ஈரானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் - வளைகுடா நாடுகள் பரபரப்பு கூட்டறிக்கை

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் - வளைகுடா நாடுகள் பரபரப்பு கூட்டறிக்கை
Published on

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

மேலும், அந்த நாடுகளின் முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஈரானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று வளைகுடா நாடுகள் பரபரப்பு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி, ஈரான் தாக்கி வருகிறது. எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com