பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இந்த நிலையில் இன்று பிற்பகல் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகரில் நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அதற்கு பிறகு பிலாஸ்பூர் நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.