என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களை சேர்ந்த தலைவர்களின் வீடுகள், வக்கீல்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    "ட்ரூடோ கருத்து சுதந்திரத்தை நசுக்க முயற்சிக்கிறார். வெட்கக்கேடு" என குறிப்பிட்டு எக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிறுவனரும் உலகின் நம்பர் 1. பணக்காரருமான அமெரிக்கர் எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் தடையின்றி ஒலிக்க வேண்டும். வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதில் கிராமங்களே முன்னிலை வகிக்கிறது. கிராம அளவில் கிராம சபை கூட்டம் மக்கள் குரலை எதிரொலிக்கிற மன்றமாக உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    குன்னூர் பேருந்து விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

    குன்னூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் 9 பேரின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

    வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு குறித்து எக்ஸ் பதிவில் கண்டனம் தெரிவித்து இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள் - தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும்,"  என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய வான்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் மாவட்டத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. போபாலில் உள்ள ஏரி ஒன்றின் அருகில் இந்திய வான்படை ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

    நாடு முழுக்க ஒரே கல்விமுறையை கொண்டுவரக் கோரும் மனுவிற்கு சி.பி.எஸ்.இ. எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. நாடு முழுக்க ஒரே கல்விமுறையை கொண்டுவருவதற்கு ஒரே நாடு, ஒரே கல்விமுறை எனும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு பா.ஜ.க. தலைவர் அஸ்வினி உபத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    நான் பதவிக்காக வந்தவன் அல்ல, மிகப்பெரிய பதவியை தூக்கை எறிந்து வந்தவன். யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்; யாரை பற்றியும் தவறாக சொல்லவில்லை. நான் முழு நேர அரசியல்வாதி கிடையாது. என்றைக்கும் எனது முதல் பணி விவசாயம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசனின் உருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு குடும்பத்தினர், திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் சிவாஜிக்கு மரியாதை செலுத்தினர்.

    ×