என் மலர்
மற்றவை
- ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது.
- வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கி எறியும்படி அரசர் உத்தரவிட்டார்.
ஆப்பிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன.
தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார்.
ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது.
"இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்"என்று கட்டளையிட்டார்.
வேலைக்காரன் கெஞ்சினான்.. "நான் உங்களுக்கு பத்து வருடங்களாக சேவை செய்தேன். நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா?
தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் தாருங்கள்..! "
ராஜா ஒப்புக்கொண்டார்..
அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும், தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான்.
காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக்கொண்டார்.
அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான். அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான்.
பத்து நாட்கள் முடிந்தது..
வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கி எறியும்படி அரசர் உத்தரவிட்டார்.
அவன் தூக்கி எறியப்பட்டபோது, அவை ஓடிவந்து அவனின் கால்களை நக்கத் தொடங்கின..
இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்!
இதைப் பார்த்து திகைத்த அரசன்,
"என் நாய்களுக்கு என்ன நேர்ந்தது?" என்றான்.
வேலைக்காரன் பதிலளித்தான்,
"நான் பத்து நாட்களுக்கு மட்டுமே இந்த நாய்களுக்கு சேவை செய்தேன், அவை என் சேவையை மறக்கவில்லை.
நான் உங்களுக்கு பத்து வருடங்கள் சேவை செய்தும் என் முதல் தவறைக்கூட மன்னிக்காமல் நான் உங்களுக்கு செய்த அனைத்தையும் மறந்து என்னை தண்டிக்க உத்தரவிட்டீர்கள்!"
அரசர் தனது தவறை உணர்ந்து வேலைக்காரனை விடுவிக்க உத்தரவிட்டார்.
நம்மிலும் எத்தனையோபேர் இப்படி இருக்கிறோம்..
ஒருவர் செய்த ஒரு தவறுக்காக, அவர் நமக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்து அவரை வாழ்நாளெல்லாம் ஒதுக்கி வாழும் எத்தனையோபேர் நம்மிலும் இல்லாமல் இல்லை..
பலர் இருக்கிறார்கள்..
தவறு செய்வது மனித சுபாவம்..
அதை உணர்ந்து தவறுகளை மன்னிக்கப் பழகுவதும் மனித சுபாவம்..
மன்னிப்போம் மறப்போம்!
- சாிபாதி என்றால் சமமான பகுதி என்று பொருள்.
- ‘பகு’என்ற குறிலிணை ‘பா’என நீண்டு, அத்துடன் தி சோ்ந்து ‘பாதி’ ஆனது .
பாதி வேறு; சாிபாதி வேறு .
இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது .
பாதி என்றால் பகுதி என்று பொருள் .
சாிபாதி என்றால் சமமான பகுதி என்று பொருள்.
" நீ உண்ணும் பொங்கலில் பாதி கொடு" என்றால், அது கால் பகுதியாகவும் இருக்கலாம் அல்லது முக்கால் பகுதியாகவும் இருக்கலாம் .
" சாிபாதி கொடு" என்றால் , பிாித்த இரண்டு பகுதிகளும் சமமாக இருக்க வேண்டும் .
இறைவன் தன் உடலில் சாிபாதியைப் பெண்ணுக்குக் கொடுத்தான் என்று சொல்ல வேண்டும். பாதியைப் பெண்ணுக்குக் கொடுத்தான் என்று சொல்வது பிழையாகும் .
பகுதி என்ற சொல்லே பாதியானது .
'பகு'என்ற குறிலிணை 'பா'என நீண்டு, அத்துடன் தி சோ்ந்து 'பாதி' ஆனது .
"குறுமையும் நெடுமையும் அளபிற் கோடலின்
தொடா்மொழி எல்லாம் நெட்டெழுத் தியல."
என்ற தொல்காப்பிய விதி இதற்கு இடம் தருகிறது .
தொகுப்பு -- தோப்பு
இயலும் -- ஏலும்
அகத்துக்கு -- ஆத்துக்கு
என்றானதும் இவ்விதிப்படியே .
