என் மலர்
உலகம்

ஆப்கானிஸ்தானின் ஆளும் தாலிபான் அரசை முதல் நாடாக அங்கீகரித்த ரஷியா!
- முந்தைய அரசாங்கத்தின் கொடி அகற்றப்பட்டு தாலிபானின் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.
- இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் ஒரு பெரிய வெற்றி என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கத்தை ரஷியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட தாலிபான் ஆட்சியை எந்த நாடும் இதுவரை அங்கீகரிக்காத நிலையில் முதல் நாடாக ரஷியாவின் அங்கீகரித்துள்ளது சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ குல் ஹசனிடமிருந்து தாலிபான்களால் நியமிக்கப்பட்ட புதிய ஆப்கானிய தூதர் குல் ஹசன் ஹாசன் இதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பெற்றார்.
இது குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. கூடுதலாக, மாஸ்கோவில் உள்ள ஆப்கான் தூதரகத்தில் இருந்து முந்தைய அரசாங்கத்தின் கொடி அகற்றப்பட்டு தாலிபானின் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.
இந்த அங்கீகாரம் இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று நம்புவதாக ரஷியா தெரிவித்துள்ளது.
தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி இது அவர்களின் இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் ஒரு பெரிய வெற்றி என்று கூறினார்.
இதற்கிடையில், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச தரங்களை தாலிபான்கள் பின்பற்ற வேண்டும் என்று உலகம் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, இதுவரை மற்ற எந்த நாடும் அவர்களின் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க முன்வரவில்லை.