search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வேயில் கொத்து கொத்தாக உயிர்பலி வாங்கும் காலரா - 49 பேர் பலி
    X

    ஜிம்பாப்வேயில் கொத்து கொத்தாக உயிர்பலி வாங்கும் காலரா - 49 பேர் பலி

    ஜிம்பாப்வே நாட்டில் காலரா நோயின் தாக்கத்தினால் குறுகிய காலகட்டத்தில் 49 பேர் பலியாகியுள்ளனர். #Zimbabwe
    ஹராரே:

    ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் காலரா நோயின் தாக்கத்தினால் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். நோயின் தீவிரத்தினால் இதுவரை 49 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இதையடுத்து, நோய் பரவுவதை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும், நோய் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    மேலும், நோய் பரவுவதற்கு முக்கிய காரணிகளாக இருக்கக்கூடிய சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து தூய்மையாக வைத்துக் கொள்ளவும், கழிவுநீர்குழாய்களை சீரமைக்க மக்கள் முடிந்த அளவு நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. #Zimbabwe 
    Next Story
    ×