-ஜெகதீசன்முத்துக்கிருஷ்ணன்
- அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.
- வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.
தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார்.
டஜன் கணக்கில் சடலங்கள் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.
ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது.
உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பிச் வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார். அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார்.
பொதுக் கல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலைத் தருமாறு வேண்டினார். அனுமதி கிடைத்தது.
வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.
உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றாள் அந்த வீரரின் மனைவி.
இந்த விபத்து நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி கர்ப்பமுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்கு பெயர் சூட்டினர். பெயர் என்ன தெரியுமா..?
விளாடிமிர் புதின். அவர்தான் ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி.
(ஹிலாரி கிளின்டன் தனது "Hard Choices" என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்)
-பாலாஜி ஸ்ரீனிவாசன்
- தினமும் ஒவ்வொரு நேரமும் நீங்கள் அனுபவிக்கும் சுகங்களுக்கு இறைவனிடம் நன்றி சொல்லுங்கள்!
- பிறகு கவலை ஏக்கமெல்லாம் காணாமல் போகும்..
எப்போதும் ஏதோ ஒரு கவலை உங்களை வாட்டுகிறதா.. கிடைக்காத ஒன்றை ஏங்கி கவலை கொள்கிறிர்களா இந்த பதிவு உங்களுக்காகதான்...
தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு நாட்களாக சிறுநீர் வெறியேற்றும் உணர்வு இருந்தும் வெளியேற்ற முடியாமல் அவதிபடுபவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள்... கை கால்கள் ஊனமாக நடக்க முடியாமல், சாப்பிட முடியாமல், பார்வை தெரியாமல் காது கேளாமல் கஸ்டபடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்..
உங்களுக்கு கண்கள் நன்றாக தெரிகிறதா? சுகமாக சிறுநீர் கழிக்கிறிர்களா? நடக்க ஒட முடிகிறதா? கைகளை பயன்படுத்த முடிகிறதா.. இந்த பலன்களுக்கெல்லாம் தினமும் இறைவனுக்கு நன்றி சொல்கிறிர்களா? நன்றி சொல்லவில்லை என்றால் ஏன் நன்றி மறந்தீர்கள் என சிந்தித்ததுண்டா?
தினமும் ஒவ்வொரு நேரமும் நீங்கள் அனுபவிக்கும் சுகங்களுக்கு இறைவனிடம் நன்றி சொல்லுங்கள்!
இல்லாததை நினைத்து ஏங்குவதும் நடந்ததை நினைத்து புலம்புவதும் இறை செயல்பாடுகளை எதிர்ப்பதற்கு சமமாகும்.. இறை செயலை எதிர்ப்பது 'தான்'என்ற அகங்காரத்திற்க்கு வழிவகுக்கும்.. அகங்காரமே உங்களை கவலையில் தள்ளி மன சோர்வை தரும்..
சுகமாக சுவாசிப்பதற்கும், உண்ணும் உணவுக்கும், சிரமமில்லாமல் சிறுநீர் கழிப்பதற்க்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி நேரங்களையும் நாட்களையும் கடந்து போங்கள். பிறகு கவலை ஏக்கமெல்லாம் காணாமல் போகும்..
-ரியாஸ்
- துளசிசெடியை பற்றி நமக்கு தெரியாத மகத்துவமே கிடையாது.
- நம்முடைய மனதை ஒரு நிலைப்படுத்தி, துளசிச் செடியை 15 வினாடிகள் பார்க்க வேண்டும்.
கணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. அப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம் நிச்சயம் வெற்றிதான். வீட்டில் இருக்கும் மனைவியே மகாலட்சுமியின் அம்சம். தினந்தோறும் அலுவலகத்திற்கு செல்லும் கணவராக இருந்தாலும் கூட, அவரின் அலுவலக பணிகள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், சுமூகமாக செல்வதற்கு, மனைவி வழி அனுப்பி வைப்பது சிறப்பு. மனைவியின் முகத்தை பார்த்து விட்டு சென்றால், கட்டாயம் அதிர்ஷ்டம் தான்.
