என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூய்மை பணிகளை மேற்கொள்ளும் திட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.

    மாணவர்கள் போராட்டம் காரணமாக பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. நேற்றிரவு முழுக்க வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், இன்று காலை முதலே மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதிகளில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. எனினும், பதற்றமான சூழல் தான் நிலவியது.

    தாக்குதல் எதுவும் நடைபெறாத நிலையில், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 5 மணி முதல் 11 மணி வரை ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது. மழை காரணமாக பெட்ரோல் பங்கில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒதுங்கி நின்றதாக கூறப்படுகிறது. 

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கே.கே. நகர், ஈக்காட்டுத்தாங்கல், திருமுடிவாக்கம், வேளச்சேரி, பழவந்தாங்கல், அனகாபுத்தூர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

    கர்நாடகம் நம்மைவிட்டு வெகு தூரத்தில் இல்லை. ஒரே தெருவில் அந்த பகுதி கர்நாடகா என்றால் இந்த பக்கம் தமிழ்நாடு. எனவே மனம் ஒத்து நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும். ஏதோ தனிநாட்டில் வாழ்வதை போல் இப்படிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது சரியல்ல என்பதுதான் எனது கருத்து என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

    நோயாளியின் வயிற்றில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட பல உலோக பொருட்களில் இயர்போன், வாஷர், நட்டு மற்றும் போல்ட், வயர், ராக்கி, லாக்கெட், பொத்தான், சிறு உறை, தலைமுடிக்கான க்ளிப், ஜிப், கோளி குண்டு மற்றும் ஊக்கு ஆகியவை இருந்தது. இதனை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    "உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வருவதை உணர்கிறோம். கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் ஆக்கபூர்வமாகவும் தீவிரமாகவும் நல்லுறவு வளர்க்க வேண்டியது மிக அவசியம்", என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.  

    வாச்சாத்தி கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையில் 50 சதவீதத்தை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளிடம் இருந்து பெற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    தைவானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதனை அறிமுகம் செய்து வைக்கும் விழா அங்குள்ள காஹ்சியுங் நகரில் நடைபெற்றது.

    ஒருவரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகவே சிஇஓ ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ×