search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
    X

    உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று நடைபெற்றது. 
    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் பேர்ஸ்டோவ், ஜேம்ஸ் வின்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    வின்ஸ் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பேர்ஸ்டோவ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. பேர்ஸ்டோவ் 99 பந்தில் 90 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். மோர்கன் முதலில் இருந்தே சரவெடியாக வெடித்தார். இதனால் இங்கிலாந்தின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஜோ ரூட் 88 ரன்னிலும், மோர்கன் 71 பந்தில் 4 பவுண்டரி, 17 சிக்சருடன் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்துள்ளது. 

    அதன்பின், 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. குல்பதின் நயீப் 37 ரன்னிலும், ரஹமத் ஷா 46 ரன்னிலும், அஸ்கர் ஆப்கன் 44 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஆப்கானிஸ்தானின் ஹஷ்மத்துல்லா ஷஹிடி ஓரளவு தாக்குப்பிடித்து 76 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 247 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×