ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், "பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலை சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.