என் மலர்tooltip icon

    கதம்பம்

    குரு காணிக்கை
    X

    குரு காணிக்கை

    • ஒரு நாள், தந்தையிடமிருந்து மகனுக்கு அழைப்புத் தகவல் வந்து சேர்ந்தது.
    • ஆலயத்திலிருந்து வீட்டுக்கு வந்தார் மல்லையதாசரின் மகன்.

    மல்லையதாசர் என்பவர் தன் மகனிடம்..., நீ வீணை கற்றுக் கொள்ளுவதற்காக வரதாச்சாரியாரிடம் சென்று விண்ணப்பமும் செய்து சம்மதமும் வாங்கி விட்டேன், நீ உடனே மதராஸ்- க்கு புறப்படு என்றார்.

    வீணை கற்றுக் கொள்ள எனக்கு ஆசை இல்லையே! என தந்தையிடம் மகன் கூறினான்.

    நீண்ட நேரத்திற்குப் பின்பு, தந்தையின் வற்புறுத்தலுக்காகவும், தந்தை சொல் மீறுதல் கூடாது என்பதற்காகவும் வீணை கற்றுக் கொள்ள இசைந்து புறப்பட்டார்.

    வரதாச்சாரிடம் வீணை கற்கும் வகுப்பில் சேர்ந்ததும், வீணைக்கலையின் மீது ஆர்வம் மேம்பட்டது, மூன்று வருடங்களாகத் திறம்பட கற்றார், குரு நடத்தைக்கு சிறப்பு செய்தும் வந்தார்.

    ஒரு நாள், தந்தையிடமிருந்து மகனுக்கு அழைப்புத் தகவல் வந்து சேர்ந்தது.

    அத்தகவலில், நீ வீணை கற்ற வரை போதும்!, நீ ஊருக்கு புறப்பட்டு வந்து விடு! என கடிதத்தில் எழுதி இருந்தது.

    மறுபடி இங்கிருந்து தந்தைக்கு கடிதம் எழுதினான் அதில், குருவுக்கு காணிக்கை அளிக்க வேண்டும். அதற்கானதை எனக்கு அனுப்பி வையுங்கள், என்று எழுதினான்.

    மல்லையதாசரோ வசதியானவரும் கிடையாது. எனவே எப்போதோ தனக்கு அன்பளிப்பாக கிடைத்த, இரண்டு எட்டு முழ வேட்டிகளை அனுப்பி வைத்து, இதை குருவுக்கு காணிக்கையாக கொடுத்து விட்டு ஊர் திரும்பு என கடிதத்தோடு வேட்டியையும் மகனுக்கு அனுப்பி வைத்தார்.

    இரண்டு எட்டு முழ வேட்டிகளைக் கண்டதும், இந்த இரண்டு வேட்டிகளையா குருவுக்கு காணிக்கையாக கொடுப்பது? என்று அவர் மனதுக்கு ஏதோ தோணிவிட்டது.

    இதை நினைந்து நினைந்து, அன்று இரவு அவருக்குத் தூக்கமே வரவில்லை,

    பொழுது விடிந்தது, இவர் தங்கியிருந்த வீட்டுக்கு எதிரிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று, கைதொழுது கண்ணீர் விட்டு அழுதார் முருகனிடம்.

    ஞானபண்டிதா, குமரா, முருகா, வேலவா, கந்தா! என் குருவுக்கு நல்லதொரு காணிக்கையை செலுத்த மனம் நினைகிறது, நீ திருவருள் புரியமாட்டாயா? என வேண்டினார்.

    நல்லாளுமை குணங்களுக்கு, முருகன் அருளாளுமை இல்லாதா போகும்!, அற்புதத்தை அருளிக் கொடுத்துவிட முனைந்தான் முருகன்.

    ஆலயத்திலிருந்து வீட்டுக்கு வந்தார் மல்லையதாசரின் மகன்.

    அப்போது, வீட்டு வாசல்படியில் நான்கு பேர்கள் அமர்ந்திருந்தனர்.

    தாங்கள் யார்? தங்களுக்கு என்ன வேண்டும் என வினவினார்.

    வந்தவர்கள்,... உங்களது சொற்பொழிவுப் புலமையை கேள்விப் பட்டிருக்கிறோம், இப்போது புரவாசைக்கத்திற்கு வந்து தாங்கள் சொற்பொழிவு ஆற்ற வேண்டும், அதற்காக அழைப்பு விடுக்க வந்தோம் என்றனர்.

    புரவாசைவாக்கம் சென்று சொற்பொழிவு புலமையை சிறப்புற செய்தார்.

    சொற்பொழிவுக்கு சன்மானமாக தருவதாக சொன்ன நாற்பது ரூபாயை தாம்பாளத்தில் வைத்து ஏந்தி அளித்தார்கள்.

    1909-ல், - இது பெரிய தொகை.

    அவர் மனம் துள்ளியது!, எதற்காக?, குரு காணிக்கை செலுத்தப் போகிறோம் என்ற சந்தோஷத்தை நினைத்தே துள்ளியது.

    இந்த சந்தோஷத்தை விளைய அருளிய முருகப் பெருமானை, மீண்டும் ஒரு முறை கோவிலுக்குச் சென்று விழுந்தெழுந்து வணங்கித் தாழ்பணிந்தார்.

    நாற்பது ரூபாய் பணத்துடன், மதராஸில் அப்போதிருந்த சைனா பஜார் இருக்கும் இடத்திற்கு பேருந்தில் சென்றார்.

    1909-இல் ஒருபவுன் பொன்னின் விலை பதின்மூன்று ரூபாய், ஐம்பது பைசா.

    குரு காணிக்கை செலுத்துவதற்காக, இரண்டரை பவுனில் ஒரு சங்கிலியும், அரை பவுனில் ஒரு டாலரும் வாங்கி மொத்த நாற்பது ரூபாயையும் செலவழித்து எடுத்து வந்தார்.

    ஏற்கனவே இவரின் தாய்மாமனார் இவரை பார்க்க வந்திருந்த சமயத்தில், அவர் கொடுத்த, மூன்று ரூபாயை செலவழிக்காமல் பணத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

    அதைக் கொண்டு, முந்திரி, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு முதலியவைகளை வாங்கிக் கொண்டார்.

    குருநாதர் இல்லம் சென்று, குருவிடம் முறையாக காணிக்கையை கையில் கொடுத்து...

    அடியேன் அளிக்கும் இக்காணிக்கையை அன்புடன் ஏற்றுக் கொள்ளுங்கள் எனச்சொல்லி, குருவின் பாதாச்சாரங்களில் விழுந்தார்.

    குருவும் அன்பொழுகிய கண்ணீரால், உன் உத்தமமான குணங்களுக்கு, உன் தெய்வம் உனக்கு காலமுழுவதும் துணையிருக்கும் என ஆசீர்வாதம் செய்தார்.

    அவரளித்த ஆசீர்வாதமே இவர் வாழ்நாள் முழுமைக்கும், முருகப்பெருமான் துணையாக இருந்து வந்தான்.

    அந்த ஆசீர்வாதத்தைப் பெற்ற மகான் நம், திருமுருக கிருபானந்த வாரியார் ஆவார்.

    -துலாக்கோல் சோம. நடராஜன்

    Next Story
    ×