என் மலர்tooltip icon

    பிரான்ஸ்

    • மேலும் 4 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
    • வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரான்சின் மார்சேய் நகரில் நேற்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றியது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அருகில் உள்ள கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

    இன்று மாலை நிலவரப்படி 4 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எரிவாயு கசிவு காரணமாக தீப்பற்றி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 

    • இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
    • 30 கட்டிடங்களில் உள்ள மக்களை வெளியேற்றியதாகவும் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின்தெரிவித்தார்.

    தெற்கு பிரான்சின் மார்சேயில் நேற்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றபோது இடிபாடுகளில் இருந்து கரும்புகைகள் எழுவதை வீடியோக்களில் காட்டுகிறது.

    மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே மூன்றாவது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் சிக்கியிருந்த 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவ இடத்தை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின், அப்பகுதியில் உள்ள 30 கட்டிடங்களில் உள்ள மக்களை வெளியேற்றியதாகவும் தெரிவித்தார்.

    • ஆல்ப்ஸ் மலையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
    • இதில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பாரிஸ்:

    பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவாசிகள் குவிந்திருந்தனர்.

    அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

    பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தெரிவித்துள்ளார்.

    இறந்தவர்கள் விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    • இந்திய வீரர் பிரியான்ஷு டென்மாக்ர் வீரரை வீழ்த்தினார்.
    • இதன்மூலம் அவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ஆர்லீன்ஸ்:

    ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹான்னசனைச் சந்தித்தார்.

    இதில் ரஜாவத் 21-15 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக மேக்னஸ் 2வது செட்டை 21-19 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை பிரியான்ஷு ரஜாவத் 21-16 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • முதல் சுற்றில் 'ஜி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய பெண்கள் அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் மீண்டும் கிர்கிஸ்தானை எதிர்கொண்டது.
    • இந்தியா முந்தைய ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை வென்று இருந்தது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்சில் அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு ஆசிய கண்டத்தில் இருந்து தகுதி பெறும் 2 பெண்கள் கால்பந்து அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்கான ஆசிய பெண்கள் கால்பந்து போட்டி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடந்து வருகிறது.

    இதன் முதல் சுற்றில் 'ஜி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய பெண்கள் அணி நேற்று முன்தினம் இரவு நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் மீண்டும் கிர்கிஸ்தானை எதிர்கொண்டது.

    இதில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை தோற்கடித்தது. இந்திய அணியில் சந்தியா 2 கோலும் (18-வது, 56-வது நிமிடம்), அனுஜ் தமாங் (24-வது நிமிடம்), ரேணு (85-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.

    இந்தியா முந்தைய ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை வென்று இருந்தது. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற இந்திய அணி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

    • இந்திய வீரர் பிரியான்ஷு அயர்லாந்து வீரரை வீழ்த்தினார்.
    • இதன்மூலம் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ஆர்லீன்ஸ்:

    ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், அயர்லாந்து வீரர் நட் நியென்னைச் சந்தித்தார்.

    இதில் ரஜாவத் 21-12, 21-9 என்ற நேர்செட்டில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டு சுமார் 44 நிமிடங்கள் நடைபெற்றது.

    • இந்திய வீரர் பிரியான்ஷு தைவான் வீரரை வீழ்த்தினார்.
    • இதன்மூலம் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆர்லீன்ஸ்:

    ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், தைவான் வீரர் சீ யு ஜென்னை சந்தித்தார்.

    இதில் ரஜாவத் 21-18, 21-18 என்ற நேர்செட்டில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • பாரீஸ் நகர மேயர் அனீ ஹிடால்கோ வாக்கெடுப்பு நடத்தினார்.
    • சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டதில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தடை செய்ய வேண்டும் என வாக்களித்தனர்.

    உலக நாடுகள் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், சுற்றுலாவுக்கு பெயர்போன பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    அங்கு பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக சாலையில் ஆங்காங்கே மின்சார வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். தேவைப்படுபவர்கள் அதனை ஸ்கேன் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இதனை பயன்படுத்த முடியும் என்பதால் அங்கு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே இந்த மின்சார வாகனங்களை தடைசெய்ய வேண்டும் என பலர் குரல் எழுப்பி வந்தனர்.

    இதனையடுத்து பாரீஸ் நகர மேயர் அனீ ஹிடால்கோ வாக்கெடுப்பு நடத்தினார். இதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டதில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தடை செய்ய வேண்டும் என வாக்களித்தனர்.

    இதனால் அந்த நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தனிநபர்கள் தங்களது மின்சார வாகனத்தை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய வீரர் பிரியான்ஷு ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.
    • இதன்மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆர்லீன்ஸ்:

    ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-ம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், ஜப்பான் வீரர் நிஷாமோடோவை சந்தித்தார்.

    இதில் ரஜாவத் 21-8, 21-16 என்ற நேர்செட்டில் வென்று காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.

