என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நல குறைவு.. என் மண் என் மக்கள் யாத்திரை ஒத்திவைப்பு
    X

    பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நல குறைவு.. என் மண் என் மக்கள் யாத்திரை ஒத்திவைப்பு

    பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்திற்கு அவர் என் மண் என் மக்கள் என பெயரிட்டுள்ளார். பலக்கட்டங்களாக நடைபயணம் மேற்கொண்டு வந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் திடீர் டெல்லி பயணம் காரணமாக யாத்திரை அக்டோபர் 4-ம் தேதியில் இருந்து அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அக்டோபர் 6-ம் தேதி துவங்க இருந்த பாத யாத்திரை அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பா.ஜ.க. தமிழ்நாடு அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×