என் மலர்
கதம்பம்

கவலைக்கு மருந்து
- தினமும் ஒவ்வொரு நேரமும் நீங்கள் அனுபவிக்கும் சுகங்களுக்கு இறைவனிடம் நன்றி சொல்லுங்கள்!
- பிறகு கவலை ஏக்கமெல்லாம் காணாமல் போகும்..
எப்போதும் ஏதோ ஒரு கவலை உங்களை வாட்டுகிறதா.. கிடைக்காத ஒன்றை ஏங்கி கவலை கொள்கிறிர்களா இந்த பதிவு உங்களுக்காகதான்...
தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு நாட்களாக சிறுநீர் வெறியேற்றும் உணர்வு இருந்தும் வெளியேற்ற முடியாமல் அவதிபடுபவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள்... கை கால்கள் ஊனமாக நடக்க முடியாமல், சாப்பிட முடியாமல், பார்வை தெரியாமல் காது கேளாமல் கஸ்டபடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்..
உங்களுக்கு கண்கள் நன்றாக தெரிகிறதா? சுகமாக சிறுநீர் கழிக்கிறிர்களா? நடக்க ஒட முடிகிறதா? கைகளை பயன்படுத்த முடிகிறதா.. இந்த பலன்களுக்கெல்லாம் தினமும் இறைவனுக்கு நன்றி சொல்கிறிர்களா? நன்றி சொல்லவில்லை என்றால் ஏன் நன்றி மறந்தீர்கள் என சிந்தித்ததுண்டா?
தினமும் ஒவ்வொரு நேரமும் நீங்கள் அனுபவிக்கும் சுகங்களுக்கு இறைவனிடம் நன்றி சொல்லுங்கள்!
இல்லாததை நினைத்து ஏங்குவதும் நடந்ததை நினைத்து புலம்புவதும் இறை செயல்பாடுகளை எதிர்ப்பதற்கு சமமாகும்.. இறை செயலை எதிர்ப்பது 'தான்'என்ற அகங்காரத்திற்க்கு வழிவகுக்கும்.. அகங்காரமே உங்களை கவலையில் தள்ளி மன சோர்வை தரும்..
சுகமாக சுவாசிப்பதற்கும், உண்ணும் உணவுக்கும், சிரமமில்லாமல் சிறுநீர் கழிப்பதற்க்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி நேரங்களையும் நாட்களையும் கடந்து போங்கள். பிறகு கவலை ஏக்கமெல்லாம் காணாமல் போகும்..
-ரியாஸ்






