என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    வட சீன கடல் பகுதியில் இரண்டாம் தாமஸ் ஷோல் (shoal) எனும் நீர்மட்டம் குறைவான கடல் பகுதி உள்ளது. இப்பகுதி மீது சீனாவும் பிலிப்பைன்ஸும் உரிமை கொண்டாடுவதால் இது சர்ச்சைக்குரிய பகுதியாக கருதப்படுகிறது.

    காசாவில் தவித்து வரும் பாலஸ்தீனர்களுக்காக உயிர் காக்கும் மருந்துகள், வெட்ட வெளியில் படுக்கும் வகையில் ஸ்லீப்பர் பேக், தார்ப்பாலின், மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் முதல்கட்டமாக அனுப்பப்பட்டு உள்ளன. இந்திய மக்களின் அன்புப் பரிசு இது என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    குஜராத்தில் நடந்த நவராத்திரி விழாவில் கடந்த 24 மணி நேரத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 10 பேரும் இள வயது மற்றும் நடுத்தர வயதுடையோர் என டாக்டர்கள் தெரிவித்தனர். கர்பா நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் கர்பா நடனமாடும் இடங்களுக்கு அருகே ஆரம்ப சுகாதார மையங்கள் தயார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

    புனே மாவட்டத்தில் பாராமதி தாலுக்காவில் விமான ஓட்டுதல் பயிற்சி அளிக்கும் ரெட் பேர்ட் விமான பயிற்சி நிறுவனம் (Red Bird Flight Training Academy) எனும் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, நேற்று காலை 08:00 மணியளவில் அம்மாவட்டத்தின் கோஜுபாவி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு வயலில் கீழே விழுந்து நொறுங்கியது.

    தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவோரின் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும். வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும். ஜி.எஸ்.டி., சொத்து வரி, தொழில்வரிகள் உள்ளிட்ட தரவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

    காலாண்டு, அரையாண்டு காலங்களில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி உறுதி செய்யப்படும். தகுதி இழக்கும் பயனாளிகள் தானியங்கி புதுப்பித்தல் முறையில் நீக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு அமெரிக்க பிணைக்கைதிகளை விடுவித்த நிலையில், மேலும் இரண்டு பேரை விடுக்க இருந்த நிலையில் இஸ்ரேல் அவர்களை திரும்பப்பெற மறுப்பு தெரிவித்து விட்டது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    2022-ல் இந்தியா- சீனா எல்லையில் சீனா சாலைகள், விமான நிலையம், ஹெலிபேடுகள் அமைத்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

    பப்புவா நியூ கினியா நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல், கரை ஒதுங்கியுள்ளது.

    பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றிய தி.மு.க. அரசுக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் தி.மு.க. பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 பா.ஜ.க. கொடிக்கம்பங்கள் நடப்படும் என அண்ணாமலை வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ரஃபா எல்லை திறக்கப்பட்டு எகிப்தில் இருந்து காசாவிற்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் கன்டெய்னர் லாரிகள் மூலம் சென்றடைந்துள்ளன. விரைவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட இருக்கிறது.

    1959ல் நமது அண்டை நாடான சீனாவுடன் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையின் போது தங்கள் உயிரை நீத்த மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 10 அதிகாரிகளின் நினைவாக வருடாவருடம் அக்டோபர் 21, காவலர் நினைவு தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்தியக் குடியரசு நாள், தொழிலாளர் நாள் உள்ளிட்ட 6 சிறப்பு நாட்களின் போது கிராமசபை கூட்டம் தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தினமான நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    ×