    • பெண்ணியவாதியும், எழுத்தாளருமான இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார்.
    • அவரின் சம்மதத்தோடு அவரின் புகைப்படத்தை அட்டை படத்தில் போட்டுள்ளது பிளேபாய் பத்திரிகை.

    பாரீஸ் :

    பிரான்சில் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசில் சமூகப் பொருளாதாரம் மற்றும் சங்கங்களுக்கான மந்திரியாக இருந்து வருபவர் மர்லின் சியாப்பா. பெண்ணியவாதியும், எழுத்தாளருமான இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார்.

    அந்த வகையில் தற்போது அவர் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் பிரபல ஆபாச பத்திரிகையான பிளேபாய் பத்திரிகைக்கு பேட்டி அளித்ததோடு மட்டுமல்லாமல் அதன் அட்டை படத்துக்கும் 'போஸ்' கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    வயது வந்தோருக்கான பத்திரிகைக்கு பெண்கள் மற்றும் ஓரின சேர்க்கை உரிமைகள் மற்றும் கருக்கலைப்பு குறித்து 12 பக்கங்களுக்கு பேட்டி அளித்துள்ளார் மர்லின் சியாப்பா. மேலும் அவரின் சம்மதத்தோடு அவரின் புகைப்படத்தை அட்டை படத்தில் போட்டுள்ளது பிளேபாய் பத்திரிகை.

    பொதுவாக அட்டை படத்தில் அறை, குறை ஆடையுடனோ அல்லது ஆடை இன்றியோ பெண்களின் படம் இடம் பெற்றிருக்கும். ஆனால் மர்லின் சியாப்பா முழு ஆடையுடன் அட்டை படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். இருப்பினும் அவரின் இந்த செயல் சக எம்.பி.க்களையும், கட்சியினரையும் எரிச்சலடைய செய்துள்ளது.

    குறிப்பாக பிரான்சின் 2-வது பெண் பிரதமரான எலிசபெத் போர்ன், மர்லின் சியாப்பாவை நேரில் அழைத்து கண்டித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எனினும் தனது செயலை நியாயப்படுத்தியுள்ள மர்லின் சியாப்பா, டுவிட்டரில், "பிரான்சில், பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அது பிற்போக்குவாதிகள் மற்றும் நயவஞ்சகர்களை எரிச்சலூட்டுகிறதா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் பெண்கள் தாங்கள் விரும்புவதைச் செய்யும் உரிமையைப் பாதுகாப்பது அவசியம்" என குறிப்பிட்டுள்ளார்.

    • போராட்டத்துக்கு ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.
    • ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகள், வங்கிகள், துரித உணவகங்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

    பாரீஸ்:

    பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாட்டில் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் வகையில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்து உள்ளன. நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த போராட்டத்துக்கு ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

    இதையடுத்து அவர்கள் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினார்கள்.

    இந்த போராட்டத்தின் போது வன்முறைகளும் வெடித்தன. பாரீசில் நடந்த பேரணியின் போது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு பலகைகள் மற்றும் குப்பை குவியல்களுக்கு தீ வைத்தனர். சாலையோரம் இருந்த பொருட்களுக்கும் தீ வைக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் கறுப்பு உடைகள் அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகள், வங்கிகள், துரித உணவகங்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

    இதில் அதன் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் ஆனது. இதையடுத்து போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது போலீசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசினார்கள். போலீசாருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 123 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். இதனால் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். மேலும் தடியடியும் நடத்தினார்கள். இதனால் போராட்டக் காரர்கள் சிதறி ஓடினார்கள். இது தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டங்களும் நடந்தன. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிவேக ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    நிலைமையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். பிரான்சில் இதுவரை இல்லாத அளவு நடந்த இந்த போராட்டம் அந்நாட்டு அதிபருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரான்சில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்த அரசு முடிவு செய்தது.
    • தலைநகர் பாரீசில் சுமார் 7 ஆயிரம் பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாரீஸ்:

    பிரான்சில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்த அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்தன.

    இதற்கிடையே ஓய்வு வயது 64 ஆக உயர்த்தும் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தாமல் நிறைவேற்ற அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரித்து பேராட்டங்கள் வெடித்தது.

    தலைநகர் பாரீசில் சுமார் 7 ஆயிரம் பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கான்சார்ட் சதுக்கம் அருகே குப்பை உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து எரித்தனர். அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    நேரம் செல்ல செல்ல போராட்டம் தீவிரமடைந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியது.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லாமல் போலீசாருடன் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது.

    வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியதாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரித்தனர். பிரான்சின் மற்ற நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதாவை நிறைவேற்றும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    அதில் இம்மானுவேல் மெக்ரான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று தீவிர வலதுசாரி எதிர்க்கட்சி தலைவர் மரின் லுபென் தெரிவித்துள்ளார்.

    ×