search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவுக்கு 309 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்
    X

    தென்ஆப்பிரிக்காவுக்கு 309 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்

    லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு 309 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 30-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணியின் இமால் உல் ஹக், பஹர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்தில் ஆட்டமிழந்தனர். இமாம் உல் ஹக் 44 ரன்களும், பஹர் ஜமான் 44 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.5 ஓவரில் 81 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. நட்சத்திர வீரர் பாபர் ஆசம் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.



    பாபர் ஆசம் ஆட்டமிழக்கும்போது பாகிஸ்தான் 41.2 ஓவரில் 224 ரன்களே எடுத்திருந்தது. அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பாகிஸ்தான் 300 ரன்னைத் தாண்டியது. அவர் 59 பந்தில் 89 ரன்கள் குவித்து கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்துள்ளது.

    பின்னர் 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×