என் மலர்
வழிபாடு

பழனி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து ஆடிப்பாடி வந்த காட்சி.
இன்று மாலை பங்குனி உத்திர தேரோட்டம்: பழனியில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்
பங்குனி தேரோட்டத்தையொட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனியில் தைபூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 12ம் தேதி திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
6ம் நாளான நேற்று மாலை முத்துக்குமாரசாமி, வள்ளிதெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. மாலை 5.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற போது பக்தர்கள் அரோகரா கோஷம் விண் அதிரும் வகையில் இருந்தது.
இரவு 8 மணி அளவில் வெள்ளி தேர் பவணி திருஆவினன்குடி கோவில் தெற்கு வெளிபிரகாரத்தல் நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. இதற்காக காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி, 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், 9 மணிக்கு தந்த பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பகல் 12.30 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4.45 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தலை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.
பங்குனி தேரோட்டத்தையொட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கிரிவீதிகளில் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. தற்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் ஒரே சமயத்தில் பழனியில் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, திருஆவினன்குடி, மலைக்கோவில் மற்றும் பழனி நகர் முழுவதும் பக்தர்கள் வெள்ளம் காணப்பட்டது.
உத்திர திருவிழாவில் முருகனை தரிசித்து செல்வது மனதிற்கு நிம்மதியை அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Next Story