என் மலர்
உலகம்

பிரதமர் மோடி ஒரு Phone Call செய்தால் இஸ்ரேல் - ஈரான் போர் நின்றுவிடும் - அமீரக தூதர் | #Iranwar
- ஆபிரகாம் உடன்படிக்கை மூலம் இஸ்ரேலின் கூட்டாளியாகவும் உள்ளது.
- உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தாபா கமேனிக்கு புதின் வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஒரு போன் அழைப்பு செய்தால் ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் நின்றுவிடும் என்று இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் ஹுசைன் ஹசன் மிர்சா கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, "ஈரான் - இஸ்ரேல் மோதலில் பங்கேற்க அமீரகத்திற்கு விருப்பமில்லை. எங்கள் நிலப்பரப்பை ஒருபோதும் எவர் ஒருவரும் தாக்குதலுக்கான தளமாகப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
பிரதமர் மோடி அவர்கள் வளைகுடா நாடுகளின் தலைவர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது.
பிரதமர் மோடி ஈரான் மற்றும் இஸ்ரேல் தலைவர்களுக்குச் செய்யும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும். போரை முடிவுக்குக் கொண்டு வர அவாரால் முடியும்" என்று தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம் அது ஈரானின் அண்டை நாடாகவும், அதே சமயம் 'ஆபிரகாம் உடன்படிக்கை' மூலம் இஸ்ரேலின் கூட்டாளியாகவும் உள்ளது. இது எங்களை ஒரு சிறந்த மத்தியசாதராக மாற்றுகிறது. எங்களால் இரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று மிர்சா மேலும் தெரிவித்தார்.
8 நாட்களுக்கும் மேலாக ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட அமெரிக்க ஆதரவு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானின் ஐநா தூதர் தகவல்படி, ஈரானில் இதுவரை 1,332 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே ஈரானின் புதிய உச்ச தலைவராக தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தாபா கமேனி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய ஈரான் மற்றும் லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது இன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.






