என் மலர்

  செய்திகள்

  கமலா ஹாரிஸ்
  X
  கமலா ஹாரிஸ்

  கொரோனா தடுப்பூசி பாதுகாப்பில் டிரம்பை நம்ப மாட்டேன்- கமலா ஹாரிஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அதிபர் டிரம்பை, கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
  வாஷிங்டன்:

  அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி நடக்கிறது. இதில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் போட்டியிடுகிறார். அதேபோல் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

  அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை அதிபர் தேர்தலுக்கு முன்பாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார். சமீபத்தில் டிரம்ப் கூறும் போது, ‘அமெரிக்கா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது’ என்று தெரிவித்தார்.

  மேலும் தடுப்பூசி வினியோகத்துக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் தயாராக இருக்கும்படி மாகாணங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே 3-ம் கட்ட சோதனைக்கு முன்பே தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாடு அடிப்படையில் அங்கீகாரம் அளிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

  தடுப்பூசி விவகாரத்தில் அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து டிரம்ப் நிபுணர்களின் கருத்தை கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

  தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் மக்களின் நம்பிக்கையை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று டிரம்ப் நம்புகிறார்.

  இந்தநிலையில் தடுப்பூசி விவகாரத்தில் அதிபர் டிரம்பை, கமலாஹாரிஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

  கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த நிபுணர்களின் கருத்தை அடக்குவதில் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதுபோன்று வரும் காலத்தில் தடுப்பூசி விவகாரத்திலும் நிகழக்கூடும்.

  கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்துக்கு முன்பாக கிடைத்தால் அந்த தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் டிரம்பின் வார்த்தையை நான் நம்ப மாட்டேன். நம்பகமான ஒருவர் அதற்காக உறுதி அளித்தால் மட்டுமே நம்புவேன். ஆனால் டிரம்பை நம்ப மாட்டேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×