ஒரு குடும்பமானது மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருக்கும் பட்சத்தில், அக்கம்பக்கம் இருப்பவர்களின் கண்திருஷ்டி, கட்டாயம் படாமல் இருக்காது.
துளசிசெடியை பற்றி நமக்கு தெரியாத மகத்துவமே கிடையாது. ஆனால், அந்த துளசி செடிக்கு இப்படி ஒரு அபூர்வ சக்தி இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நாம் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்பாக, நம்முடைய மனதை ஒரு நிலைப்படுத்தி, துளசிச் செடியை 15 வினாடிகள் பார்க்க வேண்டும். அதாவது துளசிச் செடியை அந்த பசுமை நிறத்தை, அழகான தோற்றத்தை உங்கள் மனதிற்குள் உள்வாங்கிக் கொண்டு, கண்களை மூடி ஒரு நிமிடம் துளசி தேவியை வேண்டி கொண்டு, வீட்டில் இருந்து செல்லும் பட்சத்தில், உங்களுக்கு ஏற்படும் எப்படிப்பட்ட சகுன தோஷமாக இருந்தாலும் சரி, யாருடைய பெரும் மூச்சாக இருந்தாலும் சரி, கெட்ட எண்ணமாக இருந்தாலும் சரி, அந்த தோஷம் உங்களையும் உங்களது வீட்டையும் தாக்கவே தாக்காது என்று சொல்லப்பட்டுள்ளது.
இது ஒரு சுலபமான முறை தான். ஆனால், உங்களுடைய வீட்டில் துளசிச் செடி, ஒரு சிறிய தொட்டியிலாவது வைத்து, நீங்கள் பராமரிக்க வேண்டியது அவசியம். உங்களால் முடியும் பட்சத்தில் இதை பின்பற்றிப் பாருங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் வெகுவாக குறைவதை உங்களால் உணர முடியும். உங்களுடைய வீட்டில் இருக்கும் ஆணுடைய வெற்றியாக இருந்தாலும், பெண்ணுடைய வெற்றியாக இருந்தாலும் எந்த விதத்திலும் தடைபடாது...
-சிவசங்கர்
- உலகில் வாழ்க்கை செலவு அதிகமான முதல் 10 நகரங்கள்.
- உலகில் வாழ்க்கை செலவு மிகவும் குறைந்த முதல் 10 நகரங்கள்.
உலகில் வாழ்க்கை செலவு அதிகமான முதல் 10 நகரங்கள்:
1. சிங்கப்பூர்
2. சூரிச், சுவிட்சர்லாந்து
3. ஜெனீவா, சுவிட்சர்லாந்து
4. நியூயார்க், அமெரிக்கா
5. ஹாங்காங்
6. லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா
7. பாரிஸ், பிரான்ஸ்
8. கோபென்ஹேகன், டென்மார்க்
9. டெல் அவிவ், இஸ்ரேல்
10. சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா
உலகில் வாழ்க்கை செலவு மிகவும் குறைந்த முதல் 10 நகரங்கள்:

1. டமாஸ்கஸ், சிரியா
2. தெஹ்ரான், ஈரான்
3. திரிபோலி, லிபியா
4. கராச்சி, பாகிஸ்தான்
5. தாஷ்கன்ட், உஸ்பெகிஸ்தான்
6. டுனிஸ், டுனிசியா
7. லுசாகா, ஜாம்பியா
8. அகமதாபாத், இந்தியா
9. லாகோஸ், நைஜீரியா
10. சென்னை, இந்தியா
-ரவிசந்திரன்
- ஒரு நாள், தந்தையிடமிருந்து மகனுக்கு அழைப்புத் தகவல் வந்து சேர்ந்தது.
- ஆலயத்திலிருந்து வீட்டுக்கு வந்தார் மல்லையதாசரின் மகன்.
