என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    நேபாளத்தின் மேற்கு பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. இவை ரிக்டர் அளவுகோலில் 5.3 மற்றும் 6.3 என்று பதிவாகி உள்ளன. இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மூன்றாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகி இருக்கிறது. 

    வங்காள தேச பொது சுகாதார இயக்குனரகம், இவ்வருடம் ஒரு லட்சம் பேருக்கும் மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 1006 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. 

    அ.தி.மு.க. கூட்டணி முறிந்துள்ள நிலையில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மூத்த நிர்வாகி மற்றும் மந்திரியுமான நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சந்தித்தது முக்கியத்துவம் பெற்றதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கனவே அ.தி.மு.க.-பா.ஜ.க. அணி முறிவு என்பது நாடகம் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கூகுளின் ஆதிக்கத்திலிருந்து ஆப்பிள் நிறுவனம் வெளிவர முடியாததால், மைக்ரோசாப்ட், வலைதள தேடுதல் இயந்திர சந்தையிலேயே நுழைய முடியாமல் தவிக்கிறது என மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா சாட்சியம் அளித்தார்.

    பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். அதுதொடர்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பொய்ச்செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிள்ளையார்குளம். இந்த ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயி அம்மையப்பனை ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் காலால் எட்டி உதைத்து தாக்கினார். இதில் அம்மையப்பன் படுகாயம் அடைந்தார். விவசாயியை எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமறைவாகி உள்ளார். இரவு முழுவதும் தேடியும் தங்கப்பாண்டியன் கிடைக்காத நிலையில் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

    பா.ஜ.க. தமிழ் நாடு தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் தமிழ் நாடு முழுக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சில நாட்கள் நடைபயணம் நிறுத்தப்பட்டு, மூன்றாவது கட்டமாக அக்டோபர் 4-ம் தேதி மீண்டும் துவங்க இருந்தது. இந்த நிலையில், அண்ணாமலையின் மூன்றாம் கட்ட நடைபயணம் வரும் 6-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்கர் ராவ் சாவன் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த குழந்தைகள் (12) உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருந்துகள் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    காவிரி விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளும் தி.மு.க. கட்சிக்கு எதிராகவும், தமிழகத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும் அ.தி.மு.க. போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர். இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆசிரியர்கள், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர். 

    அப்போது பேசி அவர்கள், "உங்களின் கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று இன்று இரவே அறிவித்தால் போராட்டத்தை வாபஸ் பெற தயார். அதுவரை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்," என்று தெரிவித்து உள்ளனர்.

    உயர்ந்து வரும் வெப்ப நிலை காரணமாக அமேசான் காடுகளில் உள்ள நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. பரப்பளவில் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவின் அளவிற்கு பரந்து விரிந்துள்ள இக்காடுகளில் இது போன்ற வானிலை நிகழ்வுகள் நடைபெறுவதால் 1 லட்சம் பேருக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ×