search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி மகப்பேறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பதாக தமிழக கர்ப்பிணி பெண்கள் திடீர் சாலை மறியல்
    X

    அரசு குழந்தைகள் மருத்துவமனை முன்பு தமிழக கர்ப்பிணி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

    புதுச்சேரி மகப்பேறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பதாக தமிழக கர்ப்பிணி பெண்கள் திடீர் சாலை மறியல்

    • கர்ப்பிணிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறி கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி 100 அடி ரோட்டில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனை உள்ளது.

    இங்கு புதுச்சேரி மட்டுமின்றி மாநில எல்லை பகுதியான தமிழகத்தை சேர்ந்த வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வந்து பிரசவம் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் தமிழக பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் நேற்று காலை ராஜீவ்காந் தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனைக்கு வந்து பதிவு செய்தனர். பின்னர் பரிசோதனைக்காக காத்திருந்தனர். அவர்களை மதியம் 1.30 மணி வரை அழைக்கவில்லை.

    ஆனால் புதுவையை சேர்ந்த கர்ப்பிணிகளை மட் டும் அழைத்து பரிசோதனை செய்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் சிலரும், அவர்களது உறவினர்களும் நேற்று மதியம் 1.30 மணியளவில் மருத்துவமனையை விட்டு வெளியேறி எதிரே 100 அடி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஒரு டாக்டர் பணியில் இருக்கும்போது மட்டும் தான் தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர்.

    கர்ப்பிணிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போக்குவரத்து பாதிப்பு இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், அரசு மகளிர் மற்றும் குழந் தைகள் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் நாராயணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதா ன பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறி கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

    Next Story
    ×