PM Modi: 25 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை - பிரதமர் மோடியின் உழைப்பை வியந்த கனடா பிரதமர்

பிரதமர் மோடியின் உழைப்பையும் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.பொதுமக்களின் தரவுகளை கசியவிடாமல் யு.பி.ஐ.-யை சேவை கிராமப் புறங்களுக்கும் அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.
PM Modi: 25 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை - பிரதமர் மோடியின் உழைப்பை வியந்த கனடா பிரதமர்
Published on

கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அரசு முறை பயணமாக கடந்த 28-ந் தேதி தொடங்கி மார்ச் 2-ந்தேதிவரை இந்தியாவுக்கு வந்திருந்தார். பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர் கல்வி, வர்த்தகம், நிதி, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அங்குள்ள பிரதமர் அந்தோணி அல்பானிசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சிட்னியில் உள்ள ஐயோவி நிறுவனத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடியின் உழைப்பையும் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர், "நான் பார்த்த தலைவர்களிலேயே இந்திய பிரதமர் மோடி, மிகுந்த கவனம் கொண்டவராக உள்ளார். கோடிக்கணக்கான மக்களிடைய முறையான பொருளாதாரத்தை கொண்டு சேர்த்துள்ளார். பொதுமக்களின் தரவுகளை கசியவிடாமல் யு.பி.ஐ.-யை சேவை கிராமப் புறங்களுக்கும் அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

2001-ம் ஆண்டு முதல் பொதுவாழ்க்கையில் கடந்த 25 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை" என்று அவர் புகழாரம் சூட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com