மல்லையதாசர் என்பவர் தன் மகனிடம்..., நீ வீணை கற்றுக் கொள்ளுவதற்காக வரதாச்சாரியாரிடம் சென்று விண்ணப்பமும் செய்து சம்மதமும் வாங்கி விட்டேன், நீ உடனே மதராஸ்- க்கு புறப்படு என்றார்.
வீணை கற்றுக் கொள்ள எனக்கு ஆசை இல்லையே! என தந்தையிடம் மகன் கூறினான்.
நீண்ட நேரத்திற்குப் பின்பு, தந்தையின் வற்புறுத்தலுக்காகவும், தந்தை சொல் மீறுதல் கூடாது என்பதற்காகவும் வீணை கற்றுக் கொள்ள இசைந்து புறப்பட்டார்.
வரதாச்சாரிடம் வீணை கற்கும் வகுப்பில் சேர்ந்ததும், வீணைக்கலையின் மீது ஆர்வம் மேம்பட்டது, மூன்று வருடங்களாகத் திறம்பட கற்றார், குரு நடத்தைக்கு சிறப்பு செய்தும் வந்தார்.
ஒரு நாள், தந்தையிடமிருந்து மகனுக்கு அழைப்புத் தகவல் வந்து சேர்ந்தது.
அத்தகவலில், நீ வீணை கற்ற வரை போதும்!, நீ ஊருக்கு புறப்பட்டு வந்து விடு! என கடிதத்தில் எழுதி இருந்தது.
மறுபடி இங்கிருந்து தந்தைக்கு கடிதம் எழுதினான் அதில், குருவுக்கு காணிக்கை அளிக்க வேண்டும். அதற்கானதை எனக்கு அனுப்பி வையுங்கள், என்று எழுதினான்.
மல்லையதாசரோ வசதியானவரும் கிடையாது. எனவே எப்போதோ தனக்கு அன்பளிப்பாக கிடைத்த, இரண்டு எட்டு முழ வேட்டிகளை அனுப்பி வைத்து, இதை குருவுக்கு காணிக்கையாக கொடுத்து விட்டு ஊர் திரும்பு என கடிதத்தோடு வேட்டியையும் மகனுக்கு அனுப்பி வைத்தார்.
இரண்டு எட்டு முழ வேட்டிகளைக் கண்டதும், இந்த இரண்டு வேட்டிகளையா குருவுக்கு காணிக்கையாக கொடுப்பது? என்று அவர் மனதுக்கு ஏதோ தோணிவிட்டது.
இதை நினைந்து நினைந்து, அன்று இரவு அவருக்குத் தூக்கமே வரவில்லை,
பொழுது விடிந்தது, இவர் தங்கியிருந்த வீட்டுக்கு எதிரிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று, கைதொழுது கண்ணீர் விட்டு அழுதார் முருகனிடம்.
ஞானபண்டிதா, குமரா, முருகா, வேலவா, கந்தா! என் குருவுக்கு நல்லதொரு காணிக்கையை செலுத்த மனம் நினைகிறது, நீ திருவருள் புரியமாட்டாயா? என வேண்டினார்.
நல்லாளுமை குணங்களுக்கு, முருகன் அருளாளுமை இல்லாதா போகும்!, அற்புதத்தை அருளிக் கொடுத்துவிட முனைந்தான் முருகன்.
ஆலயத்திலிருந்து வீட்டுக்கு வந்தார் மல்லையதாசரின் மகன்.
அப்போது, வீட்டு வாசல்படியில் நான்கு பேர்கள் அமர்ந்திருந்தனர்.
தாங்கள் யார்? தங்களுக்கு என்ன வேண்டும் என வினவினார்.
வந்தவர்கள்,... உங்களது சொற்பொழிவுப் புலமையை கேள்விப் பட்டிருக்கிறோம், இப்போது புரவாசைக்கத்திற்கு வந்து தாங்கள் சொற்பொழிவு ஆற்ற வேண்டும், அதற்காக அழைப்பு விடுக்க வந்தோம் என்றனர்.
புரவாசைவாக்கம் சென்று சொற்பொழிவு புலமையை சிறப்புற செய்தார்.
