என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுப்பது பற்றி ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

    இஸ்ரேல் பாலஸ்தீன போரின் தாக்கம், இந்திய பங்கு சந்தையில் எதிரொலித்தது. திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் இந்தியாவின் மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 500 புள்ளிகள் வரை சரிந்து 65,434 எனும் அளவை எட்டியது. தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி (Nifty) 142 புள்ளிகள் சரிந்து 19,510 எனும் அளவை எட்டியது.

    இந்தியாவின் 5 மாநிலங்களில் நடைபெற போகும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 16.1 கோடி வாக்காளர்களில் 60.2 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    காவிரி நதிநீர் உரிமையை காப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் எப்பொழுதும் எந்த சூழலிலும் உறுதியாக இருக்கும் என்ற உறுதி மொழியை இந்த மாமன்றத்திற்கு முதலில் தெரிவிக்க விரும்புகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. சபை தொடங்கியதும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், கே. பழனியம்மான், வெ.அ. ஆண்டமுத்து மற்றும் பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் தேதியை இன்று மதியம் மத்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது.

    புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஐ.நா. அவசர கூட்டத்தில் 15 உறுப்பினர் நாடுகளும் ஹமாஸ் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க வலியுறுத்தியது. ஆனால் சில நாடுகள் கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டன. இறுதியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்தது.

    மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸில் உள்ள பைந்தோர்லாங்டைன் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிருடன் புதைந்தனர்.

    ஆதித்யா விண்கலன், தான் செல்ல வேண்டிய பாதையில் சரியான திசையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது.

    நேற்று துவங்கிய இஸ்ரேல் பாலஸ்தீன போர் குறித்து பேசுகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை குற்றம் சாட்டிய அமெரிக்க  முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய 6 பில்லியன் டாலர் தொகை, ஹமாஸ் அமைப்பிற்கு மறைமுகமாக சென்றிருக்கிறது" என கூறினார்.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது.

    ×