என் மலர்tooltip icon

    உலகம்

    வெளியேற வேண்டாம் - ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல் | #iranwar
    X

    வெளியேற வேண்டாம் - ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல் | #iranwar

    • +98 21 88755102 / +98 9128109115 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
    • அந்தச் சூழலில் தூதரகத்தால் எவ்வித உதவியும் செய்ய இயலாது.

    பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரானும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் அண்டை நாடுகளின் அமெரிக்க தளங்கள் மீதும் இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் ஈரானில் நிலவும் அசாதாரண சூழலால் அங்கு வசிக்கும் இந்தியப் குடிமக்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    தூதரகத்தின் அறிக்கையில், தூதரகத்தின் முறையான அனுமதி அல்லது வழிகாட்டுதல் இல்லாமல் ஈரானின் நில எல்லைகளை நோக்கிப் பயணம் செய்ய வேண்டாம்.

    ஒருவேளை ஈரானை விட்டு வெளியேறி, அண்டை நாடுகளுக்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் போனால், அந்தச் சூழலில் தூதரகத்தால் எவ்வித உதவியும் செய்ய இயலாது.

    அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் தூதரகத்தின் உதவி எண்கள் அல்லது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    +98 912 810 9115, +98 912 810 9102, +98 912 810 9109, +98 9932179359 ஆகிய அவசர உதவி எண்களிலும், indianembassytehran.gov.in என்ற இணையதளத்திலும், cons.tehran@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

    Next Story
    ×