடன் ஒன்றாக கைகுலுக்கி கொண்ட காட்சிகள் வெளிவந்துள்ளன. பகுதிநேர பணியாக அவர் போரில் பங்கேற்க சென்றுள்ளார்.

    நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் புகை மற்றும் போதைப்பொருட்கள், ரத்தம் தெறிக்கும், ஆபாச வார்த்தைகள் என 13 கட்டுகள் போட்டிருப்பதாக சென்சார் போர்டு அறிவித்துள்ளது.

    ×