என் மலர்
உலகம்

'அதை செய்யாமல் இருப்பது நல்லது' - ஈரானுக்கு பதில் எச்சரிக்கை விடுக்கும் ட்ரம்ப்!
- ஈரான் தனது ஏவுகணைப் படைகளை முழு வீச்சில் தயார் நிலையில் வைத்துள்ளது.
- இஸ்ரேல் நாடு முழுவதும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சபட்சத் தலைவரான அலி கமேனி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து இந்த செயலுக்கு காரணமானவர்கள் வருந்துவார்கள் என்றும், இந்த "பெரும் குற்றத்திற்கு" வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்தது.
மேலும் ஈரானிய புரட்சிகர காவல் படை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது "மிகவும் அழிவுகரமான தாக்குதல்கள்" நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. ஏற்கனவே வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஈரானின் இந்த எச்சரிக்கைக்கு ட்ரம்ப் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,
"முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான தாக்குதலை மேற்கொள்ளப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் அவ்வாறு செய்யாமல் இருப்பது நல்லது. ஈரான் அவ்வாறு செய்தால், இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பலத்துடன் நாங்கள் அவர்களைத் தாக்குவோம்." என தெரிவித்துள்ளார்.






