என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    2030-ம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடம் பிடிக்கும் என எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் கணித்துள்ளது. வரும் 2030-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 டிரில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கிறோம். இதனால் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடம் பிடிக்கும் என தெரிவித்துள்ளது.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் சென்றுள்ளார். அதிபர் ஹெர்சாகை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அந்நாட்டு பிரதமர் நேதன்யாகுவை சந்தித்தார். அப்போது பேசிய மேக்ரான், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உலக அளவில் ஒன்றிணைந்தது போல, ஹமாசுக்கு எதிரான போரிலும் பிரான்ஸ் ஒன்றிணையும் என தெரிவித்தார்.

    "உலக நாடுகள் சந்தித்து வரும் சமகால சவால்களுக்கும், சிக்கல்களுக்கும் நிரந்தர தீர்வை தேடி பாரதத்தை நோக்கி தங்கள் பார்வையை திருப்பியுள்ளன" என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அந்த அமைப்பின் நாக்பூர் கூட்டத்தில் கூறினார்.

    ஐ.நா. பொதுசபையின் உறுப்பினர் நாடுகளின் வழக்கமான சந்திப்பு வருடாவருடம் நடைபெறும். உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்களால் நெருக்கடி நிலை தோன்றும் போது, அவசர சந்திப்புகளுக்கு தன் உறுப்பினர் நாடுகளுக்கு அழைப்பு விடுத்து பொதுசபை கூடுவதுண்டு.

    அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்த புறநகர் ரெயில் தடம்புரண்டது. புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டதால் அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய ரெயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரெயில் தடம் புரண்டது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இஸ்ரேலுடனான தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பினர் பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களை விடுவித்தால் மட்டுமே போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தினார். இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் 2 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.

    அதிக கட்டண வசூல் எனக்கூறி சிறை பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பஸ்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பஸ்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்துள்ள ஒரு லட்சம் பயணிகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    நேபாளத்தின் காத்மண்டுவில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இந்த நிலநடுக்கம் தரைப்பகுதியில் இருந்து 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    தரம்சாலாவில் நேற்று நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து 273 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 274 ரன்கள் எடுத்து வென்றது. இந்தியாவின் சுப்மன் கில் 5 பவுண்டரி உள்பட 26 ரன் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி. நடிகை கவுதமி பா.ஜ.க.வில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த கடிதங்களை பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பா.ஜ.க.வில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்கள் குவித்தார். இதன்மூலம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் இஸ்ரேலில் இருந்து 1,200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 6-வது விமானம் மூலம் 143 பேர் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தனர் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.

    ×