என் மலர்tooltip icon

    உலகம்

    காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது: இஸ்ரேல் ராணுவம் தகவல்
    X

    காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது: இஸ்ரேல் ராணுவம் தகவல்

    • டொனால்டு டிரம்ப் 20 அம்ச திட்டங்களை பரிந்துரைத்து போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டார்.
    • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் டிரம்பின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ் அமைப்பு) இடையிலான போர் நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் காசாவில் இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். இதை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக்கொண்டார். ஹமாஸ் விரைவாக இதை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இதனைத்தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அதிகாரிகள் கத்தாரில் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி முதல்கட்டமாக ஹமாஸ் அமைப்பினர், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேற வேண்டும்.

    அதன்படி காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகள் விடுவிப்பார்கள் என நம்பப்படுகிறது. ஹமாஸ் பிடியில் 48 பணயக்கைதிகள் உள்ளனர். இவர்கள் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

    இந்த முதற்கட்ட போர் நிறுத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், காசாவில் போர் நிறுத்தத்திற்கான நம்பிக்கை வலுப்பெறும்.

    Next Story
    ×