என் மலர்tooltip icon

    உலகம்

    Iran School: 175 சிறுமிகள்  உயிரிழப்புக்கு அமெரிக்க ராணுவமே காரணம் -  வெளியான வீடியோ, சாட்டிலைட் ஆதாரம்
    X

    Iran School: 175 சிறுமிகள் உயிரிழப்புக்கு அமெரிக்க ராணுவமே காரணம் - வெளியான வீடியோ, சாட்டிலைட் ஆதாரம்

    • இது ஈரானே செய்த வேலை என்று டிரம்ப் கூறினார்.
    • அமெரிக்காவின் 'டோமாஹாக் ஏவுகணை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது.

    பிப்ரவரி 28 அன்று தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள 'ஷஜாரா தயாபா' பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 175 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

    பள்ளி மீதான தாக்குதல் அமெரிக்க ஏவுகணையால் நடத்தப்பட்டது என்று தகவல் வெளியானது.

    ஆனால் பள்ளியை ஈரான் ராணுவமே தாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது "எங்களிடம் உள்ள ஆதாரங்களின்படி, இது ஈரானே செய்த வேலை. அவர்களின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மிகவும் தரம் குறைந்தவை.

    இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் அவற்றுக்குக் கிடையாது. தவறுதலாக அவர்களின் ஏவுகணையே அந்தப் பள்ளியின் மீது விழுந்திருக்கலாம். நாங்கள் ஒருபோதும் பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்" என்று கூறினார்.

    இந்நிலையில் 175 சிறுமிகள் கொல்லப்பட்ட இந்த தாக்குதலை அமெரிக்க இராணுவமே நடத்தியதற்கான வீடியோ மற்றும் செயற்கைகோள் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

    தாக்குதலுக்கு உள்ளான பள்ளியின் வீடியோ மற்றும் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், இது அமெரிக்காவின் 'டோமாஹாக்' (Tomahawk) குரூஸ் ஏவுகணை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஈரானிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளத்தை இலக்கு வைத்து அமெரிக்கா ஏவுகணையை ஏவியுள்ளது. ஆனால், அந்தத் தளத்திற்கு அருகிலேயே இருந்த பள்ளி கட்டிடம் இந்தத் தாக்குதலில் தரைமட்டமானது.

    USS Abraham Lincoln போர்க்கப்பலில் இருந்து 'டோமாஹாக்' ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிகிறது.

    Next Story
    ×