சொற்பொழிவுக்கு சன்மானமாக தருவதாக சொன்ன நாற்பது ரூபாயை தாம்பாளத்தில் வைத்து ஏந்தி அளித்தார்கள்.
1909-ல், - இது பெரிய தொகை.
அவர் மனம் துள்ளியது!, எதற்காக?, குரு காணிக்கை செலுத்தப் போகிறோம் என்ற சந்தோஷத்தை நினைத்தே துள்ளியது.
இந்த சந்தோஷத்தை விளைய அருளிய முருகப் பெருமானை, மீண்டும் ஒரு முறை கோவிலுக்குச் சென்று விழுந்தெழுந்து வணங்கித் தாழ்பணிந்தார்.
நாற்பது ரூபாய் பணத்துடன், மதராஸில் அப்போதிருந்த சைனா பஜார் இருக்கும் இடத்திற்கு பேருந்தில் சென்றார்.
1909-இல் ஒருபவுன் பொன்னின் விலை பதின்மூன்று ரூபாய், ஐம்பது பைசா.
குரு காணிக்கை செலுத்துவதற்காக, இரண்டரை பவுனில் ஒரு சங்கிலியும், அரை பவுனில் ஒரு டாலரும் வாங்கி மொத்த நாற்பது ரூபாயையும் செலவழித்து எடுத்து வந்தார்.
ஏற்கனவே இவரின் தாய்மாமனார் இவரை பார்க்க வந்திருந்த சமயத்தில், அவர் கொடுத்த, மூன்று ரூபாயை செலவழிக்காமல் பணத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
அதைக் கொண்டு, முந்திரி, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு முதலியவைகளை வாங்கிக் கொண்டார்.
குருநாதர் இல்லம் சென்று, குருவிடம் முறையாக காணிக்கையை கையில் கொடுத்து...
அடியேன் அளிக்கும் இக்காணிக்கையை அன்புடன் ஏற்றுக் கொள்ளுங்கள் எனச்சொல்லி, குருவின் பாதாச்சாரங்களில் விழுந்தார்.
குருவும் அன்பொழுகிய கண்ணீரால், உன் உத்தமமான குணங்களுக்கு, உன் தெய்வம் உனக்கு காலமுழுவதும் துணையிருக்கும் என ஆசீர்வாதம் செய்தார்.
அவரளித்த ஆசீர்வாதமே இவர் வாழ்நாள் முழுமைக்கும், முருகப்பெருமான் துணையாக இருந்து வந்தான்.
அந்த ஆசீர்வாதத்தைப் பெற்ற மகான் நம், திருமுருக கிருபானந்த வாரியார் ஆவார்.
-துலாக்கோல் சோம. நடராஜன்
- முட்டையிலிருந்து உருவானவை பறவை, ஊர்வன இனங்கள் போன்றனவாகும்,
- தாயின் கர்ப்பப்பையில் இருந்து உருவாகுது.
நால்வகை யோனி என்பது,
1) விதை வித்திலிருந்து உருவாவது..
2) முட்டையில் இருந்து உருவாவது..
3) வியர்வை மற்றும் கிருமிகளில் இருந்து உருவாவது..
4) தாயின் கர்ப்பப்பையில் இருந்து உருவாவது.
விதை வித்திலிருந்து உருவானவை தாவர ஜந்துக்களாகவும்,
முட்டையிலிருந்து உருவானவை பறவை, ஊர்வன இனங்கள் மற்றும் ஆமை மீன் போன்றனவாகவும்,
வியர்வை கிருமியில் இருந்து உருவாவது, பாக்டீரியா, வைரஸ், பங்கஸ் போன்றவாகவும்,
தாயின் கருப்பையில் உருவாவது மனிதர்கள் மற்றும் மிருகங்கள் போன்றனவாகும்.
இந்த நால்வகை யோனிகளை கடந்து ஐந்தாவது யோனியில் எவன் பிறப்பானோ அவனே தான் சித்த நிலையை அடைகிறான்.
அந்த ஐந்தாவது யோனியை பற்றி காகபுஜண்டர் பெருமான் கூறிய ரகசியம் இது.... எவன் ஒருவன் "தன் யோக பலத்தினால் அண்ணாமலைக்கு நேராக உண்ணா முலையை பெற்றிருக்கிறானோ" அதாவது அண்ணாக்கு நேர் எதிர் உண்ணாக்கில் அமுது சுரக்கும் உண்ணாமுலையை, கொண்டிருக்கிறானோ, அவனது மேல் திரை கிழிந்த உடன், அவன் உட்சுவாசம் கொண்டவனாக மாறுகிறான். அவனே ஐந்தாவது யோனி பிறப்பு கொண்டவனாகிறான்.
குண்டலினி கிளம்பி மேல் எழும்பி ஆதார சக்கரங்களை கடந்து சகஸ்ராரம் சென்றடையும் போது,அவனின் ஆன்மதிரை விலகுகிறது. உட் சுவாசம் தொடங்குகிறது..புது பிறவி கிடைக்கிறது.. அதாவது புது யோனியில் பிறந்தவன் ஆகிறான்.
- சிவசங்கர்
- பெரிய அழகிய வீடு ஒன்றை கட்டி...அதிலுள்ள குதிரை லாயத்தில் குதிரைகளை கட்டி வைப்பேன்.
- என் மனைவியும் என் குழந்தையும் விளையாடுவதை பார்த்து ரசிப்பேன்.
அந்த ஏழை விவசாயி தன் வீட்டில் கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டு மேலே தொங்கி கொண்டிருக்கும் தன் கஞ்சி கலையத்தை பார்த்துக் கொண்டே..
ஒரு நாள்... இந்த ஊரில் கடுமையான பஞ்சம் வரும். அப்போது, இந்த கஞ்சியை நல்ல விலைக்கு விற்பேன்..
கஞ்சி விற்ற காசில் கோழிகள் வாங்கி வளர்ப்பேன்..
சில மாதங்களில் கோழிகள் நிறைய பெருகியவுடன்... கோழிகளை விற்று ஆடுகள் வாங்குவேன்...
ஆடுகள் பெருகியவுடன்... ஆடுகளை விற்று மாடுகள் வாங்குவேன்...
மாடுகளை பெருகியவுடன்... மாடுகளை விற்று குதிரைகள் வாங்குவேன்...
பிறகு, பெரிய அழகிய வீடு ஒன்றை கட்டி...அதிலுள்ள குதிரை லாயத்தில் குதிரைகளை கட்டி வைப்பேன்...
ஊரில் உள்ள மிகப் பெரிய செல்வந்தர்... தன் மகளை எனக்கு மணமுடித்து வைப்பார்.
எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும்...
அவனுக்கு ராஜா என்று பெயர் வைப்பேன்...
மாடியிலிருந்து... என் மனைவியும் என் குழந்தையும் விளையாடுவதை பார்த்து ரசிப்பேன்..
அப்போது அவன் சேட்டை செய்வான்..
பிறகு கீழே சென்று அவளை பார்த்து...
"ஏய்..! ராஜாவை கூட்டிட்டு வீட்டுகுள்ள போ... என்று...கம்பால் ஓங்கி அடிப்பேன்.." என்று அடித்தான்...
அடித்தவுடன்...கஞ்சிகலயம் உடைந்து அவன் முகத்தில் கொட்டியது ..
வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பாருங்கள்...
மனதின் மாறுபாடுகளில் "கற்பனை"யும் ஒன்று.
-ஓஷோ.
- வாழ்த்தின் மூலம் தேவையான நன்மைகளும் கிட்டும்.
- மனவளம் பெருகுவது நிச்சயம்.
வாழ்த்து எல்லா மந்திரங்கட்கும் மேலான திருமந்திரமாகும். ஒருவரை நாம் வாழ்த்தும் போது அந்த உயிருக்கும் நம் உயிருக்கும் ஒரு உயிர்த் தொடர்பு ஏற்பட்டு வாழ்த்து அதன் மூலம் பாய்ந்து வேலை செய்யும். இந்த வாழ்த்து பேரறிவில் பதிவாகி அதன் மூலம் அடி மனதிற்கும் பரவி நாளாக நாளாக நட்புணர்ச்சி வளர உதவும். வெறுப்புணர்ச்சி தானே மறைந்துவிடும்.
ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் ஒரு மகனைத் தந்தை தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால் இருவருக்குமிடையேயுள்ள உயிர்த் தொடர் மூலம் அவ்வாழ்த்துப் பரவி மகனுடைய மூளையில் பதிந்து அவனைச் சிறுகச் சிறுகத் திருத்தி தகப்பன் விருப்பப்படி நடக்கும்படி செய்துவிடும். கணவன் மனைவியிடையேயும் இப்படித்தான். இது நான் அனுபவமாக பல குடும்பங்களில் கண்ட உண்மையாகும்.
வாழ்த்தின் மூலம் தேவையான நன்மைகளும் கிட்டும். ஆதலால்தான் கடவுளைக் கூட வாழ்த்தும் பக்தர்களையும் பக்திப்பாடல்களையும் நாம் பார்க்கிறோம். கடவுளை வாழ்த்துவதன் மூலம் எல்லோரையும் வாழ்த்தும் நற்பழக்கத்தை மனிதன் ஏற்படுத்திக் கொண்டான். இதனால் மனவளம் பெருகுவது நிச்சயம்.
- வேதாத்திரி மகரிஷி.
- தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
- சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. ஆனால் வகுப்பு ஆசிரியருக்கு வேண்டுகோள் விடுத்து அவர் ஓர் கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டுள்ள சிலவற்றை பார்ப்போம்..
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இப்படி போகிறது அந்த கடிதம்..
இதை எழுதிய தந்தை யார் தெரியுமா..
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் தான்!
- நீங்கள் புதியதாக கட்டிய வீட்டிற்கு சென்றாலும் சரி.. வாடகை வீட்டிற்கு சென்றாலும் சரி.. அந்த வீட்டில் முதன்முதலாக பாலை தான் காய்ச்ச வேண்டும்.
- பசுமாட்டில் இருந்து கறக்கப்பட்ட பாலை காய்ச்சினால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
புதிய வீட்டிற்கு குடி செல்லும் முன் பால் காய்ச்சுவது ஏன்?
பொதுவாக நாம் புதியதாக ஒரு வீட்டிற்கு குடி செல்லும்போது முதலில் பால் காய்ச்சுவோம். பின்பு தான் மற்ற பொருட்களை வீட்டிற்குள் கொண்டு செல்வோம்.
புதிய பாத்திரம் வாங்கி, அதற்கு பூ, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து, அதில் பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கும் பொழுது இருகரங்களையும் கூப்பி கடவுளை வணங்க வேண்டும். பின் அந்த பாலை, சாமி படத்தின் முன்பாக வைத்து பூஜை பொருட்களுடன் நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.
நீங்கள் புதியதாக கட்டிய வீட்டிற்கு சென்றாலும் சரி.. வாடகை வீட்டிற்கு சென்றாலும் சரி.. அந்த வீட்டில் முதன்முதலாக பாலை தான் காய்ச்ச வேண்டும். அதிலும் பசுமாட்டு பாலை காய்ச்சினால் சிறந்தது என்று கூறுவார்கள்.
ஏனெனில், முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்கின்ற பசுமாட்டில் இருந்து கறக்கப்பட்ட பாலை காய்ச்சினால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். அதுவே காலப்போக்கில் பாக்கெட் பாலை காய்ச்சும் நிலைக்கு வந்துவிட்டது.
லட்சுமி வாசம் செய்யும் பசுமாட்டில் இருந்து கறந்த பாலை கொண்டு, புது வீட்டில் பால் காய்ச்சும் பட்சத்தில், அந்த வீட்டில் இருக்கக்கூடிய துர்தேவதைகள் கூட நல்ல தேவதைகளாக மாறிவிடுவார்கள். இதற்காக தான் முதலில் பாலை காய்ச்ச வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
- சுசிலா ரெங்கநாதன்






